குழந்தைகளுக்கான பெயர்கள்

தலைப்பில் 'குழந்தைகளுக்கான பெயர்கள்' என்று குறிப்பிட்டிருந்தாலும், முக்கியமாக குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை எவை என்பதைப் பற்றிய அறுசுவை உறவுகளின் கருத்துக்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன.

அரட்டை இழை 100 ல் சகோதரி ப்ரீத்தி அவர்கள் சிறியதாய், தமிழ்ப் பெயராய் ஆண் குழந்தைக்கான பெயர்கள் கேட்டிருந்தார். நானும் ஆர்வமாக ஒரு பெயர் சொல்லி இருந்தேன். :) பிறகு அரட்டைதான் தொடர்கிறது. ப்ரீத்திக்கு பதில்கள் எதையும் காணோம். :)

அவருக்கு உதவும் நோக்கில் மன்றத்தில் தேடிப்பார்த்தேன், குழந்தைகளுக்கான பெயர்கள் பற்றித் தனி இழைகள் இருப்பதாகத் தெரியவில்லை. ' 'க' எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தையின் பெயர்' (தொடர்பு http://www.arusuvai.com/tamil/forum/no/13729 ) என்று சகோதரி ஸ்ரீதேவி தொடங்கி இருந்த இழை ஒன்று மட்டுமே கண்ணில் பட்டது.

எனவே ப்ரீத்திக்கும், குழந்தை வரவுக்காகக் காத்து இருக்கும் ஏனையோருக்கும் பயன்படட்டும் எனும் நோக்கில் இந்த இழை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

சில பெயர்கள் சூட்டுவதால் பிற்காலத்தில் சில சங்கடங்கள் வருவது உண்டு. பெயர் சூட்டும் போது அப்படி ஆகும் என்று பெற்றோர் நினைத்திருக்க மாட்டார்கள். அது போன்ற சங்கடமான பெயர்களையும் அவற்றால் பிற்காலத்தில் என்ன சங்கடங்களுக்குக் குழந்தையும் பெற்றோரும் முகம் கொடுக்க நேரும் என்பது போன்றவற்றையும் இங்கு பதியலாம்.

குறிப்பிட்ட பெயர் உள்ளவர் தங்களுக்கு என்ன உறவு அல்லது 'இன்னார் பிள்ளை' என்பது போன்ற விபரங்களைக் கொடுப்பதைக் கூடுமானவரை தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். :) இந்த இழையில் பதியப்படும் கருத்துக்கள் பயனுள்ளதாக இருக்கவேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பது என் எண்ணம்.

வருக. வந்து உங்கள் பெறுமதி வாய்ந்த கருத்துக்களைப் பதிவு செய்க.

குழந்தையை எதிர்பார்த்து இருப்போர்க்கு என் வாழ்த்துக்கள். :)

அன்புடன் இமா

ஹாய் அம்மா உங்க கருத்து எல்லாரும் ரொம்ப நல்லதாக இருக்கு. அறிந்து கொள்ள வேண்டிய விசயம் தான். ஆனால் எனக்கு இதை பின்பற்ற கடவுள் வழிகாட்ட வில்லை அம்மா. அப்படி ஒன்னு நடந்தா உங்க கருத்துபடி கண்டிப்பா நடப்பேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ப்ரீத்தி, உங்கள்க்காக ஜீனோ இந்தியன் பேபி பாய் நேம்ஸ் என்று கூகுள் செய்தபோது வந்த சில லிங்க் இதோ..பாருங்கோ..பெயர்களுடன் மீனிங்கும் இருக்குது..

http://www.iloveindia.com/babynames/boy-a.html

http://www.indastro.com/babyname/hboys.php?vr=A

http://www.indianchild.com/indian_baby_names.htm

உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று ஜீனோ நம்புகிறது!:) இன்னும் பலப்பல லிங்குகள் வந்து கொட்டுது! நீங்க ப்ரீ டைம் இருக்கப்போ இணையத்தில பாருங்கோ.:)

சோனியா, இவ்வளவு தூரம் வந்தது ஓபன் ஆகாத அறுசுவைய:) கதவை உடைச்சு:) உள்ள வந்திருக்கீங்க! வந்ததுக்கு அட்லீஸ்ட் ஒரு பேராவது சொல்லிட்டு போயிருக்கலாம்..ஹி,ஹி!:)
இப்ப இருந்தே உங்க பாப்பாக்கும் பெயர் செலக்ட் பண்ண ஆரம்பியுங்கோ!இந்த லிங்க் எல்லாம் விரைவிலே உங்களுக்கும் யூஸ் ஆக ஜீனோவின் வாழ்த்துக்கள்!

