மர பூந்தொட்டி பாகம் - 2

தேதி: December 14, 2009

5
Average: 5 (2 votes)

 

டெக்கிங் பலகை (decking) - குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவு துண்டுகள் கிடைக்குமாறு
பீடிங் பலகை (beading) - 35 செ.மீ துண்டுகள் - 2, 55 செ.மீ துண்டுகள் - 2 கிடைக்குமாறு
ஆணிகள் - 5 செ.மீ, 2.5 செ.மீ
வாள்கள்
சுத்தியல்
மூலைமட்டம்
இறுக்கிகள்
ட்ரில்லிங்க் மெஷின் & பிட்ஸ்
பென்சில் / மார்க்கர்
பெயிண்ட் செய்து கொள்ள விரும்பினால் டெக்கிங் பெயிண்ட் & பிரஷ்
ஏதாவது 25 செ.மீ நீளப்பலகைத் துண்டுகள் - 4, 45 செ.மீ நீளப்பலகைத் துண்டுகள் - 2 (இவை பின்னால் அகற்றப்பட்டு விடும் எனவே நல்லதாக இருக்க வேண்டியது இல்லை.)

 

ஐந்தாவது துண்டாக உள்ள தொட்டியின் அடிப்பகுதியை நீளவாக்கில் நிமிர்த்து வைத்து, நீளப்பலகையின் துளையிட்ட பகுதி ஒன்றை அதன் மேல் இருக்கும்படி வைக்கவும். பிறகு பலகையை படத்தில் காட்டியுள்ள விதமாக பிடித்துக் கொண்டு ஒவ்வொரு துளைகளிலும் பெரிய ஆணியை வைத்து அடித்து இணைத்துக் கொள்ளவும். டெக்கிங் பலகையின் அழுத்தமான பகுதி தொட்டியின் உட்புறம் வருமாறு அமைய வேண்டும்.
இதேப் போல் துளையிட்ட மற்றொரு நீளப்பலகையை தொட்டியின் மறு பக்கத்தில் வைத்து இணைக்கவும்.
இணைத்த இரண்டு பலகையும் தொட்டியின் அடிப்பாகத்தில் சரியான விதத்தில் அமைந்து இருக்கிறதா என்று சரிப்பார்த்து விட்டு தொட்டியை நேராக நிமிர்த்து வைக்கவும். அதன் மேல் மூன்றாவது துண்டாக பூந்தொட்டியின் கால்களில் துளையிட்ட பகுதியை வைத்து ஆணியை அடித்துக் கொள்ளவும்.
நான்காவது துண்டாக மற்றொரு கால்பகுதியை அதன் எதிர்ப்புறத்தில் வைத்து இணைத்துக் கொள்ளவும்.
இப்போது தொட்டியின் மேல் விளிம்பு மறையக் கூடியவாறு பீடிங் பலகையை அடிக்க வேண்டும். அதன் இரண்டு பக்கங்களிலும் பீடிங் பலகை சிறிது வெளியே நீண்டு இருக்குமாறு விட்டு படத்தில் காட்டியுள்ளவாறு பலகையை பிடித்து கொண்டு தொட்டியின் மேற்பகுதியில் ஆணிகள் அடித்து இணைக்கவும். இதற்கு சிறிய ஆணிகளைப் பயன்படுத்தவும்.
பீடிங் பலகை அடித்த முனைப்பகுதியை 45 டிகிரி சாய்வாக வருவது போல் குறித்து கொண்டு மீதியுள்ள பகுதிகளை அறுத்து எடுத்துக் கொள்ளவும்.
மீதமான பீடிங் பலகை துண்டுகளின் நீளம் போதுமானதாக இருந்தால் அதனையே திருப்பி மறுபக்கத்திற்கு உபயோகிக்கலாம். இவற்றை இடைவெளி வராதவாறு மிக நெருக்கமாக பிடித்து ஆணிகள் அடித்துக் கொள்ளவும்.
நான்கு பக்கமும் பீடிங் பலகை அடித்து முடித்ததும், தொட்டியின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் நீளப்பலகைத் துண்டுகளை எடுத்து விடவும்.
இப்போது நீள்வடிவ சதுர மர பூந்தொட்டி தயார். பெயிண்ட் செய்யாமலே இந்த தொட்டி அழகாக இருக்கும். இந்த தொட்டிகளில் தேவைக்கு மேல் நீர் தேங்கி நின்று செடிகளைப் பாழாக்காது.
டெக்கிங் பெயிண்ட் அடித்துக் காயவைத்துக் கொண்டால் மேலும் அழகு சேரும். தொட்டியின் உட்புறம் மண்ணுக்கு மேலாகத் தெரியும் பகுதிக்கு மட்டும் பெயிண்ட் செய்தால் போதுமானது.
மரத்தாலான இந்த பூந்தொட்டியை திரு. கிறிஸ் அவர்கள் மிக நேர்த்தியாக செய்து காட்டியுள்ளார். தொழிலாக அல்லாமல், தச்சு வேலை செய்வதை தனது பொழுதுபோக்காக வைத்திருக்கும் இவர், வீட்டிற்கு உபயோகப்படும் சிறிய அளவிலான மரப்பொருட்களை, ஓய்வு நேரங்களில் இவரே செய்துவிடுகின்றார். இவர் அறுசுவைக்கு குறிப்பு வழங்குவது இதுதான் முதல்முறை என்றாலும், இவர் தச்சு வேலை செய்யும் நேரங்களில், பலகைகளை பிடித்துக்கொள்வது போன்ற உதவிகளைச் செய்து வரும் இவரது துணைவியார் அறுசுவைக்கு புதியவர் அல்ல. அவரது பெயர் "இமா' :-)

