மனது மிகவும் கவலையாக இருக்கும்

எனக்கு மனது மிகவும் கவலையாக இருக்கும்,மனத்திற்குள் அழவேண்டும் போல் இருக்கும், காரணம் தெரியாது, இது போல் சில சமயம் வருவதுண்டு பள்ளி பருவத்திலிருந்தே... ஏன்? எல்லாருக்கும் அப்படி தானா ????

ஓன்றும் கவலைப்பட தேவை இல்லை.சும்மா,சின்ன depression,அது நாளடைவில் சரியாக போய்விடும்.நீங்க ரொம்ப பயந்த சுபாவமாக இருக்கும்.அடுத்தவர்களை பற்றி கவலைப்படுவதை விட்டு விடுங்கள்.நல்ல நம்பிக்கைக்கு உரிய தோழிகளோடு outing ,walking அப்படியே ஜாலியாக பேசிட்டு மனது விட்டு சிரிச்சிட்டு வாங்க,அட்லீஸ்ட் தினமும் ஒரிரு வார்த்தை போனிலாவது மற்றவர்களுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.உங்களுக்கு பிடிச்சதை தைரியாமாக செயல்படுத்துங்கள்,இது ஒன்றே போதும் உங்கள் அழுகை பறந்து போய்விடும்,நம்ம இயலாமை தான் அழுகை என்பவதை நினைவில் வைத்து நம்மால் எல்லாம் முடியும் என்று சாத்தியமானதை முயற்சி செய்து பாருங்க,முடியும் ஏதோ எனக்கு தோணியதை எழுதியுள்ளேன்,நானும் இப்படி உங்களைப்போல் மனது கஷ்டப்பட்டுக்கொண்டு எப்படியோ தேறியவள் தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சுபத்ரா, லைஃபில் எல்லாரும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனமுடைந்து அழுவார்கள். நானும் நிறைய அனுபவித்து இருக்கிறேன். ஒரு வழியாக மீண்டு வந்தேன். மன அழுத்தமே முக்கிய காரணம். உடற்பயிற்சி, நடை, யோகா, பாட்டு கேட்பது, பிடித்தவர்களுடன் போனில் பேசுவது( யாராவது குடைச்சல் பேர்வழிகளுடன் பேசாமல், மனதுக்கு உற்சாகம் தருபவர்களுடன் பேசுவதே நலம்)உங்கள் கணவர், பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது என்று மனதை மாற்றுங்கள்.
வாணி

pre menstrual phase இல ஹார்மோன்கள் குறைவதால் சில பெண்களுக்கு இப்படி ஏற்ப்படும் என்று நினைக்கிறேன். எனக்கும் இது போன்று ஏற்பட்டதை கவனித்துள்ளேன். உங்களுக்கும் அப்போது தான் ஏற்படுகிறதா என்று யோசித்துப் பாருங்கள். சில சமயம், அதீத மகிழ்ச்சிக்கு பிறகும் இவ்வாறு ஒரு emptiness மாதிரி மனதுக்குள் ஏற்படலாம். இன்னொரு முக்கிய காரணம் தனிமை என்று நினைக்கிறேன். அவ்வாறு ஏற்ப்படும் பொழுது வேறு ஏதாவது மனதுக்கு பிடித்த செயல்களை செய்ய ஆரம்பித்து விடுங்கள். சும்மா அதையே நினைத்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டாம். அட்லீஸ்ட், வெளியே எங்காவது நடந்து சென்று வெளிக் காற்றை சுவாசித்து மகிழ்ந்து வாருங்கள். புத்துணர்வாக இருக்கும். அவ்வப்போது ஏற்ப்பட்டால் பிரச்சனை ஒன்றும் இல்லை. ஆனால் தொடர்ச்சியாக இரண்டு மூன்று வாரங்கள் மாதிரி நீடித்தால் மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

நான் கூட சின்ன வயசிலே, ஏன் திருமணம் ஆகிக்கூட கொஞ்சம் மனது கஷ்டமானாலும் அழுதுடுவேன். அதெல்லாம் ஒரு வயசு வரைக்கும்தான். இப்பல்லாம் மனசு ரொம்ப ஸ்ட்ராங்கா திமிசு போட்டா மாதிரி ஆயிடுத்து. ரொம்ப நாளைக்கப்புறம் அபியும் நானும் படம் பார்த்தபோது சொட்டுத் தண்ணி சில காட்சிகளைக் கண்டபோது வந்தது.

இப்ப பாருங்க 54 வயசு ஆச்சு எனக்கு. அதெல்லாம் நம்பளை அழ வைக்க முடியாது. இதுவும் கடந்து போகும்
நல்லா வாழ்க்கையை அனுபவியுங்க. அழுகை வரமாதிரி இருக்கும் போது உங்களுக்கு நடந்த நல்ல விஷயங்களை, உங்கள் வாழ்க்கையில் நடந்த கண்ட, கேட்ட மனதிற்கு இனிமையான விஷயங்களை நினைத்துக்கொள்ளுங்கள். அல்லது உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். எல்லாம் சரியாகிவிடும்.
மனதுக்குக் கஷ்டமாக இருக்கும்போது டானிக் அறுசுவைதான்.
உங்கள் வயதைக்கடந்துதான் நான் வந்திருக்கிறேன். அதனால் உங்கள் உணர்ச்சிகள் எனக்கு நன்கு புரிகிறது.
வாழ்க வளமுடன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஐய்யோஎனக்கு பயங்கர சந்தோஷமா இருக்கு. பதில் அளித்த அனைவருக்கும் நன்றி.நேற்று எனக்கு அவ்வாறு இருந்தால் கேட்டேன், அறுசுவையில் பதிவு போட்டப்ப தோழிகளிடம் பகிர்ந்த உணர்வு. இன்று ஒகே. ஆனால் எனக்கு இது போல் சில முறை நடந்ததுண்டு,
அன்பு ஆசியா அக்கா, நீங்க சொல்வது சரியே,ஆனால் எனக்கு இங்கு தோழிகளே நீங்கள் தான்(அறுசுவையில் உள்ளோர்) .அதான் அடிக்கடி வருவேன்.இரண்டு நாளுக்கு ஒரு முறை அம்மா,அப்பாவுடன் ஃபோனில் பேசுவேன். அலுவலகம் செல்வதால் வாக்கிங் செல்வது கிடையாது.நேரமும் சரியாக இருக்கிறது. நான் முதலில் எல்லாம் ரொம்ப .இப்ப இப்ப தான் மாறி உள்ளேன்.(பிரச்சனைகளுக்கு பிறகு) நன்றி, நீங்கள் எல்லோரும் இது போல் என்னிடம் எப்பவும் பேசினால் எனக்கு அந்த பிரச்சனை வராது.

அன்பு வாணிக்கு, ரொம்ப நன்றிப்பா. குழந்தையுடன் விளையாடுவதே மிகுந்த சந்தோஷம் தான். எனக்கு பிடித்தவர்களே நீங்கள் தான் உண்மையிலே. அதான் எல்லாவற்றையும் உங்கள் எல்லோரிடமும் பேசும் போது மனது மகிழ்ச்சியா இருக்கும்.

அன்பு தியா, நன்றிப்பா, எனக்கு தொடர்ச்சியாக இருந்தது இல்லை. எப்போவாது வரும்.ஹார்மோன் குறைவான்னு தெரியாது. வாணி கூறிப்படி (மன அழுத்தம்) ஒரே விஷயத்தை பற்றியே யோசிப்பேன்.அப்போது அப்படி வரும். முதல்முறை உங்களுடன் பேசுகிறேன், மிக்க நன்றிப்பா.

ஜெயந்திஅம்மா, மிகவும் நன்றிம்மா, நீங்கள் சொல்வது சரியே. கஷ்டம் வந்தால் கடவுளைதான் வேண்டிக்கொள்வேன்.உங்கள் பதிவுகள் நிறைய இடத்தில் படித்திருக்கிறேன், என்னுடன் பேசியதில் சந்தோஷம்,

இந்தியாவில் இருந்தப்போ ஆசியா அக்கா சொன்ன மாதிரி தோழிகளுடன் பேசுவது, அக்கம்பக்கத்தில் அரட்டை,வாக்கிங் என்று ஜாலியாக இருப்பேன்,ஆனால் இங்கு எல்லாமே என் குட்டிப்பாப்பா தான். கணவர் சிலநேரம் ஜோக் சொன்னாகூட கோபம்தான் வரும், அவ்வளவு டயடா இருக்கும். சின்ன சின்ன விஷயத்திற்கும் கோபம் வருது, அதை எப்படி குறைப்பது?
எனக்கு எல்லோருடைய பதிவை பார்த்து உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி.
அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்