காலிஃப்ளவர் கறி

தேதி: December 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (13 votes)

 

காலிஃப்ளவர் - ஒரு சிறிய பூ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று(சிறியதாக)
முந்திரி - 12
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள்- அரை தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை, லவங்கம் - ஒன்று (சிறியதாக)
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது


 

காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கின காலிஃப்ளவரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் ஏழு முந்திரி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், கடலைபருப்பு, கறிவேப்பிலை, மீதமுள்ள முந்திரி போட்டு தாளிக்கவும்.
பொரிந்ததும் நறுக்கின வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் மசாலா தூள் அனைத்தையும் போட்டு சிறிது நேரம் வதக்கி சுடுத் தண்ணீரில் நன்கு கழுவி வைத்திருக்கும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி விடவும்.
அதன் பின் அரைத்திருக்கும் விழுதை ஊற்றி சிறிது தண்ணீர் தெளித்து மல்லி தழை தூவவும்.
பின்னர் குக்கரை மூடி வெயிட் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
மசாலா தண்ணீர் விடாமல் கத கதவென்று இருக்கும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி சீனியை தூவி அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
சுவையான காலிஃப்ளவர் கறி ரெடி. இது சப்பாத்தி, குப்புஸ், பரோட்டாவிற்கு நன்றாக இருக்கும். புலாவ், கிச்சடியுடன் கூட சாப்பிட நன்றாக இருக்கும். இந்த சுவையான குறிப்பினை <b> திருமதி. அப்சரா </b> அவர்கள் செய்து காட்டியுள்ளார். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

காலிபிளவரில் கிரேவி செய்தால் ரெம்ப பிடிக்கும் அப்சரா, பார்க்கவே சாப்பிட ஆசை வந்திடுச்சு.

சோம்பு தூள் கடையில் கிடைக்குதா?எனக்கு கிடைக்கவில்லை.சோம்பை மிக்ஸியில் தூள் செய்து சேர்க்கவா?

இந்த வாரம் செய்து சொல்கிறேன்..

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அப்சரா பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. இந்த வாரம் சப்பாத்திக்கு இதுதான் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் ரேணு,கவி எப்படி இருக்கீங்க?
ரேணு...சோம்பு தூள் லூலூ மார்க்கெட்டில் கிடைக்குமே.....(fennel powder)ட்ரைப் பண்ணி பார்த்து சொல்லுங்க...
கவி பின்னூட்டத்திற்க்கு ரொம்ப நன்றிங்க...
நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

காலிபிளவர் கறி, நல்ல மணமாக இருக்கும் போல் ரொம்ப நல்ல குறிப்பு அப்சாரா

Jaleelakamal

தங்கள் பின்னூட்டத்திற்க்கு மிகவும் நன்றி மேடம்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

i try ur recipe its came out very well and its very taste thanks for ur recipe

ஹாய் ஸ்ரீநாத் சார்(சார்தானே....)தங்கள் பின்னூட்டத்தை கண்டு மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து சொன்னதற்க்கு மிகவும் நன்றிங்க....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா இன்று உங்கள் காலிஃப்ளவர் கறி செய்தேன், சுவை அட்டகாசமா இருந்தது.... சப்பாத்தியோடு சாப்பிட நல்ல காம்பினேஷன்... கூடுதலா ஒரு சப்பாத்தி உள்ள போச்சு :-) ....

அநேக அன்புடன்
ஜெயந்தி

ஹாய் சஜ்வீ.....எப்படி இருக்கீங்க..?
உங்களுடைய பின்னூட்டம் கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி.செய்து பார்த்து உடனே தெரிவித்ததற்க்கு நன்றிங்க...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

காலிஃப்ளவர் கறி நல்லா டேஸ்டா இருந்ததுடா;-)
ரொம்ப நன்றி;-)

Don't Worry Be Happy.

ஜெயா எப்படி இருக்கீங்க?
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிங்க...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

hi, yesterday i prepared this recipe.. it was very nice and tasty... thanks to apsara...

romba nall irukku akka, thanks

இன்று உங்க காலிஃபிளவர் கறி செய்தேன். சூப்பரான சுவை. சப்பாத்தி கூட அருமையா இருந்தது. நன்றி

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.