பேசன் கீ லட்டு ( கடலைமாவு நெய் உருண்டை)

தேதி: October 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

அறுசுவையில் உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் மற்றும் அழகு குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பாப்ஸ் என்கிற <b> திருமதி. உமா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள நெய் உருண்டை. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

 

லட்டு செய்யவதற்காக சற்று கொரகொரப்பாக அரைக்கப்பட்ட கடலைமாவு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 1 1/2 கப்
நெய் - ஒரு கப்
ஏலக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி
முந்திரி - ஏழு
பாதாம் - ஐந்து.
உலர்ந்த திராட்சை - பத்து


 

சாதாரண நைஸ் கடலைமாவு பயன்படுத்தி உருண்டை செய்பவர்கள், சாதாரண கடலை மாவு ஒன்றரை கப்பும் அதனுடன் அரை கப் ரவையும் சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு நாண்ஸ்டிக் வாணலியில் அல்லது கடாயை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரி மற்றும் பாதாமை நறுக்கி போட்டு திராட்சை சேர்த்து வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே வாணலியில் கடலை மாவை கொட்டி மேலும் சிறிது நெய் விட்டு நன்றாக வாசனை வரும் வரை கட்டியில்லாமல் வறுக்கவும்.
கைவிடாமல் கிளற வேண்டும். இல்லையென்றால் மாவு கருகிவிடும் சுமார் 10 முதல் 15 நிமிடம் வரை வறுத்து, இதில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, ஏலப்பொடி சேர்த்து அடுப்பை அணைத்து வைக்கவும்.
இந்த கலவையில் பொடி செய்த சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் மீதமுள்ள நெய்யை (கெட்டியாக இருந்தால் உருக்கி ஊற்றவும்) சேர்த்து நன்றாக கையால் பிடிக்கக்கூடிய பதம் வரும் வரை கட்டியில்லாமல் கிளறி பின் சூடு பொறுக்குமளவில் கைக்கொள்ளுமளவு எடுத்து உருண்டைகளாக பிடிக்கவும். நடுத்தரமான அளவில் 25 உருண்டைகள் வரை செய்யலாம்.
மிகவும் எளிதாய் செய்யக்கூடிய கடலைமாவு நெய் உருண்டை தயார். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். இது வட இந்தியாவில் பிரபலமான இனிப்பு வகை (லட்டு) ஆகும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மிகவும் நன்றி, மிகவும் நன்றாக தெளிவாக வெளியிட்ட அட்மின் பாபு அண்ணா மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

ஹாய் உமா,
உங்க‌ ல‌ட்டு குறிப்பு சிம்பிள் & சூப்பர்!. ரொம்ப அழகா செய்து காட்டி இருக்கிங்க. இந்த லட்டு செய்து பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன் (நவராத்திரியின் போது தோழி ஒருவரின் வீட்டில் சுவைத்ததிலிருந்து...) பிறகு அப்படியே விட்டுப்போச்சு. தீபாவளிக்கு வேறு பல ஸ்வீட்ஸ் எல்லாம் செய்து சாப்பிட்டாகிவிட்டது. இப்ப நீங்க மறுபடியும் இதை செய்துகாட்டி எனக்கு நியாபகப்படுத்திட்டிங்க... : ) கூடிய சீக்கிரம் செய்துபார்த்திடறேன்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உமா எப்படி இருக்கீங்க?பேசன் லட்டை பார்க்கவே நாவில் எச்சில் ஊறுகின்றது.உடனே சாப்பிட்டு பார்க்க தோன்றுகின்றது.நேரம் கிடைக்கும் போது செய்து பார்த்திட வேண்டியதுதான்..
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் உமா! உங்கள் சமையல் குறிப்பு பார்த்தேன். நீங்க அழகு/ உடற்பயிச்சி மட்டுமல்ல
சமையலிலும் அசத்துறிங்க, சந்தோசம். கடலைமாவு நெயுருண்டை நான் இது வரை
செய்து பார்த்ததில்லை. எங்கோ சாப்பிட்ட ஞாபகம். நல்ல சுலபமான குறிப்பு ததுள்ளிர்கள்
உடனே செய்துபார்த்திட வேண்டியதுதான்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல குறிப்பு நானும் அடிக்கடி செய்வேன். படங்களுடன் நன்றாக இருக்கிறது.

***சுஸ்ரீ, மிகவும் சுலபமா செய்யலாம் செய்து பாருங்க, நானும் வட இந்திய தோழிகள் மூலம் சாப்பிட்டு பிறகு தெரிந்து கொண்டது தான். ஆனால் அவங்க இன்னும் நிறைய நெய் சேர்த்து செய்வாங்க. அப்படித்தான் இருக்கும் இங்கே ஸ்வீட் ஸ்டாலில் வாங்கினாலும்.

***அப்சரா,நான் நலம்.நீங்க எப்படியிருக்கீங்க? செய்து பார்த்து விட்டு சொல்லுங்க.

***யோகராணி ஆன்டி, உங்களை கண்டிப்பாக எதிர்பார்த்தேன். பெரும்பாலும் எல்லா குறிப்புகளிலுமே உங்க பின்னூட்டம் இருக்கும். ரொம்ப ரசனை உங்களுக்கு. இதுவும் சுலபமானது தான் செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் கொடுங்கள். நம்மளோட குறிப்பையும் செய்துபார்க்கிறாங்கன்னு எனக்கும் சந்தோஷமாயிருக்கும்.

***விஜி நீங்களும் இப்படித்தான் செய்வீங்களா...ரொம்ப ஈசியில்லயா...
உங்களுக்கு தெரியுமா? நான் முதன் முதலில் இப்போதான் செய்து பார்த்தேன், திடீர் முடிவு எடுத்து அறுசுவைக்கும் முதல் குறிப்பு இனிப்பாக அனுப்பிவிட்டேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

கடலை மாவு நெய் உருண்டை பார்க்கவே சுவைக்க தூண்டுகிறது.அருமை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உமா உங்கள் பேசன் கீ லட்டு சூப்பர்

Jaleelakamal

பாப்ஸ் உமா.... உங்க முறையில் லட்டு செய்தேன் நேற்று, ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. நல்ல குறிப்பு.... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்களுடைய லட்டு பெறுநாள் அன்று செய்தேன்,ரொம்ப சூப்பரா வந்தது,நன்றி உமா அவர்களே!

Eat healthy

Hi Pops, the laddu was very tasty. My 2 yr old enjoyed it a lot. Thank you.