சுண்டைக்காய் கூட்டு

தேதி: October 5, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சுண்டைக்காய் - கால் கப்
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
கல் உப்பு - அரை தேக்கரண்டி
துவரம் பருப்பு - 25 கிராம்
கறிவேப்பிலை - 2 கொத்து


 

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும். துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும். வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.
சுண்டைக்காய் கூட்டு செய்முறையை <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ரெசிப்பி. சுண்டங்காயோடு பழப்புளி சேர்ந்தாலே ஒரு தனி சுவை கிடைக்கும்.... இதில் துவரம்பருப்பெல்லாம்... சேர்ந்திருக்கு சுவை சொல்லத்தேவையில்லை என்றே நினைக்கிறேன். நல்ல குறிப்பு. சுண்டங்காயிற்கு பதில் கத்தரிக்காயில் செய்து பார்க்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்