என் சந்தேகத்தை க்ளியர் பண்ணுங்கப்பா

என் குழந்தைக்கு 6மாதம் ஆகுது, US க்கு வந்து 1மாசம் ஆகுது,பகலில் 3மணி நேரத்திற்கு ஒருமுறை மில்க் அல்லது சத்து மாவு குடுப்பேன். நைட் 11மணிக்கு பால் குடுத்து தூங்க வச்சுடுவேன், அப்புறம் 4மணிக்கு தான் குடுப்பேன், then காலையில அவ எழுந்ததுக்கு அப்புறம் குடுப்பேன் அது 8மணி அல்லது 9மனி kooda ஆகும்.நைட்ல சில நேரம் அவளே எழுந்துடுவா, சில நேரம் தூக்கத்தில் தான் குடுப்பேன். இது சரியா, நான் எதாவது மாத்தணுமா? bottle milk dhaan kudukaraen....

நைட் உருண்டு புரண்டு தான் தூங்குவா பட் எழுந்துக்க மாட்டா, இது நார்மல் தானே.....

அணுபவசாலிகள் பதில் தரவும்

ஹாய் ஜெயந்தி!
குழந்தைக்கு 6 மாதம் ஆகுதுன்னு சொல்றீங்க. இனி சத்துமாவு கொடுப்பதுடன், திட ஆகாரங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கலாம்.
இட்லி,தோசை நல்லா குழைய வைத்த சாதத்தில் பருப்பு கடைந்து சேர்த்து கொடுக்கலாம்.
இனி பால் கொடுப்பதை குறைச்சிடுங்க. பருப்பு வேகவைக்கும்போதே அதில் சிறு துண்டு கேரட், துளி சீரகம், சிறு துண்டு பூண்டு இப்பிடி சேர்துது வேகவைத்து, நல்லா மசித்து கொஞ்சமா நெய் சேர்த்துகூட கொடுக்கலாம்.
குழந்தைகள் தூங்கும் நேரமும், எழும் நேரமும் எப்பவும் ஒரேமாதிரி இருக்காது. முன்பின் ஆகலாம். அதைப்பற்றி கவலைப்படத்தேவையில்லை.
பகல் நேரத்தில் இனி பாலை குறைச்சிட்டு, சாதம், இட்லி, தோசை என்று கொடுங்க.
இன்னும் அனுபவசாலிகள் வருவாங்க பதில் சொல்ல!
அன்புடன்,
சாய்கீதாலஷ்மி!

அன்பு ஜெயந்தி,
குழந்தைக்கு 6 மாதம் ஆகிறது என்றால், திட உணவுகள் கொடுக்கலாம்.
காலையில் 8 மணி போல ஒரு இட்லியை பால் விட்டு மிக்ஸியில் அடித்து பேஸ்ட் போல் செய்து ஊட்டலாம்.

11 மணி போல 2 பிஸ்கட்டை பாலில் ஊற வைத்து ஊட்டலாம். ஆப்பிளை வேக வைத்து மசித்தும் கொடுக்கலாம்.

மதியம் சாதம், பருப்பு, காரட், பீன்ஸ், பட்டாணி, காலிப்பிளவர், கோஸ் (எந்த காய்கள் வேண்டுமானாலும்) சிறு துண்டு, ஒரு பல் பூண்டுடன் வேக வைத்து மிக்ஸியில் அடித்து ஜீரணப் பொடியும், உப்பும் கலந்து கொடுக்கலாம் (ஜீரணப் பொடி_ -சீரகமும், ஓமமும் சம அளவில் வெறும் வாணலியில் வறுத்து நைசாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்).

மாலையில் 4 மணி போல் பிஸ்கட்டும், 6 மணி போல் ராகிக்கூழும் ஊட்டலாம். இரவு 8 மணி போல் இட்லி ஊட்டலாம்.

அதன்பிறகு தேவைப்பட்டால் 10 மணி போல் பால் குடுக்கலாம். தாய்ப்பால் என்றால் அவ்வப்போது கொடுக்கலாம். பாட்டில் பால் என்றால் குறைப்பது நல்லதே.

எந்த ஒரு உணவையும் காலை வேளையில் கொடுக்க ஆரம்பித்து பழக்க வேண்டும்.
ஒரு புதிய உணவு கொடுத்து ஒரு வாரம் கழித்தே அடுத்த உணவைப் பழக்க வேண்டும்.
இப்ப முதலில் இட்லி பழக்கலாம்.
ராகி கூழ் செய்ய: ராகியை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்(கல் அரித்து, கழுவி).
பிறகு தண்ணீரை வடித்து, ஒரு துணியில் மூட்டை கட்டி வைக்கவும். 8 மணி நேரத்தில் முளை விட்டிருக்கும்.
அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
நைஸ் வடிகட்டியில் வடிகட்டி, தெளிய வைக்கவும்.
மேலாக நிற்ககம் தண்ணீரை வடித்து பாலை அகலமான தட்டில் ஊற்றி காய விடவும்.
நன்கு காய்ந்ததும் மீண்டும் மிக்ஸயில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால், நல்ல பவுடராகி விடும். அதை சலித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
தேவையான போது 2 ஸ்பூன் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு கட்டி இன்றி கரைத்து, அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தால் அல்வா போல் வரும். உப்போ, சர்க்கரையோ சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

ஆரம்பத்திலேயே குழந்தை சாப்பிடவில்லை என்று சர்க்கரை சேர்த்து கொடுத்துப் பழக்கினால், பிறகு காரம் சாப்பிடாது. உப்பு சேர்த்தால் முதலில் துப்பினாலும் பிறகு பழகி விடும்.
எதுவும் உங்கள் கையில் தான். இப்ப அது மண் பொம்மை போல் தான். வாழ்த்துக்கள் ஜெயந்தி.
நன்றி கீதா:-)
அன்புடன்.
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் சாய் & செல்வி madams

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்..... முதலில் தங்களின் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.... இந்த 2நாளில் சாதம் கொடுக்க ஆரம்பித்து விட்டேன், முதலில் ஓங்கரித்தாள், அப்புறம் நல்லா சாப்பிடறா..... கொஞ்சம் கொஞ்சமா மற்றதும் கொடுக்கிறேன்..... செல்வி மேடம், நான் ஏற்கனவே ராகி மாவை கஞ்சியாக்கி கொடுத்தேன், இப்போ தீர்ந்து போச்சு அதான் கொடுக்க முடியல...இங்க US-ல நம்ம ஊர்ல கிடைக்கிற மாதிரி கிடைக்காது இல்லையா? also இங்க காய வைக்கவும் முடியாது......then என்னுடைய main கேள்வியே mrng 4மணிக்கு மில்க் குடுக்கறது சரியா or இப்பவே அந்த பழக்கத்தை மாத்தனுமா? நேற்று காலைல நான் குடுக்கல but அவ 4.30க்கு எழுந்துட்டா அப்புறம் தூங்க 1hrஆயிடுச்சு..... அதனால தான் கேக்கறேன்..... சிலர் சொல்றாங்க அந்த மாதிரி நேரத்தில் தண்ணீர் குடுத்து தூங்க வைக்கலாம்னு,நானும் சில குறிப்புகளில் பார்த்தேன் நம்ம அறுசுவைலயே, பசிக்கும் போது தண்ணீர் குடுத்தா எப்படி தூங்குவாங்க, ப்ளீஸ், க்ளியர் பன்னுங்க மேடம்ஸ்.....

என் பொண்ணு மில்க் குடித்தவுடன் தலை மட்டும் வேர்க்குது, அதுவும் இங்க வந்ததுக்கு அப்புறம் தான், இந்த மாதிரிதான் எல்லா குழ்ந்தைக்கும் இருக்கா, or என் baby-க்கு மட்டும் தான் இப்படி இருக்கா?

Expecting ur reply

நன்றியுடன்
ஜெயந்தி....

மேலும் சில பதிவுகள்