கறிவேப்பிலை சாதம்

தேதி: October 7, 2009

பரிமாறும் அளவு: 3-4

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1) அரிசி - 1 கப்
2) சின்ன வெங்காயம் - 12
3) பூண்டு - 6 பல்லு
4) தக்காளி - 2
5) உப்பு - தேவையான அளவு
6) இலவங்கம் - சிறிது
7) பட்டை - சிறிது
8) எண்ணெய் - சிறிதளவு

அரைக்க:-
-------
1) பூண்டு - 5 பல்லு (எண்ணெயில் வதக்கவும்)
2) கறிவேப்பிலை - 1/4 கப்
3) தேங்காய்த் துருவல் - 2 ஸ்பூன்
4) சிகப்பு மிளகாய் - 5 (தேவைகேற்ப)
5) புளி - சிறு எலுமிச்சை அளவு
6) பெருங்காயம் - 1 சிட்டிகை


 

1 கப் அரிசியில் சாதத்தை உதிரியாக வடித்து அகலத்தட்டில் வைத்து சிறிது நெய் விட்டுப் பிரித்து விடவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி பட்டை, இலவங்கம் போட்டு தாளிக்கவும்.
பின் பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்றாக விழுதாகும் வரை வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசால விழுதையும் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இந்த கலவையில் தேவைக்கேற்ற உப்பையும், சாதத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்.

அலங்கரிக்க வறுத்த முந்திரிப்பருப்பை தூவவும். சூடான சுவையான கறிவேப்பிலை சாதம் தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி சுபா,

இன்று கறிவேப்பிலை சாதம் செய்யலாம் என பல முறை படித்தும் சில சந்தேகங்கள், எப்படியோ தப்பு கணக்கு போட்டு செய்துவிட்டேன்.

ஒரு கப் அரிசி சாதத்திற்கு 10 காய்ந்த மிளகாய் (ஹைத்ராபாத்-ஆந்திரா மாநிலம்) அதிகம் போல் தோன்றியது. அதனால் 3 மிளகாய் போட்டேன். அந்த 6 பல் பூண்டில் என்ன செய்வது என தெரியவில்லை.

ஆனால் சாதம் சூப்பரா வந்தது. மிகவும் நன்றி.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் ஹயிஸ் அண்ணா,

அதான் குறிப்பிலேயே போட்டிருக்கேன் அண்ணா, பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கனும் (நான்காவது பாயின்ட் பாருங்க அண்ணா). காரத்துக்கு மிளகாயின் எண்ணிக்கையை வேணா குறைத்துக்களாம்.

ஹா ஹா ஹா (ஆனால் சாதம் சூப்பரா வந்தது).

நான் என்னை கத்துகுட்டி என சொன்னேன், எனக்கு ஒரு ஆளுக்கு ஒரு வேளைதானே அதனால்தான் காரம் அதிகமோ என பயந்து விட்டேன். உண்மையிலேயே நல்ல சுவை :) இல்லை என்றால் பட்டினியா இல்ல கிடந்து இருப்பேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஜலீலா அவர்கள் தயாரித்த கறிவேப்பிலை சாதத்தின் படம்

<img src="files/pictures/aa361.jpg" alt="picture" />