அயர்ன் செய்வது எப்படி?

அயர்ன் செய்வது எப்படி?
என்னதிது இது ரொம்ப கஷ்டமான்னு கேக்கறவங்களுக்கு இல்லை.. இது புதுசா அயர்னிங் டியூட்டி எடுப்பவர்களுக்கு.. கல்யாணம் ஆன புதிதில் இது என்ன பெரிய விஷயமான்னு நினைச்சு எடுத்துகிட்ட உப தொழில் காலத்தின் ஓட்டத்தில் இது என்னவோ என் வேலையாவே ஆகிப் போனதென்னவோ உண்மை...பொண்ணுங்களுக்கு சுடிதாரும் பாட்டமும் இல்லைன்னா பிளவுஸ் தேய்த்து ( அதுதாங்க அயர்ன்) வைப்பதென்னவோ ரொம்ப ஈசி... ஆனா இந்த ஷர்ட் அயர்ன் செய்வது என்னவோ ராக்கெட் ஸயன்ஸ் மாதிரி.. எந்த கோணத்திலாவது ஒரு சொதப்பல் வரும் அப்புறம் என்ன உங்க பெட்டர் ஹாஃப் "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று சொல்லாம சொல்லுவார்...

சரி சரி.. முதல்ல பேசிக்ஸ்க்கு வருவோம்...
1) ரொம்ப ரொம்ப முக்கியம் "மெட்டீரியல்" "டெம்ப்ரசர்" "நல்ல அயர்ன் பாக்ஸ்"
இந்த நல்ல அயர்ன் பாக்ஸ் எனபதை கோடிட்டுக்கொள்ளவும் என்பதை அடிக்கோடிட்டுக்கொள்ளவும் . கல்யாணம் ஆகி ஒரு ஏறத்தாழ 5 அயர்ன் பாக்ஸ் உடைத்த "கை" நான்...

2) நல்ல மூட்.. இல்லைன்னா சட்டையில் ஓட்டை போட்டா நான் பொறுப்பு இல்லை.. மனசில திட்டிட்டோ இல்லை கோவமாவோ அயர்ன் செய்ய வந்தா நேரிடும் இழப்புக்கு நான் பொறுப்பில்லை ( இது தான் டிஸ்கி - ஹேமா உன் ஸ்டைல் )

3) ஸ்ப்ரே பாட்டில் ( குடிநீர் நிரப்பியது )

4) அயர்ன் போர்ட் அல்லது நல்ல மொத்தமான போர்வை.

முக்கியமா : அயர்ன் செய்து முடிக்கும் வரை வேற அடுப்பில வேலையோ இல்லை அழும் குழந்தையோ இருந்தால் உடனடியாக இந்த வேலையை தற்காலிகமாக நிறுத்தவும்.. எதுக்கு சொல்லறேன்னா.. அயர்ன் செய்ய வந்திட்டா டீக்கு தன்ணீர் வைத்தது மறந்து அடுப்பில பாத்திரம் மட்டும் தனியா தந்தி அடிக்கும்...

இப்ப ஆரம்பிக்கலாமா... முதல்ல அயர்ன் பாக்ஸை ஆன் செய்யுங்க... அதுக்கும் முன்னாடி அதில கொஞ்சம் தண்ணீர் விடனுமா இல்லையான்னு செக் பண்ணுங்க...
சரியான் சூட்டு அளவுல வைச்சு இருக்கீங்களான்னு பாருங்க... துப்பட்டா அயர்ன் செய்ய காட்டன் செட்டிங் தேவையில்லை ...

காட்டன் ஷர்ட் இல்லை பேன்ட் என்றால் கொஞ்சம் தண்ணீர் தெளிச்சுக்கோங்க...

இப்ப தான் கவனம்... காலரை முதலில் அயர்ன் செய்யுங்க ரெண்டு பக்கமும்.

இப்ப வலக்கை எடுத்து எப்படி கை பட்டியை ( ) அயர்ன் செய்யணும். பிறகு பட்டியை அயர்ன்செய்த அதே நேர் கோட்டில கை அயர்ன் செய்யணும். . இடது கையும் இப்படி அயர்ன் செய்யணும்.

இனி தான் கொஞ்சம் டிரிக். சட்டையை பக்க வாட்டில் வரும் கோட்டுக்கு மடிப்பு வரும்வாறு வைத்து மடிக்கவும். டீ ஷர்ட்டை தரையில் பரத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அதேபோல் இருக்கணும்.இப்ப சட்டையின் வெளிப்புறம் அயர்ன் செய்யணும். மேற்புறம் அயர்ன் செய்ததும் உள்பக்கம் செய்யணும்.
இதே முறையை இடது பக்கத்துக்கும் செய்ததும் பின்புறமாக இருக்கும் முதுகு பகுதியை அயர்ன் செய்யவும்.

இப்படி செய்வதால் குறைந்த அளவு நேரத்தில் சரியான முறையில் சட்டை அயர்ன் செய்யலாம். இது ஒரு டிரையல் அன்ட் எரர் முறை தான் ஒரு 10 சட்டை அயர்ன் செய்தா அப்புறம் என்ன நீங்களே உங்க ஆர்ட் வொர்க்கை ரசிக்கும் அளவுக்கு சூப்பரா அயர்ன் செய்வீங்க

எதையுமே ரசனையோட செய்தா அதுவும் ஒரு கலை தான்...

கடைசியா வேலை முடிஞ்சா ஸ்விட்ச் ஆப் செய்வதுடன் வயர் கனெக்ஷனையும் எடுத்து விடுங்க.. எதோ நம்மாலான உதவி இந்த பூமிக்கு..

பி.கு: எனக்கு தெரியும் நிறைய கோஷ்டிக நான் பூமிக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணறேன்னு அயர்ன் செய்யாம இல்லையில்ல குளிக்காமா இல்லையில்ல மேக்சிமம் உதவியா பல் விளக்காம வந்தா .. அய்யா சாமி ஆளை விடுங்க.. நான் ஜூட்

ரொம்ப நாள் கழிச்சி வர்ரேனா.. அதுதான்.. டச்சு விட்டு போயிடுச்சு.. எதுக்கா.. படிச்சச்சா மேல??

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வருக வந்தனம் இலா!
ஹா ஹா இலா நல்லா அயர்னிங் க்ளாஸ் எடுத்திருக்கீங்க. எனக்கு அயர்ன் செய்வது என்றாலே அலர்ஜி. இதுவரை அயர்ன் செய்ய வேண்டிய கட்டாயம் வந்தது இல்லை. எனது மெய்ட் அரைமணி நேரத்தில் 10 சட்டையை அட்டகாசமாக அயர்ன் செய்து விடும் கில்லாடி.
ஒருவேளை அயர்ன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இந்த பகுதி எனக்கு உதவும். அப்போ தேடவேண்டாமேன்னு இப்பவே ஒரு பதிவை போட்டு வச்சுட்டேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் இலா

சூப்பர் டிப்ஸா இருக்கே... இதுக்கு பயந்துட்டுதான் எனக்கு அயர்னிங் பன்னவே தெரியாது நீங்கலே பாத்துக்குங்கன்னு விட்டாச்சு... ஆனா அவர் அவசர அவசரமா அயன் பன்னும் போது பாவமா இருக்கும்....இன்னைக்கு தான் ஒரு 4 சட்டை பன்னலாம்னு கஸ்டபட்டு செய்து முடித்து வந்தேன்....இதுக்காகவே இந்தியா போயிடுலாம் போல இருக்குப்பா . :-)

ஹாய் இலா!
நீங்களா?!! எப்பிடியிருக்கீங்க? ரொம்ப நல்லா காமெடி பண்ணியிருக்கீங்க. அயர்ன் பண்றதில் இருக்கும் கஷ்டம் அயர்ன் பண்றவங்களுக்குதான் தெரியும்.
வீட்டில் எந்த வேலையை வேணும்னாலும் ஜாலியா செய்திடலாம் இந்த் அயர்ன் பண்ற வேலையில் இருக்கிற கொடுமை வேற எதிலும் இல்லன்னு தோணும்.
ரொம்ப நல்ல க்ளாஸ் எடுத்திருக்கீங்க. அப்பிடியே வரிசையா பேண்ட், சுரிதார், துப்பட்டான்னு போட்டுட்டா நல்லா இருக்கும்!உண்மையிலேயே புதுசா அயர்ன் பண்ணக்கத்துக்கிறவங்களுக்கு ரொம்ப உபயோகமாய் இருக்கும்!

