தம்பி பாபு அப்பாவாகி விட்டார்

அறுசுவை நிர்வாகியும்,நமது அன்பு சகோதரர் பாபு,பாப்பி தம்பதிகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.57 மணிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது என்று இந்த பதிவின் மூலம் அறுசுவை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.வாருங்கள் வாழ்ந்த்துவோம்

அன்பு தம்பி பாபு,தங்கை பாப்பி இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.மகள் நீள் ஆயுளுடன்,குறைவற்ற செல்வமும் பெற்றோரும்,உற்றோரும் போற்றும் படி வாழ்வாங்கு வாழ இந்த அத்தை மனமார வாழ்த்துகின்றேன்.வீடு திரும்பியதும் புத்தம் புதிய மகளைப்பற்றி பதிவு போட்டு நேயர்களை சந்தோஷப்படுத்துங்கள் பாபு.
ஸாதிகா

arusuvai is a wonderful website

அண்ணா உங்க பொண்ணுக்கு மட்டும் நிறைய அத்தைகள்!!! உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள்... பாப்பியோட புகைப்படம் அவங்க கிராப்ட் வேலைகளோட போட்டிருப்பீங்களே.. அதுல அவங்க முகத்துல இருந்த பூரிப்பை பார்த்தே நான் யூகிச்சிருந்தேன்.. நல்ல விஷயம்ன்னு.. சரி தானே? ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தாயும் சேயும் நலமாயிருக்கவும் வாழ்த்துக்கள்..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு பாபு அண்ணா,அண்ணி மற்றும் குட்டி பாப்பாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

பாபு அண்ணா மற்றும் பாப்பிக்கு எனது வாழ்த்துக்கள் .தாயும் சேயும் நலமாக இருக்க பிராத்திக்கிறேன் . பொண்ணு பேர் என்ன அப்படின்னு வந்து சொல்லுங்க
பி.கு : ஹேமா போட்ட ரெண்டாவது சாபமும் பலித்து விட்டது :)
ஹேமா ஓடி வாங்க
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

அட்மினுக்கும் பாப்பிக்கும் எனது வாழ்த்துக்கள்... தாயும் சேயும் நலமாக இருக்க பிராத்திக்கிறேன்....வெல்கம் குட்டி ராணி!!! விரைவில் குழந்தையின் பேரும்/புகைப்படமும் அனுப்புங்க :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அண்ணா நலமா. அண்ணி எப்படி இருக்கிறார்கள். குட்டி மகாராணி பிறந்ததுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி உங்க செல்லத்துக்கூட நல்ல டைம் ஸ்பென் பண்ணுங்க. அவளோட,சிரிப்பு,அழுகை,தூக்கம்,அவள் விடும் கொட்டாவி அழகு,எல்லாம் பார்த்து ரசிங்க உங்களுக்கு நேரம் போதே தெரியாது. அண்ணியை விசாரித்ததாக சொல்லவும்.

அன்புடன் கதீஜா.

பாபு மற்றும் பாப்பிக்கு வாழ்த்துக்கள்.

இலா சொன்ன மாதிரி அறுசுவை குட்டி ராணியின் பெயரும்,புகைப்படமும் விரைவில் எதிர்பார்க்கிறோம்.
சீரும் சிறப்புமாய் நீங்கள் எண்ணிய வண்ணம் உங்கள் மகளை வளர்க்க வாழ்த்துக்கள்

Jaleelakamal

அன்புள்ள பாபுவிற்கும் செண்பகாவிற்கும்,

கணவன் -மனைவி என்ற இனிய உறவிலிருந்து அப்பா-அம்மா என்ற உன்னதமான பதவியை அடைந்திருக்கும் உங்களுக்கு எங்களின் அன்பு வாழ்த்துக்கள்!!

உங்கள் இல்லத்தில் புத்தம்புது வரவாக இனிய தென்றலாய் நுழைந்திருக்கும் உங்களின் அன்பு மகள் சீரும் சிறப்புடனும் பேரும் பெருமையுமாய் என்றும் வாழ
எங்களின் இதயங்கனிந்த அன்பு வாழ்த்துக்கள்!!

அப்பா அம்மா ஆகிவிட்ட அன்பு தம்பி பாபுவிற்கும் அன்பு மகள் பாப்பிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், செல்லப் பேத்திக்கு எனது ஆசீரும் அன்பு முத்தங்களும். பாப்பி எப்படி இருக்காங்க? சுகப் பிரசவமா? என் பேத்தி யார் மாதிரி இருக்காங்க அம்மா ஜாடையா, அப்பா ஜாடையா? தம்பி பாபு உங்கள் சந்தோசத்தை எங்களுடனும் வந்து பகிர்ந்துக் கொள்ளவும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இந்த இனிப்பான செய்தியைக் கூறிய ஸாதிகாவிற்கு மனமார்ந்த நன்றி.

அப்பாவாகப் பதவி உயர்வு பெற்றிருக்கும்:) அறுசுவை அட்மின் அவர்களுக்கு ஜீனோ-வின் கங்க்ராட்ஸ்!

குட்டி தேவதையின் வரவால் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கும் அட்மின் மற்றும் குடும்பத்தினருக்கும் இனிய வாழ்த்துக்கள்!!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

மேலும் சில பதிவுகள்