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

திரு.கிறிஸ், அழகான பூந்தொட்டி.
இமா, எங்கேயோ இந்த பூந்தொட்டியை பார்த்த ஞாபகம். பிறகு நினைவு வந்துவிட்டது. உங்கள் ஆல்பத்தில்.

///பலகைகளை பிடித்துக்கொள்வது போன்ற உதவிகளைச் செய்து வரும் இவரது துணைவியார் அறுசுவைக்கு புதியவர் அல்ல. அவரது பெயர் "இமா' :-) ///

பலகைகளை பிடித்து உதவிய இமாக்கும் வாழ்த்துக்கள்.
வாணி

நன்றாக இருக்கு அங்கிள்!
ஆன்ட்டி, உங்கள் உதவி மிகவும் இன்றியமையாதது! மேல வைங்கோ!! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

நன்றி வாணி. :) ஆல்பத்தில் உள்ளது சதுரமான தொட்டி. இது வேறு அளவு, நீள்சதுரம். :)
நன்றி ஜீனோ. :) இது மேல வைக்கிறதுக்கு இல்லை ஜீனோ. தரையில மிளக்காய்ச் செடிகளோடு இருக்கிறது. :)
ஓ! உதவியைச் சொல்றீங்களா!! :) சரியாகப் பார்க்கவில்லை. :)
அன்புடன்
திரு. & திருமதி. க்றிஸ்

இமா அம்மா கிருஸ் அங்கில் சூப்பர்... ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்...

///அன்புடன்
திரு. & திருமதி. க்றிஸ் j-chris ///

அப்ப இது? குழம்புது விளக்கம் பிலீஸ்...இமா அம்மா?

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

அன்பு க்ரிஸ்-மா :) (கரிஷ்மா இல்லைங்கோ :)

அங்கிள் தன் துணைவி வளர்த்த செல்லங்களுக்கு எல்லாம் வீடு கட்டித் தந்திருக்கார் தானே?

மிளகாய்ச்செடிக்கா இத்தனை பெரிய தொட்டி? எனக்கு ஒரு சிம்பிளான சந்தேகம் வருது - அதை தோட்டத்து மண்ணுல முளைக்கு விட்டாலே நல்லா வளர்ந்துடுமே :)

நல்ல திறமையான வேலைப்பாடு - ஆச்சரியப்பட வைக்கறீங்கள் அங்கிள்! அந்த அழகான டீ டேபிள் க்கான ப்ரம்மாவும் நீங்கள் தானா?

