மைதா பணியாரம்

தேதி: November 21, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.4 (5 votes)

 

மைதா மாவு - 2 கப்
வெல்லம் தூள் - ஒரு கப்
ஏலக்காய் - 4
வாழைப்பழம் - 2
முந்திரி - 20
திராட்சை - 15
உப்பு - கால் தேக்கரண்டி


 

வெல்லத்தை நன்கு தூள் செய்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து விட்டு சேர்க்கவும். அதில் ஏலக்காய் தூள் மற்றும் தூள் செய்த வெல்லத்தை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த முந்திரி திராட்சையை கலந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும். கரைத்து வைத்திருக்கும் மாவு இட்லிமாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
மாவு கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும். வாழைப்பழத்திற்கு பதிலாக ரவை சேர்த்தும் செய்யலாம்.
அடுப்பில் பணியார கல்லை வைத்து அதில் ஒவ்வொரு குழியிலும் நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
மேலே சிறிது நெய் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து அதில் உள்ள குச்சை கொண்டு திருப்பி விடவும், அல்லது கரண்டியை வைத்து திருப்பி விடவும்.
மேலும் 2 நிமிடம் கழித்து எடுத்து விடவும். சுவையான மைதா பணியாரம் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. அனுரேகா </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Madam, can i use wheat flour instead of maida? Please clarify my doubt.

நல்ல குறிப்பு.நானும் இதேபோல் அடிக்கடி விருந்தினர்
வந்தால் செய்ய எளிதாக இருப்பதால் இந்த பணியாரம் செய்வேன்.ஆனால் குழிசட்டியில் அதிகம் பழக்கமில்லாததால் எண்ணையில் பொரித்தெடுப்பேன்.
பாராட்டுக்கள் அனு....

ஹம்சா,கோதுமை மாவில் செய்தாலும் நன்றாகதான் இருக்கும்.வெல்லத்திற்கு பதில் சர்க்கரை சேர்த்தாலும் நன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் தேங்காய் துருவல் கூட சிறிது சேர்க்கலாம்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

I like this recipe very much,it's easy to make.I will try this recipe.Thanks to Mrs.Anurekha.

Arusuvaiyil parthu nan mudhalil seidhu parthathu, paniyaram arumaiyaga vanthathu,ungalal veetil paratum kidaithathu,nandri madam