அழகு பற்றிய சந்தேகமா தோழிகளே? - பகுதி 4.

தோழிகள் அனைவரையும் அழைக்கிறேன், அழகு குறித்து ஏற்படும் உங்களின் சந்தேகங்களை இங்கே எழுப்புமாறு முற்பகுதிகளின் தொடர்ச்சியாய் இந்த இழை.

அனைத்து தோழிகளையும் மற்றும் புதிதாய் இப்பகுதிக்கு வருவோரும் முன் பகுதிகளை பார்வையிட்டு தங்களின் சந்தேகம் முன்பே வினவப்பட்டதா என்றும் அதற்கான தீர்வையும் கண்டு அதில் மீண்டும் சந்தேகமானால் திரும்ப கேட்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தலை முடியும் அதன் பிரச்சனைகளும் பெண்களுக்கு தலையாய பிரச்சனையாக உள்ளது.
அது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...

முடியின் தன்மை:
*******************
தலையில் மட்டுமல்ல உடலில் காணப்படும் அனைத்து முடியுமே ஒரு வகை ப்ரோடீன் வகையால் ஆனது,அதன் பெயர் கேரோட்டீன்.

ஓர் முடிக்கு மூன்று பகுதிகள் உண்டு. வெளிப்புறம் (பெரும் பாலும் பாதிப்புக்குள்ளாகும் பகுதி),நடுப்பகுதி மற்றும் உட்பகுதி.

முடியின் நிறம், உடலில் சுரக்கும் "மெலனின்" என்ற திரவத்தால் அதன் சுரக்கும் அளவை பொறுத்து கருப்பு,பழுப்பு என மாறுபடும்.
மெலனின் முழுமையாக குறைந்துவிடும் பொழுது வயதாகும் பொழுது முடி முழுமையாக வெண்மை நிறமாகிறது.

முடியின் வளர்ச்சி:
*****************
முடியானது தன் முழு நீள வளர்ச்சியை அடைந்தவுடன்(நாம் வெட்டி விடும் பொழுதும்) அதன் வளர்ச்சி முடிவடைந்து கண்டிப்பாக உதிர்ந்து பிறகு அங்கே புது முடி முளைக்கும்.
அதனால் தான் முடி உதிர்வை முழுமையாக குறைக்க முடியாது.தடுக்கவும் முடியாது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என கூறியுள்ளேன்.
ஒரு மனிதனின் தலையில் முக்கால் பங்கு முடிகள் இருக்கும் மீத கால் பகுதி முடிகள்,வளர்ச்சி,உதிர்தல் பணியில் தான் ஈடுபட்டிருக்கும்.

தலையில் முடியின் அளவு மற்றும் உதிர்வு:
***************************
சராசரியாக கணக்கீடுகள் கூறுவது ஒருவரின் தலையில் ஒரு லட்சம் முடிகள் இருக்குமாம்.
இதில் தினமும் ஓர் நாளில் குறைந்த பட்சம் நூறு முடிகள் உதிர்கின்றன.
வெயிலும், வெதர் மாற்றமும் முடி உதிர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முடியில் ஏற்படும் பாதிப்புகள்:
*************************
பொடுகு என்பது புது முடி உருவாகும் பொழுது ஏற்படும் அப்பகுதில் உள்ள இறந்த செல்கள். முடி உதிர்வு தினமும் நடப்பதால் இதுவும் கூடவே இருக்கும்.
மேலும் முடியின் நுனிப்பகுதி வெடிப்பும் முடி ஆரோக்கியமின்றி இருக்கிறதென சொல்கிறது.
முடி மிகவும் soft ஆக இருப்பதும், இடையில் ஒடிந்து விடுவதும் வலிமை குறைவை சொல்கிறது.....

முடியை பாதுகாக்கும் முறைகள்:
****************************
ஒருவரின் உடல் அமைப்பில் ஏற்படும் மாற்றம் தலை முடியில் ஏற்படும். அதனால் உடல் ஆரோக்கியமே மிகவும் முக்கியம்.சத்தான காய்கள், பழங்கள், இறைச்சி வகைகள் சேர்த்துக்கொள்ளல் மிக மிக அவசியம்.
உடலின் தன்மை பொறுத்தே முடியின் தன்மையும் ட்ரை ஹேர், ஆயிலி ஹேர் என்றமைகிறது.தேவையான மற்றும் சரியான முறைகளால் அவற்றை சரி செய்ய முடியும்.

முடி குறித்த சந்தேகம் இருந்தோருக்கு பாதி தீர்ந்து இருக்குமென நினைக்கிறேன்.