போனாப் போகுது - உதவி செய்தவருக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்திடுங்கோ அங்கிள்!

ஜீனோ - உங்களுக்குன்னே பண்ணின மாதிரி இருக்கே - மிளகாய்ச் செடிகளோட :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹா ஹா - உங்க ப்ரொபைல் படிச்சு சிரிச்சுட்டேன் :) அப்ப சமைத்து அசத்தலாம் ல வந்த குறிப்பையெல்லாம் செஞ்சது நீங்களோஓஓஒ :)

இமா வோட ஆப்சன்ஸ் ஐ நீங்க அங்க பொறுத்துக்கொள்வது போன்று அவங்க ப்ரசன்ஸ் ஐ நாங்க இங்க பொறுத்துக்க வேண்டியதாயிருக்கு :)

பலகையடிக்கப் போறவருக்கு இதை ப்ரிண்ட் பண்ணி கொடுத்து நானும் கூட பலகையெல்லாம் எடுத்துக் கொடுத்து ஹெல்ப் (மட்டும்) பண்ணலாம்னு இருக்கேன்!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நானும் சந்தனாவை வழிமொழிகிறேன்... கடைசி இரு வாக்கியங்களையும் தவிர்த்து...

பிரபா, பாகம் இரண்டு கண்டுபிடித்து விட்டீர்கள். :) பாராட்டுக்கு நன்றி. நான் திருமதி. இமா க்றிஸ். சரிதானா! :)

ஹாய் சிம்பிளான சந்தேக சந்தனா அவர்களே! வருக வருக. :) 1. ஆம். 2. ஆம். இங்க 'ஆல் சீசன்' செடிகள் மட்டும்தான் தோட்டத்து மண்ணுல. மீதி எல்லாம் பாத் டப்ல வைத்து வெயில் போகும் பாதைக்கு அப்பப்போ நகர்த்தி... பிறகு மரம் காய்த்து முடிந்ததும் தொட்டியை ஓரமாக அடுக்கி வைக்கிறது. தோட்டத்துல மண் எங்க இருக்கு! எல்லா இடத்தையும்தான் வாணியின் மூன்றாவது பிள்ளைகள் ஆக்கிரமித்து இருக்கிறார்களே.
3. பாதிப் பிரம்மா. :) நாங்கள் மூவர் உட்கார்ந்து டீ குடிச்சு யோசிச்சது அந்த டீ டேபிள் டிசைன்.
//போனாப் போகுது// என்னே பெருந்தன்மை. நன்றி. :)
//ஜீனோ - உங்களுக்குன்னே பண்ணின மாதிரி இருக்கே - மிளகாய்ச் செடிகளோட :)// ?? !!! ??? !!! :)))))))
4. ?? ஹா ஹா!!? அசத்தியது நான். ;(
//ப்ரசன்ஸ் ஐ நாங்க இங்க பொறுத்துக்க வேண்டியதாயிருக்கு :)// கர்ர் :) எல்லாம் நான் படிக்கிறேன் என்று தெரிஞ்சும் இப்பிடிப் பண்றாங்க. என்னத்தைச் சொல்றது! காலக் கொடுமை! :)
//ப்ரிண்ட் பண்ணி// //நானும் கூட பலகையெல்லாம் எடுத்துக் கொடுத்து// எதுக்கு சிரமம்? அதுதான் மண்ணில் நட்டால் தன்னால் முளைக்குமே! :)

செபா! தேனுக்கு எதற்கு கிரீடம் செய்யக் காட்டிக் கொடுத்தீர்கள்! என் காலை வாரும் சந்தனாவுக்குத் துணை போவதற்கா? ;)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

//எதுக்கு சிரமம்? அதுதான் மண்ணில் நட்டால் தன்னால் முளைக்குமே! :)//

இதுக்கு பதில் - தோட்டத்துல மண் எங்க இருக்கு! எல்லா இடத்தையும்தான் வாணியின் மூன்றாவது பிள்ளைகள் ஆக்கிரமித்து இருக்கிறார்களே. :)

இதெப்படி இருக்கு :)

தேன் - கடைசி ல மூணு வரியல்லோ இருக்கு.

//கர்ர் :) //

குறட்டையெல்லாம் பலமா இருக்கே :)

அந்த டீ டேபிள் நல்லா இருக்குன்னு சொன்னதும் அங்கிளோட போட்டிக்கு வந்துட்டீங்களே :) சும்மா சொன்னேன் இமா - அது ரொம்ப இன்னொவேட்டிவான ஐடியா! அடுத்ததா ஜீனோ குடும்பத்துக்கு இடம் கொடுத்திருந்தீங்க. அதுவும் அழகா (ஜீனோவை தவிர்த்து) இருந்தது. இது போன்ற டேபிள் எங்கயாச்சும் பாத்து செய்ததா இல்லை நீங்களே யோசித்ததா? அப்படியென்றால் காப்பி ரைட் கூட வாங்கி வைக்கலாம்!

//எல்லாம் நான் படிக்கிறேன் என்று தெரிஞ்சும் இப்பிடிப் பண்றாங்க. //

அது அங்கிளுக்கு போட்ட பதிவன்றோ - இந்த இமா கண்ணில எப்படி பட்டது?? குழப்பத்துடன் சந்தனா :)

இப்படிக்கு,
சந்தனா

ரஜினி மாதிரி இல்லை. :)

அது //கர்ர் :) //ச்சிப்பு. :)

நாங்களே யோசித்ததுதான். 'டிஸ்ப்ளே பானல்' க்றிஸ் ஐடியா; 'எக்ஸ்பான்ஷன் விங்க்ஸ்' மூத்தவர் கொடுத்தது; விங்க்ஸ் & கால் டிசைன்ஸ் நான் பண்ணியது. ஆனாலும் எல்லாமே மூன்று பேரும் சேர்ந்து பேசி முடிவெடுத்ததுதான். பாராட்டுக்கு நன்றி நந்தனா - ஒரு ரைமிங் ஆக இருக்கட்டுமே என்று.. :D

(அடைப்புக்குறிகள் நான் பார்க்கவில்லை.) :)

சிலர் செய்து கொடுக்கும்படி கேட்டார்கள். நேரம் இட வசதியின்மை காரணமாக இயலவில்லை.
தற்போது பெண்கள் ராஜ்ஜியம். :) அடுத்து குடியேற இன்னொரு குடும்பம் தயாராக இருக்கிறார்கள். விரைவில் குடிபோகிறார்கள்.

என்னால் 'அன்பு'க்கே இன்னமும் ஒரு 'டீ ரைட்' கூட வாங்க முடியவில்லை. ;(

தற்போதைக்கு அங்கிளும் நானே, ஆன்ட்டியும் நானே. :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பதிலுக்கு நன்றி இமா!! பிற்காலத்தில் எப்பவாவது யாரிடமாவது சொல்லி செய்து பாக்கனும். அடுத்த குடியேற்றத்தை நிகழ்த்தி புகைப்படத்தையும் வெளியிடுங்கள்!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

சூப்பர் பூந்தொட்டி அங்கிள் வாழ்த்துக்கள், இன்னும் இதுபோல நிறைய எளிமையா கொடுத்து அசத்துங்க..., இமாம்மா எம்மாஆஆஆஆஆஆ பெரிய உதவி செஞ்சிருகீங்க உங்களுக்கு என் முதல் வாழ்த்துக்கள் (நீங்க பலகையை பிடிச்சுக்கலனா அங்கிளால செய்தே........இருக்க முடியாதுல்ல!!!)....

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

திரு. க்றிஸ் அவர்கள் செய்த மரத்தொட்டியில் வளர்ந்து, காய்த்திருக்கும் மிளகாய் செடிகளின் படம்

<img src="files/pictures/flower-tub.jpg" alt="picture" />

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta