ஐஸ்க்ரீம் குச்சிகளை கொண்டு செல்போன் ஸ்டாண்ட் செய்வது எப்படி?

தேதி: October 27, 2009

4
Average: 3.5 (6 votes)

 

ஐஸ்க்ரீம் குச்சிகள்
ஸ்டோன்கள்
ஃபேப்பரிக் பெயிண்ட்
பெவிக்கால்
ப்ரஷ்
கிலிடர்ஸ்
கத்தரிக்கோல்

 

செல்போன் ஸ்டாண்ட் செய்வதற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு முழு ஐஸ்க்ரீம் குச்சியை நடுவில் வைத்து அதன் வலதுப்பக்கத்தில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சியை வைக்கும்பொழுது மேலிருந்து ஒரு செ.மீ கீழே இறக்கிவைத்து அதன் ஓரங்களை பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும். இடதுப்பக்கத்திலும் இதேப் போல் ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டிக் கொள்ளவும்.
மீண்டும் வலது, இடதுப்பக்கத்தில் ஐஸ்க்ரீம் குச்சியை வைக்கும்போது 1/2 செ.மீ கீழே இறக்கி வைத்து பெவிக்கால் தடவி ஒட்டிக்கொள்ளவும். இதுப்போல் ஐந்து முழு ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒட்டி காயவிடவும்.
ஐந்து ஐஸ்க்ரீம் குச்சிகளை 6 1/2 செ.மீ அளவுகளில் வெட்டி எடுத்துக் கொண்டு அவை ஒவ்வொன்றையும் பெவிக்கால் தடவி வரிசையாக ஒட்டி காயவிடவும். இதே அளவுகளில் இன்னொரு செட் செய்துக் கொள்ளவும்.
ஒட்டி வைத்திருக்கும் ஐஸ்க்ரீம் குச்சிகள் காய்ந்ததும் அதன் பின்பக்கத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு ஐஸ்க்ரீம் குச்சி துண்டுகளை பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
முன்பு ஒட்டி வைத்திருக்கும் முழு ஐஸ்க்ரீம் குச்சிகளை சற்று சாய்வாக நிமிர்த்தி கொண்டு, 6 1/2 செ.மீ அளவுகளில் ஒட்டி வைத்திருக்கும் இரண்டு செட் ஐஸ்க்ரீம் குச்சிகளை அதன் இருப்பக்கங்களிலும் நேராக வைத்துக் பெவிக்கால் தடவி ஒட்டிவிட்டு நன்கு காயவிடவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகள் நல்ல ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொண்டதும் இரண்டு பக்கத்திலும் ஒட்டிய ஐஸ்க்ரீம் குச்சிகளின் நடுவில் 5 1/2 செ.மீ அளவுகளில் ஒரு ஐஸ்க்ரீம் குச்சி துண்டை எடுத்து ஒட்டிவிடவும்.
இப்பொழுது 5 1/2 செ.மீ அளவுகளில் ஐந்து ஐஸ்க்ரீம் குச்சி துண்டுகளை வரிசையாக ஒட்டி நன்கு காயவிடவும். நன்கு காய்ந்ததும் அதன் பின்பக்கத்தில் பெவிக்கால் தடவி செய்து வைத்திருக்கும் செல்போன் ஸ்டாண்டின் நடுவில் உள்ள குச்சியின் மீது வைக்கவும்.
அடுத்து ஐஸ்க்ரீம் குச்சிகளில் 2 1/2 செ.மீ அளவுகளில் ஐந்து துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த துண்டுகளையும் பெவிக்கால் தடவி வரிசையாக ஒட்டி விட்டு நன்கு காயவிடவும்.
இதனை செல்போன் ஸ்டாண்டின் இருப்பக்கத்திலும் ஒட்டியிருக்கும் குச்சியின் இருமுனைகளின் நடுவில் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு செல்போன் ஸ்டாண்ட் முழுவதும் ப்ரவுன்நிற பேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளில் அடித்த பெயிண்ட் நன்கு காய்ந்ததும் உங்களுக்கு பிடித்த வாசகங்களை செல் ஸ்டாண்டின் நடுவில் எழுதிக் கொள்ளலாம். அதன் மேல் முனையில் ஒரு சிறிய ரோஸில் பெவிக்கால் தடவி ஒட்டவும். பிறகு 2 1/2 செ.மீ அளவுகளில் ஒட்டிய குச்சிகளின் நடுவில் கிலிடர்ஸால் உங்களுக்கு விருப்பமான டிசைனை வரையவும். அடுத்த குச்சிகளில் ஸ்டோனைகளை ஓட்டி அழகுப்படுத்தவும். இதுப்போல் மாறி மாறி செய்துக் கொள்ளவும்.
ஐஸ்க்ரீம் குச்சிகளைக் கொண்டு மிகவும் எளிமையாக செய்யக்கூடிய அழகிய செல்போன் ஸ்டாண்ட் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஐ அழகா இருக்கு இந்த செல் போன் ஸ்டாண்ட், ஆனா யாருடையது பேரு போடலையே. எனினும் வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் சுபா,
அழகாக இருக்கிறது இல்லையா? :)
இன்றுதான் உள்ளே நுழைய முடிந்தது. இந்தக் கைவேலையைச் செய்து காட்டியவருக்கு எனது பாராட்டுக்கள். :)))))))))
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வீட்டுக்கு வீடு நாலைந்து செல்போன் இருப்பதால் இது மிகவும் அவசியமானது..செல்போனை அந்த ஸ்டாண்டில் வைத்து பார்க்கும் பொழுது எத்தனை அழகு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

vow! very cute and nice mobile stand.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta