தொடர் அரட்டை :) எல்லாரும் வாங்க அரட்டை 97

எல்லாரும் இங்க வந்து அரட்டையை தொடருங்க வாங்க வாங்க என்று உங்களை வரவேற்பது அறுசுவையில் ஒரு உறுப்பினர் :)

லஷ்மீ...நீங்க எப்ப அறுவை இல்லல்ல அறுசுவை:) உறுப்பினர் ஆனிங்க..சொல்லவே இல்ல??
எப்டியோ ஒரு வழியா ஜீனோக்கு மரியாதை குடுத்தத பூசி மெழுகி:) சமாளிப்ஸ் எல்லாம் பண்ணிட்டீங்க..வெரி குட்..மேல வைங்கோ!:)

ஜீனோ த கிரேட்-ஐப் பாத்திட்டீங்களோ..ஓகை..ஜீனோ அழகா இருக்காரா?;) டோராக்காகத் தான் ஜீனோ கடேசி போட்டோல வெயிட் பண்ணிண்டு இருக்கார்! :)
டோரா புஜ்ஜி வந்ததும் ஜீனோ அப்பீட்டு! பெரிய ட்ரிப் போறதுக்கு முந்தி எடுத்த ஸ்னாப் அது!
"என்னைக் கொஞ்சம் மாற்றி,என் நெஞ்சில் உன்னை ஊற்றி...."
"காக்க, காக்க" பாட்டு ஓடிட்டு இருக்கு! கேட்டுதா?:)

சரி, நாளைக்கு வந்து ஜீனோ தன் அறுவையைத் தொடர்வார்..அதுவரைக்கும் அரட்டை அடிக்கும்/படிக்கும் அனைவருக்கும் ஜீனோவின் ஷேக் ஹேண்ட்ஸ் அண்ட் ஹாய்!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் இமா நலமா? மாட்டிவிட்டீங்களா? ஒரே குஷி தானா :-))))))))))))) ம்ம்ம் நான் மாட்டிக்கிலையே ,சந்தனா ரொம்ப நல்லவங்க என்கிட்ட கோபிச்சுகிலையேஏஏஏஏஏஏஏஏ.

சந்தனா நலமா?

வாணி நலமா? குழந்தைகள் நலமா? பெயர் என்ன?

பிரபா நலமா? busyyaa???????????

மகேஸ்யுகா நலமா?நீங்க வரும் போது நான் இல்லை.இட்ஸ் ஒகே உங்க கூட எப்பவும் பழம் தான்.

சுபா நலமா? ஏன் வரவேஇல்லை.மானசா நலமா?

சோனியா நலமா? கத்தார் பக்கம் தானே வாரது. கரீனா யார்?ஒரு தரம் தான் பேசினாங்க பின்னர் காணோம்போய்ட்டார்கள்.

ஜீனோ நலமா? உங்க போட்டோ சூப்பர்.ரொம்ப அழகா இருக்கு.இத்தன நாளா மிஸ் பண்ணிட்டோம்.
டோரா நலமா?என்ன சொல்லாறங்க.

தேன்மொழி,லஷ்மிஷங்கர்,யோகராணி, ஆசியா உமர்,ஸவர்ணா,லாவண்யா,அதிரா,உமா அனைவரும் நலமா?பதில் வேண்டும்.

அன்புடன்,
சுபத்ரா.

with love

ஹாய் இமா நலமா? மாட்டிவிட்டீங்களா? ஒரே குஷி தானா :-))))))))))))) ம்ம்ம் நான் மாட்டிக்கிலையே ,சந்தனா ரொம்ப நல்லவங்க என்கிட்ட கோபிச்சுகிலையேஏஏஏஏஏஏஏஏ.

சந்தனா நலமா?

வாணி நலமா? குழந்தைகள் நலமா? பெயர் என்ன?

பிரபா நலமா? busyyaa???????????

மகேஸ்யுகா நலமா?நீங்க வரும் போது நான் இல்லை.இட்ஸ் ஒகே உங்க கூட எப்பவும் பழம் தான்.

சுபா நலமா? ஏன் வரவேஇல்லை.மானசா நலமா?

சோனியா நலமா? கத்தார் பக்கம் தானே வாரது. கரீனா யார்?ஒரு தரம் தான் பேசினாங்க பின்னர் காணோம்போய்ட்டார்கள்.