ஹாய் இலா

எனக்கும் அயர்னிங்க்கும் ரொம்ப தூரம். உங்க டிப்ஸ் எனக்கு ரொம்ப யூஸ் ஆகும். தேங்ஸ்பா.........

அன்புடன்
மகேஸ்வரி

என்ன இலா நலமா? அப்புறம் எப்படி இப்படியெல்லாம்? :)

எனிவே, எனக்கும் முதலில் கஷ்டமா தான் இருந்தது. அதுவும் இந்த சட்டைகள் அயர்ன் செய்யவே பிடிக்கவில்லை. நானும் ஒரு நண்பரும் சேர்ந்து யூ ட்யூப் எல்லாம் பாத்தோம் - அயர்னிங் டேமான்sற்றேஷனுக்காக!!! நான் ஒரு முறை என் கணவர் சட்டையை அயர்ன் செய்யும் லட்சணம் பார்த்துவிட்டு நண்பர் ஒருவர் கொஞ்சம் சொல்லிக்கொடுத்து செய்து காண்பித்தார். அப்புறம், மாமனார் ஒருமுறை சொல்லிக்கொடுத்திருந்தார். அதை வைத்து தான் இன்னமும் வண்டி ஓடுகின்றது. இன்னமும் மிகவும் நீட்டாக சுருக்கம் இல்லாமல் எல்லாம் செய்யப் பொறுமையில்லை. அப்படி இப்படி என்று மேலோட்டமாக தேய்த்து சட்டென்று முடித்து விடுகிறோம். எனக்கு ஒரே பயம் - ஸாரி எல்லாம் எப்படி செய்வது என்று :) இப்போ எல்லாம் ரின்கில் ப்ரீ சட்டையை தேடிக்கொண்டிருக்கிறோம்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மொக்கை ஆதரவாளர்களே!!! ஹய்யா நானும் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நினச்சேன்:))

கவிசிவா.. கொடுத்து வச்சவங்க நீங்க.. எனக்கு இந்தியால இருக்கும் போது தான் இப்படி .. இங்க நானே ராணி நானே சேவகன் :))

ஹ ஹ ஹ ஹாஷினி!!! நீங்களும் இந்த கொடுமை செய்யற கூட்டம் தானா.. சேம் பின்ச் :))

சாய்கீதா!!! நீங்க எனக்கும் மேல இருக்கீங்க.. அடுத்ததா பாத்திரம் கழுவது பத்தி எழுதலாமான்னு யோசிக்கறேன்.. நிறைய பேருக்கும் பிடிக்காத வேலை அது. என்னதான் டிஷ் வாஷர் இருந்தாலும் குக்கரை ஒரு தேய் தேச்சாதான் பள பளான்னு இருக்கும்.. ஆதரவு தந்தா எழுதறேன் :))

மஹேஸ்வரி!!! நல்லா சொன்னீங்க போங்க..

சந்தனா!!! ரொம்ப நாளைக்கு அப்புறம் நெட் பக்கம் அதிக நேரம் வர முடிஞ்சது :))
யூ டியூப்ல இருக்கா.. அடடா.... கஷ்டபட்ட காலத்தில தெரியலை...
ஒரு முறை என் பிரதர் இன் லா இங்க வந்த போது அயர்ன் செய்வதை பார்த்து வெறுத்து இங்க பாரு இப்படி செய்யனும்ன்னு ஒரு சைட் செய்து காமிச்சா.. அவர் நானே அயர்ன் செய்வேன்னு ஹாயா டீவி பாத்தார்.. தம்பி இது டெமோ தான் புஃல் பிராஜெக்ட் எல்லாம் நீ தான் முடிக்கனும்ன்னு சொன்னேன் :))
//எனக்கு ஒரே பயம் - ஸாரி எல்லாம் எப்படி செய்வது என்று :)
ஆஹா.. இதுக்கெல்லாம் கொஞ்சம் யோசிச்சு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணுமே :D

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,

ரொம்பவே நேரம் இருக்கு போலவே!! இல்லை ரிலாக்ஸேஷனுக்காகவா? இந்த அயர்ன் பண்ற கொடுமையைப் போல வேற எதுவும் இல்லை. இதுக்குப் பயந்தே அயர்ன் பண்ணத் தேவையில்லாத துணியில் உடைகள் வாங்குவேன்.