அம்மா!!! டீ,காஃபி,கூல்ட்ரிங்க்ஸ்,
ஸ்நாக்ஸ் கொடுக்கும் புண்ணியவதிகள் யாராவது எனக்கும் கொஞ்சம் கொடுங்களேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

உமா
நன்றி பதிலளிதற்கு.
கன்னத்திலிருக்கும் கருமைக்கு ஏற்கனவே வெள்ளரி use பண்ணி இருக்கேன்.(உங்க முன் அத்தியாயங்கள் படித்து).no use .என்னுடைய சருமம் combination skin.

savitha

நன்றி பாப்ஸ் oil இல்லாம்லும்தான்smell வ்ருகிற்து நான்head&shoulder use ப்ண்றேன் அப்பfaceku என்ன fairness cream use ப்ண்ற்து facela unwanted hair how to remove if i use lemon dandruff will reduce pops my husband having some white hair in front shall i apply henna pls tell me how to prepare henna for us

ஹாய் உமா இதுதான் நான் முதல் முறையா உங்க கிட்ட பேசுறது.உங்க குறிப்புகளை ஆரம்பத்தில இருந்து படிச்சிருக்கேன்.நீங்க Retinol-A பற்றி எழுதி இருந்தீங்க.எனக்கும் முகத்தில் பரு வந்த குழிகள்(scars)இருக்கு.நான் gulfல இருக்கேன்.இங்க கடையில கேட்டப்ப Retin-A இருக்குன்னு சொன்னாங்க.ஆனால் இந்த Retin-A manualல (Retin-A is a topical therophy for the treatment of acne vulgaris)அப்படின்னு இருக்கு.இது பருக்களை மட்டும் தான் போக்குமா?பரு வந்த அடையாளங்களை போக்காதா?மேலும் இது யூஸ் பண்ணும் போது எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?இது scars போக்குமா போக்காதா?பிளீஸ் ஹெல்ப்

Hi all,

***சவிதாபிரபு,இதை முன்பே சொல்லனுமில்லையா? ஒகே எவ்வளவு நாளா வெள்ளரி யூஸ் பண்றீங்க? உடனே சேஞ்ச் ஏற்படாது. கொஞ்சம் நாள் குறைந்த பட்சம் ஒன்றில் இருந்து இரண்டு மாதமாவது ஆகும்.

இல்லை உங்களுக்கு வேற ட்ரீட்மென்ட் வேண்டுமா? கெமிக்கல் க்ரீம் வேண்டுமா? என்றும் சொல்லுங்கள்.

***Farvin,எலுமிச்சை யூஸ் பண்ணுங்க பொடுகுக்கு போதும். முகத்தில் உள்ள முடியை போக்க வேக்ஸிங் அல்லது threading தான் செய்யணும்.
ஹென்னா ஹேர் கலரிங் பற்றி முன் பகுதில் சொல்லியிருக்கிறேன் கொஞ்சம் தேடி பாருங்களேன்.!!!

***மல்லிகா, Retin - A என்பது Retinol தான் ஆனால் இது ஒரு தோல் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துவது நல்லது.

அதில் நன்மைகள் இருப்பது போல் தீமைகளும் உண்டு. இது கண்டிப்பாக பருக்களுக்களை குறைக்க உதவும் ஆனால் வேதியியல் மாற்றங்கள் தோலில் எரிச்சலோ, redness கூட ஏற்படுத்தலாம். அதனால் தான் இது முழுமையாக ஒரு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

பின் குறிப்பு:
************
அனைவருக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்லிக்கிறேன். இங்கே உங்களின் முகத்தை நேரில் பார்க்காமல்(தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு), உங்களின் பிரச்சனை என்ன? என்று நீங்கள் முழுமையாக சொன்னால் என்னால் கண்டிப்பாக உதவ முடியும். அது உங்கள் கையில் தான் உள்ளது. அதனால் தான் நான் இங்கே கெமிக்கல் க்ரீமோ,மற்ற கெமிக்கல் பொருட்களையோ பரிந்துரைப்பதில்லை. என்னிடம் நேரில் வருவோரிடம் நான் கிரீம்கள் பரிந்துரைக்க முடியும்.

பல தோல் பிரச்சனைகள் சிறந்த தோல் மருத்துவரால் தான் தீர்க்கப்படும்,அவர்கள் மருத்துவ ரீதியில் ஆராய்ந்து மருந்து கொடுத்தல் நல்லது.

அதேப்போல் ஒருவருக்கு பரிந்துரைக்கப்படும் கெமிக்கல் கிரீம், அதையே மற்றவர் மருத்துவர் ஆலோசனையின்றி பயன்படுத்துவதும் நல்லதன்று.