ஜீனோ நலமா? உங்க போட்டோ சூப்பர்.ரொம்ப அழகா இருக்கு.இத்தன நாளா மிஸ் பண்ணிட்டோம்.
டோரா நலமா?என்ன சொல்லாறங்க.

தேன்மொழி,லஷ்மிஷங்கர்,யோகராணி,ஆசியா உமர்,ஸவர்ணா,லாவண்யா,அதிரா,உமா அனைவரும் நலமா?பதில் வேண்டும்.

அன்புடன்,
சுபத்ரா.

with love

ஜீனோ , உறுப்பினர் அப்படின்னு டைப் பண்ணும்போது தான் உறுப்பினர் ஆனேன் :)
ஜீனோ எல்லாம் அழகாத்தான் இருக்கார் ஆனா டோரா இதவிட அழகா இருப்பாங்களோ ??
டோரா எங்க காணோம்??அதென்ன ஜீப்ல இருந்தா "காக்க காக்க " படம் பாட்டுதானா
"செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" "முள்ளும் மலரும் " பட பாடல் கேக்காதோ ...........

சுபத்ரா, சந்தனா கோவப்படல அப்படின்னு நினைச்சுட்டு இருக்காதீங்க. எப்ப யார்ட்ட உங்கள அவங்க மாட்டி விடுவாங்க அப்படின்னு அவங்களுக்கே தெரியாது :)
பி.கு சந்தனாக்கிட்ட இத யாரும் சொல்லாதீங்க :)
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

சந்தனா... ah.. my "R" "I" பற்றிக்கதைத்ததுமே நான் ஒரே ஓட்டம்... பார்த்திட்டேன்
இமா... உங்கள் ah..my r மிக அழகு.. நீங்க "ஏங்க வச்சு":) வளர்க்கிறீங்களாமே அவர்களை:) கவனித்தீங்களோ..... ஆமையாரை (ahmy r i) எங்க வச்சிருக்கிறீங்கள்?.
இமா இன்று சுப்பமார்கட் போன இடத்தில் ஒரு அழகான குட்டிப்பூசணியைக் கண்டேன், உங்கள் நினைவு வரவே, உடனே எடுத்து வந்திட்டேன், நன்றாக வந்தால் படம் எடுத்து அனுப்புகிறேன்.

நான் மட்டும்தான் ஜீனோ பற்றிக் கவலைப்படுகிறேன்:), ஏன் ஒருவரும் கவலைப்படவில்லை:)?. வாணி..... ஊர் பெயரோடு இருக்கும் அதிராக்கு மண்டை அடிபட்டுக் குழம்பிவிட்டது, ஊர் பெயரில்லாமல் இருக்கிற ஜீனோபற்றி சந்தேகமே இல்லையோ?:) சரி எனக்கெதுக்கு ஊர்வம்பு:).

///சொல்லவே சொல்லாது!! சொல்லுங்க,சொல்லுங்க!!:):D }///ஜீனோ காதைக் கொண்டுவாங்கோ..... இன்று எதுவும் சொல்வதற்கில்லை:):), இதுக்குமேலும் சொல்லுங்கோ... சொல்லுங்கோ என அடம்பிடித்தால்:) அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் சொல்லிப்போடுவேன்:):)... வேணாம் விட்டுவிடுங்கோ:).

போன அரட்டையில் தேடிய... சுவர்ணா, அம்முலு, மகேஷ்வரி, புதுவரவு தேவகி, அநாமிகா, சோனியா, தவறாமல் எல்லோரையும் தேடும் பிரபாதாமு, இலா, கலா, தேன்மொழி, சுபத்ரா, கவிசிவா, சபீனா, வனிதா, விஜி, ஐஸ்வர்யலஸ்மி, சந்தனா, வின்னி, பொப்ஸுமா, மற்றும் அனைவரும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்... அப்பாடா ஒருமாதிரி வந்த வேலையை முடித்திட்டேன்.... அது...தாஆஆஆஅன் சர்வர் லோட்டை ஏத்திட்டேன்:).

பிகு:
இன்று பி.குறிப்பில்லை இமா, நாளைய பின்குறிப்பில் உங்களுக்கு மபொர சொல்கிறேன்:):). நான் அனுப்பிய "கை" இப்ப கறுத்திருக்கும் இமா... வனிதா அழப்போறா பார்த்திட்டு:).