அடுத்தது, பாத்திரம் தேய்ப்பதா? அதுக்கப்புறம் வீடு கூட்டுவது, துடைப்பது எல்லாம் வருமா? என்னவரை மறக்காமல் இதைப் பார்க்கச் சொல்லணும்.

அடடா...ஆஹா..பேஷ்! இலாக்கா, நீங்க சைக்கிள் கேப்-ல டீ ஆத்த:):) சொல்லித் தருவீங்கன்னு ஜீனோக்கு தெரியும்..ஆனா எப்படி இப்படில்லாம்?? :):)
பாத்திரம் தேய்ப்பதுக்கு அடுத்தபடியா உங்க லிஸ்ட்ல

****வெந்நீர் வைப்பது எப்படி?
****(மைக்ரோவேவ் இல்லாமல்) அடுப்பில் பால் காய்ச்சுவது எப்படி?? [ ஜீனோ ஸ்பாயில்ட் த பர்னர் மெனி டைம்ஸ் இலாக்கா! :( ]

இது போன்ற கடினமான விஷயங்களையும் விளக்கமாகவும் விரிவாகவும்:) தரும்படி ஜீனோ தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

ஹாய் இலா!
அடுத்து பாத்திரம் கழுவறதைப்பத்தி ஆதரவு தந்தா எழுதறீங்களா??
என்ன இலா நீங்க,, ஆதரவுன்னு ரொம்ப பெரிய வார்த்தை சொல்லிட்டீங்க.
டிஷ்வாஷர் 2 மாசம் முன்னாடிதான் நாங்க வாங்கினோம். உண்மையில் டிஷ்வாஷர் நம் ஊர் சமையலுக்கு உபயோகப்படாதுன்னு சொன்னவங்கதான் அதிகம்.
ஆனா, வாங்கின பிறகுதான் அதன் அருமை தெரியுது,
வாங்கி இரண்டுநாட்களில் எந்த மாதிரியெல்லாம் யூஸ் பண்ணலான்னு நானே முழிச்சிட்டு இருந்தேன்.
அப்ப, என் தோழி ஒருவர் போன் செய்து " டிஷ்வாஷிங்கும், ஹேண்ட் வாஷிங்கும் என்ன வித்தியாசம்னு சீரியஸாய் கேட்டாங்க.
எனக்கு உடனே என்ன சொல்றதுன்னு தெரியலை.
ஏற்கெனவே பாத்திரமெல்லாம் சரியா அடுக்காம, நிறைய வாஷிங்பவுடர் போட்டு சரியா க்ளீன் ஆகாம அங்கங்கே பாத்திரத்தில் நுரை வேறு!
அந்த கடுப்பு வேற!
" ஹேண்ட் வாஷிங்கில் பாத்திரங்களை கழுவி கவிழ்த்து வெக்கணும்.
டிஷ்வாஷிங்கில் கவிழ்த்து வெச்சு கழுவனும். இப்போதைக்கு இதைத்தவிர வேற ஒண்ணும் எனக்கு தெரியலன்னு சொன்னேன் பாருங்க.
என் கணவருக்கு சிரிப்பு தாங்கல,
"உன் விளக்கத்தினை கேட்டா டிஷ்வாஷரை கண்டுபிடிச்சவன் தற்கொலை பண்ணிக்குவான்.உனக்கு தெரியாட்டி இன்னும் கொஞ்சம் நாள் யூஸ் பண்ணிட்டு சொல்றேனு சொல்றதை விட்டுட்டு இப்பிடியா விளக்கம் கொடுப்பாங்கன்னு," சைடில் திட்டு வேற!
என்னோட அந்த விளக்கத்திற்கே அவங்க தெளிவாகி ரேண்டே நாளில் அவங்களும் வாங்கிட்டாங்க.
அப்பப்ப ஏதாவது எழுதுங்க இலா. அறுசுவை ரொம்ப டல்லடிக்கிறா மாதிரி தோணுது.
எழுத நீங்க ரெடின்னா(சிரித்து) ஆதரவு தர நாங்களூம் ரெடி!

மேலும் சில பதிவுகள்