தொதல் III

தேதி: October 29, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (9 votes)

இது இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்பு வகை ஆகும். இதனை பலர் பல முறையில் செய்வார்கள். இங்கு கொடுத்திருப்பது மிகவும் சுலபமான முறை. இதை <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார். இது அவரது தோழி ஒருவர் சொல்ல கேட்டு செய்து பார்த்து செய்ய சுலபமாக உள்ளதாலும் சுவையும் நன்றாக இருந்ததாலும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

தேங்காய்பால் - 2 டின்
சிவப்பு அரிசிமா - அரை டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
தண்ணீர் - 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி - 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)
வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி
கஜு (முந்திரி) - 25
பட்டர் - ஒரு தேக்கரண்டி
வெனிலா/ஏலக்காய் - சிறிது


 

கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாக இருந்தால் அப்படியே போடலாம்.
முந்திரியை இரண்டிரண்டாக உடைத்து பட்டரில் வறுத்து எடுக்கவும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி, பயறு எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
இந்த கலவையை சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.
எண்ணெய் பிரிந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்/வெனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி விட்டு ஆற விடவும்.
சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.

கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும். கலவை நன்கு சுருள 40 - 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம். உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நர்மதா தொதல் குறிப்பு சூப்பர், இது கீழக்கறையில் ரொம்ப பேமஸ்,

இலங்கையிலுமா?

Jaleelakamal

நன்றி ஜலீலாக்கா, இது இலங்கையிலும் பேமஸ்தான்.
-நர்மதா

banu நீங்க சொன்னது ரொம்ப சரி