இது யாரையும் புண்படுத்த கூறவில்லை, ஒரு ஆலோசகராக இங்கே இதை கூற வேண்டியது எனது கடமை.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

உமா ரொம்ப நன்றி உடனே பதிலளித்ததற்கு.நான் முதல் தடவையே உங்க கிட்ட இவ்வளவு சீக்கிரமா உதவியை பெறுவேன்னு நினைக்கவில்லை.1 சின்ன சந்தேகம் கேட்டுக்கிறேன் உமா தவறாக நினைக்க வேண்டாம்.என்னுடைய முகத்தில் பருக்கள் இல்லை.ஆனால் பரு வந்த பிறகு ஏற்பட்ட சின்ன சின்ன குழிகள்(ரொம்ப சின்னது 2 கன்னங்களிலும்)உள்ளது.Retin-A அதை குணமாக்குமா?என்னுடைய ஸ்கின் கம்பைன்(combined (oily, after bath dry))ஸ்கின்.இந்த கிரீம் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றால்.வேறு ஏதாவது டிப்ஸ் சொல்ல முடியுமா?என்னுடைய முகம் கலறாக இருக்கும்.ஆனால் இந்த குழிகள் என்னுடைய முக அழகை கெடுக்கிறது.

மல்லிகா, பிம்பிள்ஸ் வந்த காலத்திலயே அதை கைவைத்து கெடுத்துவிட்டீர்கள். சாதாரணமாக பருக்கள் வந்த பிறகு இருக்கும் காய்ந்த சுவடு கருப்பாகவோ,சிவப்பாகவோ இல்லை சதை பற்று போலோ இருந்தால் எளிதில் நீக்கிவிடலாம். இந்த குழிகளை போக்குவது மிகவும் கடினம்.

முறையான மேக்கப் போட்டு மறைக்க முடியும். அல்லது கெமிக்கல் க்ரீம்(it may be with Zinc and/or Sulpher) ஸ்கின் டாக்டரிடம் கேளுங்கள். அவர் பரிசோதித்து மருந்தளிப்பார்.
Retin - A கண்டிப்பாக பருக்கள் வருவதையும் அதனால் பாதிக்கப்படும் சருமத்தை பாதுகாக்கவும் செய்கிறது.இது பருக்கள் ஏற்படுத்திய குழிகளை போக்காது.

தற்போது பருக்கள் இல்லாமல் குழிகள் போல் மட்டுமிருப்பதால்,

****வாரம் இரண்டு முறை கஸ்தூரி மஞ்சள் தூள் அரை ஸ்பூன் எடுத்து எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் குழிகள் உள்ள இடங்களில் பூசி நன்றாக காய்ந்ததும் இருபது நிமிடம் கழித்து கழுவி விட்டு முகத்தை காட்டன் துணியால் ஒற்றி ஈரத்தை போக்கி விட்டு பன்னீரை முகம் முழுவதும் தடவிக்கொள்ளுங்கள். பின் அரை மணி நேரத்திற்கு மேல் சென்றவுடன் முகத்தை வெது வெதுப்பான நீரில் சோப் எதுவுமில்லாமல் தண்ணீர் மட்டும் கொண்டு கழுவுங்கள்.***

தொடர்ந்து கொஞ்சம் நீண்ட நாட்களுக்கு செய்தால் பருக்கள் இனி வராமலும் வடுக்கள் மறையக்கூடும்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

விளக்கமாக பதிலளித்ததற்கு ரொம்ப நன்றி உமா.நீங்க சொன்ன மாதிரி செய்து பார்க்கிறேன்.பலன் கிடைத்தால் தெரிவிக்கிறேன் மற்ற தோழிகளுக்கும் உபயோகமாக இருக்கும்.

ஹாய் உமா நான் வெயிலில் செல்வ்தால் என் முகம் க்ருத்து போகிற்து அதுக்கு என்னcream use ப்ண்ண்லாம் எனக்கு oily skin அப்புறம் என் முகம் பொலிவு பெற என்ன செய்ய்லாம் கொஞ்ச்ம் சொல்லுங்க்ள் என் girl குழந்தை 3yrs ந்ல்லா நிற்மாக் இருந்தால் இப்போது வெயிலில் schoolசெல்வ்தால் க்ருத்து போயிட்டா what can i use for my baby hair is not growing she is having less hair

ஹாய் உமா நான் வெயிலில் செல்வ்தால் என் முகம் க்ருத்து போகிற்து அதுக்கு என்னcream use ப்ண்ண்லாம் எனக்கு oily skin அப்புறம் என் முகம் பொலிவு பெற என்ன செய்ய்லாம் கொஞ்ச்ம் சொல்லுங்க்ள் என் girl குழந்தை 3yrs ந்ல்லா நிற்மாக் இருந்தால் இப்போது வெயிலில் schoolசெல்வ்தால் க்ருத்து போயிட்டா what can i use for my baby hair is not growing she is having less hair

மேலும் சில பதிவுகள்