advice please

வணக்கம் தோழிகளே

அனைவரும் நலம் தானே?
எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்னை.நான் தற்பொழுது எட்டு மாதம் கர்ப்பமாக உள்ளேன்.எனது முதல் மகளுக்கு இரண்டு வயது ஆகிறது.அடுத்த மாதம் எனது பெற்றோர் ஊரில் இருந்து வருகிறார்கள்.என் மகள் ரொம்ப விஷமம்.விஷமம் அன்றால் கொஞ்சம் நஞ்சம் அல்ல,என்னக்கு உதவிகள் செய்வாள்,சமர்த்தாக இருப்பாள்.அனால் நாங்க முன்ன இருந்த எடத்துல அவளுக்கு விளையாட்டு துணைக்கு ஆளில்லை.அதனால போர் அடிச்சா எதாவது விஷமம் பண ஆரம்பிச்சிடுவ.என்னால இப்பலாம் அவ கூட முழு நேரம் விளையாட முடியல.

இங்க அமெரிக்க ல தன மக்கள் பத்தி தெரியுமே உங்களுக்கு.குழந்தை ஆச்சேனு புரிஞ்சுக்க மாட்டாங்க.அதனால நாங்க வெளில லம் ரொம்ப ஸ்ட்ரிக்டா வளர்கிறோம்.ஆனாலும் ஒரு அளவுக்கு தன கேட்ப.

இப்ப எங்க அப்பா ,அம்மா ஊருல இருந்து வராங்க,என்னக்கு எங்க அவங்க ரொம்ப செல்லம் குடுத்து கெடுதுடுவங்கலோனு பயமா இருக்கு.நான் இதை அவங்க கிட்ட சொல்லவும் முடியாது தப்ப நெனசுகுவங்க.அவங்க என் பொண்ண பார்த்தது அவ அஞ்சு மாதம் குழந்தைய இருந்தப்ப.அதனால கண்டிப்பா செல்லம் தன.நான் எப்படி அவன்களுக்கு பக்குவமா எடுத்து சொல்றது?ரொம்ப சொன்னாலும் நாங்கலாம் பிள்ளைவளர்களியனு கேட்பாங்க?

என்ன செயலாம்?சில சமயம் தேவை இல்லாம குழப்பிகரனொன்னு பயமா இருக்கு.

வணக்கம். இது எனது முதல் பதிவு. நானும் 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன்.உங்களது கவலை இப்பொது பிறக்கும் பாப்பாவையும் பாதிக்கும் என்பதால் மனதை அமைதியாக வைத்து கொள்ளவும்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை கிடையாது, அப்பா அமம வருவது கொஞ்சம் காலம் அவர்கள் சந்தோஷமா செல்லமாவே வைத்து கொள்ளட்டும்., இப்ப அடுத்து பிறக்க போகும் குழந்தய பற்றி மட்டும் பாருங்கள், தனியா தவிக்காம பார்த்து கொள்ள வராங்களேன்னு சந்தோஷ படுங்கள். இந்த காலத்தில் எல்லா குழந்தைகளும் ரொம்ப விஷமம் தான், பிறகு சரியாகிடும்.

Jaleelakamal

Hi preethi,

Why u r getting worried about this, u and ur kid must be lucky to have ur parents with u. Ur parents will be of great help to u, and ur kid will also have a great time na, let her be naughty and stupid, as this is the age for her to be happy and to enjoy. Tell them to watch her all the time and ask them to teach her good habits. ok then be happy with all the love and affection of ur parents.

UmaNagarajan.
Sticking to anyone or anything makes u weaker.

Sticking to anyone or anything makes u weaker.

நலமா?உங்கள் குழந்தை நலமா. நீங்கள் கவலை பட வேண்டாம்.தாத்தா பாட்டி இருக்கும் போது ஓவர் செல்லமாகத்தான் இருப்பார்கள். ஊருக்கு போனதும் ஒரு மாதத்தில் பழையபடி மாறி விடுவார்கள்.எனக்கு இதில் அனுபவம் உள்ளது.எனக்கும் டெலிவரிக்காக மாமா, மாமி வந்திருந்தார்கள் செப்டம்பர்லதான் போனார்கள்.இவ்வளவு நாள் மனதில் இருந்த பாசத்தை பொழிவதால் செல்லம் அதிகமாகவே இருக்கும் .கவலை படாமல் சந்தோசமாக இருங்கள்.

ஹாய்
பதிலளித்த அனைவருக்கும் நன்றி.
உண்மையிலே என் அப்பா,அம்மா வரும் தினத்தை ஆவலோடு எதிர் பார்த்துகிட்டு இருக்கேன்.

இடைல ஒரு சின்ன பயம்,விஷமம் அதிகமாகிடுமொனு?அவளவு தான்.எல்லோருக்கும் நன்றி.

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்