கார தேங்காய் பணியாரம்

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கடலை மாவு - அரை கப்
பச்சரிசி மாவு - 2 கப்
துருவிய தேங்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
பெரிய வெங்காயம் - ஒன்று
கொத்துமல்லித் தழை - ஒரு கட்டு
கறிவேப்பிலை - 2 கொத்து
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

பச்சரிசி மாவு, தேங்காய் துருவல் ஒரு கப், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அதில் கடலை மாவு சேர்த்து மறுபடியும் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியதை மாவில் கலந்து பணியார சட்டியில் ஊற்றி வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்