நேந்திரம் பழ பஜ்ஜி

தேதி: November 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

நேந்திரம் பழம் - ஒன்று
மைதா மாவு - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
சர்க்கரை(சீனி) - 2 1/2 தேக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

நேந்திரம் பழத்தை வட்டமாக அல்லது நீளமாக அரை செ.மீ கனத்தில் வெட்டிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக வைக்கவும்.
மைதா மாவுடன் உப்பு, சர்க்கரை, சமையல் சோடா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய்(சுமார் 200மி.லி) ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் நேந்திரம் பழ துண்டுகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
மிதமான தீயில்(medium flame) வைத்து ஒரு புறம் வெந்ததும் திருப்பி விடவும்.
பொன்னிறமானதும் எண்ணெயிலிருந்து எடுத்து கிச்சன் டவலில் அதிகப்படியான எண்ணெயை வடிக்கவும்.
சூடான சுவையான நேந்திரம் பழ பஜ்ஜி தயார். சுவையான இந்த பஜ்ஜியை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. கவிசிவா </b> அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் கவிசிவா... நான் முதன்முதலில் கத்துக்கிட்ட சமையல் செய்முறை இந்த நேந்திரம் பழ அப்பம் தான். நீங்க நாகர்கோவிலை சேர்ந்தவங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா இது நாகர்கோவில் ஸ்பெஷல் அல்லவா?

loved to be loved

டியர் கவி எனது ஃபேவரைட் ஸ்னாக்ஸ்ஸை செய்து காட்டியுள்ளீர்கள் பார்த்தவுடனே அதில் பாதி தட்டை காலி செய்துவிட்டேன். அருமையான குறிப்பை கொடுத்தமைக்கு மனமார்ந்த நன்றி.

ஹாய் மிசஸ்.ஜேக்கப் , எனக்கு சொந்த ஊர் குமரி மாவட்டம்தான். நீங்க முதலில் கற்றுக் கொண்ட ஐட்டமா? அப்போ கண்டிப்பா ஸ்பெஷல்தான். நன்றி
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

டியர் மனோகரி மேடம் உங்கள் பின்னூட்டம் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரொம்ப நன்றி மேடம்.
உங்களுக்கும் பிடிச்ச ஸ்னாக்ஸா? எனக்கும் என்னவருக்கும் ரொம்ப பிடிக்கும். இங்கு கிடைக்கும் பழம் ஊரில் கிடைப்பதை போல் ருசி இல்லையென்றாலும் அடிக்கடி செய்வேன். பாயாசம் செய்வதற்காக எடுத்தி வைத்திருந்த பழமும் பஜ்ஜியாகி காலியாகி விட்டது :-)

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!