அடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி?

தேதி: October 31, 2009

4
Average: 3.7 (7 votes)

அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும் விதமாக அடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அவர்கள் வடிவமைத்து காட்டியுள்ளார்.

 

துணி
ஃபிரேம்
எம்ப்ராய்டரி நூல்
ஊசி

 

துணியை ஃபிரேமில் பொருத்திக் கொள்ளவும். ஊசியில் எம்பிராய்டரி நூலை கோர்த்து துணியின் அடிவழியாக குத்தி எடுக்கவும்.
முதலில் குத்தி எடுத்த இடத்தின் அருகிலேயே மீண்டும் குத்தி அடிவழியாகவே சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் குத்தி மேல்நோக்கி ஊசியை இழுக்கவும்.
இப்போது பார்ப்பதற்கு 'U' வடிவத்தில் அல்லது 'V' வடிவத்தில் நூல் இருக்கும். நடுவே நூல் கோர்த்த ஊசி இருக்கும்.
மீண்டும் அதே நூல் இருக்கும் இடத்தில் குத்தி இழுக்கவும்.
இதுப்போல் தொடர்ந்து போடுவதுதான் சங்கலி தையல். (சங்கிலி போல் இருக்கும் இந்த தையலை "Chain Stitch" என்று சொல்வது வழக்கம்).
இதே தையலின் ஒரு மாறுபட்ட வகை தான் "Detached Chain Stitch" (அ) "Lazy Daisy" என்று சொல்லப்படுவது. முதலில் சங்கிலி தையலுக்கு போடுவது போல் அடிவழியாக விட்டு மேல் நோக்கி இழுக்கவும்.
மீண்டும் தையல் ஆரம்பித்த இடத்திலேயே ஊசியை விடவும்.
ஊசியை நூலின் நடுவே கீழிருந்து குத்தி வெளியே எடுத்து பூ இதழ் போல் நூலை வளைக்கவும்.
வெளியே வந்த ஊசியை மீண்டும் அதன் அருகே குத்தி சின்ன சங்கிலி போல் பூ இதழின் முனையில் போடவும்.
இதையே மீண்டும் நடுப்பகுதிக்கு கொண்டு வந்து சுற்றிலும் இதே போல் இதழ்கள் போடவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வனிதா அடுத்த கலை ஆரம்பிச்சிட்டீங்க!!வாழ்த்துக்கள்.School படிக்கும் போது தையல் class-ல் design போட்டது.அப்புறம் அப்படியே விட்டாச்சு.ஆனாலும் ஒரு சந்தேகம்.இவ்வளவு பெரிய ஊசி உபயோகிக்கணுமா?

Patience is the most beautiful prayer!!

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி. :)

உத்ரா.... உங்க பதிவை பார்க்க சந்தோஷமா இருக்கு. எங்க அரட்டை பக்கம் பார்க்க முடியல?? சின்ன ஊசி போதும், நான் படம் எடுக்கும் போது ஊசியே கண்ணுக்கு தெரியலன்னு பெரியதை பயன்படுத்தினேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா சூப்பரா இருக்கு... வாழ்த்துக்கள்...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மிக்க நன்றி பிரபா..... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

படத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அட்மின்!!! :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta