அறுசுவை - காணாதவர் பக்கம் - 4

யாராவது காணாம போயிட்டாங்களா?!
யாராவது காணாம போக போறாங்களா??!!
யாராவது காணாம போய் வந்திருக்காங்களா???
யாராவது காணாம போக போறேன்னு சொன்னாங்களா???

- இப்படி பட்ட விஷயத்துக்கு தான் இந்த பக்கம். ;)

பாருங்கப்பா விளையாட்டு போல பக்கம் - 4 வந்துட்டுது!!!! இப்படி எல்லாரும் காணாம் போனா எப்படிங்க எங்களுக்குலாம் பொழுது போகும்???!!! சீக்கிரம் காணாம போனவங்க வந்துடுங்க. இனி காணாம போறவங்க சொல்லிட்டு போங்க. பிரபா மாதிரி எல்லார் பேரையும் போட்டு விசாரிக்கிறவங்களுக்கு லிஸ்ட்'ல கொஞ்சம் பேராவது குறையும். ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா வெற்றிகரமா 4 பாகம் ஆரம்பிச்சுட்டிங்க.... இப்ப இருக்குர நிலை பார்த்தா எல்லர் பேயரும் இதில் போடனும் போல....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஹாய் ஹாய்.

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அனைத்து பயணங்களையும் முடித்துக் கொண்டு திரும்பிவிட்டேன். இனி வழக்கம் போல் வருவேன்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் ஃப்ரண்ட்ஸ்!
எல்லாருக்கும் ஒரு ஹாய்! கடுமையான முதுகுவலி காரணமாய் இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம். அதனால் என்னை இதுநாள்வரை விசாரித்த, விசாரிக்காத என் அன்புத் தோழிகள் அனைவருக்கும் ஹாய் சொன்ன கையோடு இரண்டு மாதங்களுக்கு ஓய்வெடுக்கப்போகிறேன்! என்னை விடாம விசாரித்த ப்ரபாவிற்கும்,வனிதாவிற்கும் ஒரு ஸ்பெஷல் ஹாய் .எல்லாரையும் விசாரிக்க டைம் எடுத்து வர்றேன்!
மீண்டும் நடுவில் (முடிந்தபோது) வருகிறேன்!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

சாய்கீதா,

இது உங்களுக்கே ஓவராத் தெரியலையா? காணாமப் போன நீங்க, வந்து, மறுபடியும் காணாமப் போறேன்னு சொல்றீங்களே? :-(

சரி, சரி, ரெஸ்ட் எடுக்கணும்கிறதால ஸ்பெஷல் பெர்மிஷன் தர்றேன்!!

தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க..

அதிரா.. எங்க போனீங்க? உங்களை காணோமே சில நாட்களா? நீங்களும் வீட்டில் எல்லோரும் சுகந்தானே? ஒரே கவலையா இருக்கு.. மத்தவங்களை அங்கயும் இங்கயும்மா எங்கயாச்சும் பாத்துட்டேன்.. உங்களை தான் காணலை.. வந்து என்ன எவ்வளவு நாள்ன்னு சொல்லிட்டாவது போங்க.. ப்ளீஸ்..

திரும்பி வந்தவங்களுக்கு நல்வரவு..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வாங்க சாய் கீதா..... வந்துட்டு காணாம் போறீங்க... :( உடம்புக்கு என்ன ஆச்சு??!! நல்லா ஓய்வு எடுங்க, பார்த்துக்கங்க. சீக்கிரமே நலமாகி வாங்க.

அதிரா.... எங்கே போனீங்க??? உங்களை சமைத்து அசத்தலாம் போன பகுதியில் இருந்து தேடிகிட்டு இருக்கேன்.... :(( பதிலே இல்லை. நலம் தானே???!! சீக்கிரம் வாங்க.... இந்த முறை பட்டிமன்றத்தில் கூட காணவில்லை. மிஸ் பண்றோம்.....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா நலமா இருக்கீங்களா. எல்லாத்தோழிகளும் நலமா இருக்கீங்களா. நானும் காணாமல் போய் வந்திருக்கேன். என்னைத்தேடினவங்களுக்கு ரெம்ப நன்றி.

ஹாய் அதிரா.நலமாக இருக்கீங்களா.நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் அறுசுவைக்கு வாங்க.அன்புடன் அம்முலு

வாங்க அம்முலு..... மீண்டும் வந்துட்டீங்க'ன்றது சந்தோஷமா இருக்கு. எல்லாரும் வந்தா தான் தூங்கிட்டு இருக்க அரட்டை பக்கம் கலகலப்பாகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்