மாவு சட்னி

தேதி: November 29, 2009

பரிமாறும் அளவு: 4 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

இட்லிமாவு [சிறிது புளித்தது] - ஒருகுழிகரண்டி
சின்னவெங்காயம்- 10
கடுகு, உளுந்தம்பருப்பு- 1ஸ்பூன்
மிளகாய்வத்தல் - 10
பெருங்காயம்- சிறிது
தேங்காய்- அரைமூடி
எண்ணை- ஒருகுழிகரண்டி


 

சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
தேங்காய்,வத்தலை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய் வெங்காயத்தை போட்டு சற்று முறுகலாக வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
பின்பு இட்லிமாவில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்து அதை கொதிக்கும் விழுதுடன் சேர்த்து உப்பை சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவேண்டும்.
வத்தல் அதிகம் சேர்த்தால்தான் இந்த சட்னி சுவையாக இருக்கும்.


வெங்காயத்தை வதக்கும் போது கவனமாக கருகி விடாமல் ஆனால் முறுகலாக வதக்க வேண்டும்.முறுகலாக இருந்தால் தான் மாவு சட்னி சுவையாக இருககும்.

மேலும் சில குறிப்புகள்