///அதிரா, எதற்கும் இந்த பேய்/திகில் கதை முடியும் வரை நீங்கள் அறுசுவைப் பக்கம் வராமல் இருப்பது நல்லது.
வாணி/// அதனால்தான் ஸ்ரெயிட்டா அரட்டைக்குள் வந்திட்டேன், அறுசுவைக்குள் போகமாட்டேன் "அது" முடியும்வரை:).

///அதிரா என்ன கண்டுக்காம போறீங்க/// அநாமிகா...எனக்கு சனிமாற்றம் கொஞ்சம் சரியில்லைப்போல:), அதுதான் கண்டாலும் காணாதமாதிரிப் போகச்சொன்னார்கள்:).

என்ன இது அறுசுவை இப்படியாகிவிட்டதே... இன்று... எல்லோரும் வந்து கொஞ்சம் கூட்டிப்பெருக்கி விளக்கேத்திவிடுங்கோ... இருட்டுப்பட்டுவிட்டதெல்லோ:):).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா, ஜீனோ ஒரு குழப்பவாதி. அது ஊர் பெயரைக் கேட்டால் கன்யாகுமரி, காஷ்மீர், கலிஃபோர்னியா என்று ஏதேதோ சொல்லும். இங்கு இருப்பவர்களும் பெரிதாக அதன் கதையை காதில் போட்டு கொள்வதில்லை. நீங்கள் அப்படியா???எவ்வளவு பெரிய ஆள்(ஒரு மாதிரி ஐஸ் வைச்சாச்சு)

அனாமிகா, சந்தனாவா உங்களுக்கு இந்த கூகிள் வேலை சிபாரிசு செய்தது. நல்லாவே வேலை செய்கின்றீர்கள்.
சுபத்ரா, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

சந்தனா யானை((அவ்வளவு ஞாபகசக்தி))
போல எவ்வளவு நாட்களானாலும் மறக்கமாட்டார். ஒரு நாள் எப்படியும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வார். கவனம்!!
வாணி

//ஊர் பெயரில்லாமல் இருக்கிற ஜீனோபற்றி சந்தேகமே இல்லையோ?:)// ஜீனோக்கு யாதும் ஊரே..யாவரும் கேளிர்! மோர் ஓவர், ஜீனோ இஸ் எ வெரி ஹார்ம்லெஸ் க்ரீச்சர் அதிராக்கா! அதான் யாரும் ஜீனோவைப் பாத்து சந்தேகம் படுவதில்ல.

//நான் மட்டும்தான் ஜீனோ பற்றிக் கவலைப்படுகிறேன்:),// இது தேவையில்லாத கவலை..அதை விட்டுப் போட்டு நீங்க அடுத்த தொடர்ல வரப் போற பேய்களைப்:) பற்றி கற்பனை செய்யுங்கோ என்று ஜீனோ பணிவன்புடன் தங்களைக் கேட்டுக் கொல்கிறது! :)

//ஜீனோ காதைக் கொண்டுவாங்கோ..... இன்று எதுவும் சொல்வதற்கில்லை:):)// இட்ஸ் ஓகே அதிராக்கா! இன்னிக்கு நாள் கொஞ்சம் நல்லாயில்லை..அஷ்டமியாய் இருக்கு.. நீங்க நாளைக்குச் சொல்லுங்கோ! [அந்த ம.போ.ர. ஆன்ட்டிக்கு சொல்கையிலே ஜீனோவும் காதைத் தீட்டிக் கேட்டுக் கொள்வார்! :)]

//அதிரா, ஜீனோ ஒரு குழப்பவாதி. அது ஊர் பெயரைக் கேட்டால் கன்யாகுமரி, காஷ்மீர், கலிஃபோர்னியா என்று ஏதேதோ சொல்லும். இங்கு இருப்பவர்களும் பெரிதாக அதன் கதையை காதில் போட்டு கொள்வதில்லை. நீங்கள் அப்படியா???எவ்வளவு பெரிய ஆள்(ஒரு மாதிரி ஐஸ் வைச்சாச்சு)// :( :(

வானதியக்கா, நீங்க அவிங்களுக்கு:) ஐஸ் வையுங்கோ..ஸ்னோ வையுங்கோ,இல்ல க்ளேஷியர் வையுங்கோ..அதுக்காக, ஜீனோ தலைல கொதிக்கும் வெந்நீரைக் கொட்டுதல் தகுமோ? [ ஜீனோவின் பற்களிலே நிரப்பப் பட்ட அடர்வு மிகு சல்ப்யூரிக் அமிலத்தையும்:) மறந்துட்டீங்களோ?? [வவ்..வவ்..வவ்வ்வ் :D]

சேஃப்டி பின் :) குறிப்பு:
அதிராக்கா..உங்கட ஊசிக் குறிப்பு :) ...ஆஹா...ஓஹோ!! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! ஒண்ணொண்ணும் சும்மா நச்சு -நச்சுன்னு குத்துது போங்கோ! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

எனக்கு எப்பவும் சந்தேகம் வருவதிலை:), ஆனால் வந்தால் எப்படியும் துருவி ஆராயாமல் விடுவதில்லை:), இப்ப தெளிவாகிட்டேன்:).

///இது தேவையில்லாத கவலை..அதை விட்டுப் போட்டு /// ஒகே புரியுது:), இனிக் கவலைப்படவில்லை:), ஜீனோ இனி நிம்மதியாக நித்திரை கொள்ளலாம்:).

///கேட்டுக் கொல்கிறது! :)/// இவ்வளவு நாளும் ஜீனோ குரைப்பதைத்தான் கண்டேன்:), இப்போ "கொல்ல"வும் தொடங்கிவிட்டுதோ?:).

///நீங்க நாளைக்குச் சொல்லுங்கோ/// ஒகே எங்கட புதுத்தளம் வருவதுபோல "நாளைக்குச் சொல்கிறேன்"(திகதி சொல்லவில்லைத்தானே):).

///அதிராக்கா..உங்கட ஊசிக் குறிப்பு :) ...ஆஹா...ஓஹோ!! பேஷ்! ரொம்ப நன்னாருக்கு! ஒண்ணொண்ணும் சும்மா நச்சு -நச்சுன்னு குத்துது போங்கோ! :)/// ஜீனோ!!!சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுக்கப்படாது:), அதெல்லாம் குத்துற ஊசியில்லை:),,, எல்லாம் பாசப்பிணைப்புத்தான்:) ஊசியில்லாவிட்டால், இணைக்கமுடியாதே:)(தைக்கமுடியாது). இப்போ புரிகிறதோ ஊசியின் அருமை?:).

பி.கு:
என்ன ஜீனோக்கு எல்லாம் தடுமாறுது?:), அவ வானதி இல்லை வாணி!!!

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மு.கு. ஜீனோ அர்த்த ராத்திரியானாலும் படா ஸ்ரெரியாய்த் தான் இருக்கார்...நீங்க அறுசுவை-யை சரியாப் பாக்கேல்லை என்பது தெரியுது அதிராக்கா..வாணியக்காவின் முழுப் பெயர் "அது":)வாக்கும்! நீங்க அவிங்களைக் கேட்டுப் பாருங்கோ!:)

//இப்ப தெளிவாகிட்டேன்:).// நல்லது அதிராக்கா..இப்படியே:) தெளிவா இருங்கோ!

//ஊசியில்லாவிட்டால், இணைக்கமுடியாதே:)
(தைக்கமுடியாது). இப்போ புரிகிறதோ ஊசியின் அருமை?:).// நன்றாய்...நன்றாய்!!! வெள்ளிடை மலையாய்:) தெள்ளெனப்:) புலனாகிவிட்டது ஜீனோக்கு!

உங்களுக்குத் தெரியுமோ? ஜீனோ மிகவும் சூப்பரா..நல்லா நூல்:) விடுவார்..ஊசியும் நூலுமாய்:), உடன்பிறப்புக்கள் இருவரும் இணைந்து அறுசுவையை தை-தை-தைன்னு:) தைத்துவிடுவோம்..சரியா? :D

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அதிரா, என் உண்மையான பெயர் அது தான். நான் வின்னிக்கு சொன்னபோது ஜீனோக்கும் சொன்னனோ(ஒளிஞ்சிருந்து பார்த்து இருக்கும் என்றே நினைக்கிறேன்) தெரியவில்லை. வாணி என்பது எனது செல்லப் பெயர்.
vaany

மேலும் சில பதிவுகள்