ஆப்பிள் ஹல்வா

தேதி: October 22, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

நல்ல இனிப்புள்ள சிகப்பு ஆப்பிள் - 2
நெய் - கால் கப்
சர்க்கரை - கால் கப்
மில்க் பௌடர் - 2 தேக்கரண்டி
ஏலத்தூள் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 4


 

ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அல்லது புட் ப்ரோஸசரில் ஆப்பிள் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
மேலே சிறிது நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
மில்க் பௌடர், சர்க்கரை சேர்த்து கை விடாமல் நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வராமல் இருக்கும் போது அடுப்பை அணைத்து எடுக்கவும்.
ஹல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து மேலே முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும். உடம்பிற்கும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. தெவிட்டாமல் சாப்பிடக்கூடிய ஆப்பிள் ஹல்வா ரெடி. இந்த ஹல்வா குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b>திருமதி. விஜி சத்யா</b> அவர்கள்.

ஆப்பிளை அரைத்தவுடன் குறைவாக தான் இருக்கும் அதிகம் தேவைப்பட்டால் இதன் அளவினை அதிகரித்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதில் பேர் இல்லை.
நன்றி அட்மினுக்கும் அருசுவை டிம்க்கும். நன்றாக ப்ரசண்டேஷன் இருக்கு.

அட்மின் இதில் உங்களிடம் குறிப்பிட மற்ந்துவிட்டேன்.
ஹல்வா செய்தவுடனே என் தோழி, என் குழந்தைகள் எல்லாம் இது ரொம்ப டேஸ்டியா இருக்கு என்று இருந்ததினால் எல்லாமே காலியாகி கொஞ்சம் தான் இருந்தது அதை தான் அருசுவைக்கு அனுப்ப முடிந்தது. எனக்கே 2 ஸ்பூன் தான் கிடைத்தது. கொஞ்சம் கூட புளிப்பு இல்லாமல் இருந்தத்ல் தான் இது நன்றாக இருக்கும்.

நல்ல இனிப்ப்பு ஆப்பிளில் செய்ததினால் மிகவும் நன்றாக இருந்தது.

விஜி இது உங்கள் குறிப்பா?குறிப்பின் கீழ் பெயர் வெளி வரவில்லை.
ஆனால் ஆப்பிளில் அல்வா என்றால் நிஜமாகவே வித்தியாசமான குறிப்பு இது.சில நேரங்களில் நிறைய ஆப்பிள் வீட்டில் அப்படியே இருக்கும்.விஜி,நீங்க வேற உடனடியாக குழந்தைகள் சாப்பிட்டார்கள் என்கிறீர்கள். அப்போது மிக நன்றாகவே இருக்கும்.செய்து பார்த்திட வேண்டியதுதான்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

விஜி, என்ன brand milk powder சேர்த்தீர்கள்?
தேக்கரண்டி என்றால் என்ன? குட்டி ஸ்பூன் , கரண்டி இதில் என்னவென்று சொல்லுங்கள் ப்ளீஸ்.

NewMom நன்றி சந்தேகம் கேட்டதற்க்கு.

எந்த ட்ரை மில்க் பவுடரும் யூஸ் செய்யலாம். பேபி மில்க் பவுடர் கிடையாது.

இது நெஸ்லே ட்ரை மில்க் பவுடர் யூஸ் செய்துள்ளேன்.

மேசை கரண்டி - டேபிள் ஸ்பூன்
தேக்கரண்டி - டீ ஸ்பூன்

விஜி சூப்பரான ஆப்பில் ஹல்வா, நான் செய்து பார்க்கிறேன்.

Jaleelakamal

விஜி அக்கா dry milk powder க்கு பதிலாக பால் உபயோகிக்கலாமா?
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

லஷ்மிஷங்கர் கண்டிப்ப பால் உபயோககிக்லாம். பால் உபயோகிப்பதாயிருந்தால் ஆப்பில் கலவயை போடும் போதே பாலையும் சேர்க்கவும்.செய்துபாருங்க ரொம்ப நன்றாக இருக்கும்.நன்றி.

விஜி அக்கா இன்று இந்த ஆப்பிள் அல்வா செய்தேன். நன்றாக இருந்தது. இதை சில மாதங்கள் முன்பே நான் பால் விட்டு செய்திருக்கிறேன். அதுவும் நன்றாகவே இருந்தது.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

சுபா நன்றாகவே இருக்கும். அதுவும் குழந்தைகாளுக்கு ஆப்பிளில் செய்து கொடுத்தால் ரொம்ப நல்லது. இதற்க்கு நான் நிறய்ய சர்க்கரை போடமல் செய்தேன்,பால் பவுடரில் இனிப்பு இருக்கிறது. பால் சேர்த்தும் செய்துள்ளேன். அதுவும் நிங்க சொல்கிறது போல் நன்றாகவே இருக்கும்.நன்றி.

விஜி, இன்று உங்க ஆப்பிள் அல்வா செய்தேன், சுவை சூப்பர். நாங்களும் குழந்தையும் விரும்பி சாப்பிட்டோம். செய்வதற்கு மிகவும் சுலபம். இது போல் நிறைய சுலப குறிப்புகள் கொடுங்கள். மிகவும் நன்றி.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

its really a nice recipie