ஆன்ட்டிக்கு ஒரு ஸ்பெஷல் _()_ !!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அருண்
ஆதித்தன்
அனுபவ்
ஆதவன்
அனிருத்
அபினவ்
அர்ஜுன்
ஆகாஷ்
அபிலாஷ்
அவ்யுக்த்

இதெல்லாம் ஜீனோ டைப் பண்ண ஆரம்பித்த பெயர்கள்..அப்புறம் மண்டைல பல்ப் எரிஞ்சது..உடனே ஜீனோ கூகுள் பண்ணிடுச்சி! :D :) :D

//இங்கு வந்து பெயர் சொல்வோர் அனைவருக்கும் ஆளுக்கொரு பப்பி இலவசமாக வழங்கப்படும். :)//
ஆன்ட்டி..பப்பி மீன்ஸ் வாட் பப்பி? ரியல் பப்பி ஆர் சாஃப்ட் டாய் பப்பி ஆர் மெட்டல்:) பப்பி?? குழப்பரதுதான் குழப்பறீங்க..கொஞ்சம் தெளிவாக்:) குழப்புங்கோ!! ஓ...ஓ!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

சோனியா, வந்ததற்கு இரண்டு பெயர் சொல்லிவிட்டுப் போங்க. :)

துணைக்கு வந்ததற்கு நன்றி ஜீனோ. :)

இதுவரை 'அ' வில் ஆரம்பிக்கும் பெயர்கள் மட்டுமே வந்திருப்பதால் 'அ' பெயர் பற்றி ஒரு அனுபவம். (இது கதை அல்ல, நிஜம்.) :)

'அ' பெயர் உள்ள ஒரு குட்டியர் (7 வயது) பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்தார். முகம் நன்றாக இல்லை.
என்னவென்றால், அன்று வகுப்பில் பேச்சுப் பரீட்சை நடந்து இருக்கிறது. இவர் பெயர் முதலாவதாக அழைக்கப்படவும் எழுந்து பேசி விட்டு அமர்ந்திருக்கிறார். ஒவ்வொருவர் பேசி முடிந்து அமர்ந்ததும் ஆசிரியை கமன்ட்ஸ் சொல்லி இருக்கிறார். அவற்றைப் பின்பற்றி மற்றவர்கள் தங்கள் பிழைகளைத் திருத்திக் கொண்டு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இன்னும் நான்கு மார்க் அதிகமாக வாங்கி இருக்கலாமே என்கிற ஆதங்கம், அன்று சோகமாக இருந்தார். தொடர்ந்து வந்த காலங்களில் அவர் தன்னை எதற்கும் முதலாவதாக அழைப்பார்கள் என்பதைப் புரிந்து கொண்டு தயாரானார். :)

அடுத்த லிஸ்ட் வெளியானதும் இன்னொரு கதையோடு வருகிறேன். :) இங்கு வந்து பெயர் சொல்வோர் அனைவருக்கும் ஆளுக்கொரு பப்பி இலவசமாக வழங்கப்படும். :)

இமா

‍- இமா க்றிஸ்

இமா அம்மா உண்மையில் நல்ல திரேட்... நல்ல விசயம்.. வாழ்த்துக்கள் அம்மா...

இமா அம்மா சொல்லுவது சரி நாம் ஒரு பெயரை வைப்போம் அது வலந்ததும் அவர்கலுக்கு பிடிப்பது இல்லை...

இது அவர்க்கலுக்கு பிற்க்காலத்தில் ஒரு அசிங்கமாக என்னும் படி ஆகிரது... இதனால் அவர்கள் பொற்றோரிடம் சொல்லாமல் பெயரை அவர்கள் விருப்பம் படி சுரிக்கி கொல்லுகின்ரனர்...

வைக்கும் பெயர் முழுசாக கூப்பிடனும் அப்பதான் அதன் பலனும் அதிகம்....

எனக்கு தெரிந்த பெயர், பிடித்த பெயர்..... இவை...

அருசுவையில் எனக்கு நிறைய பெயரை பிடிக்கும்... அதை சொன்னால் யாரும் தவராக் எண்ண வேண்டாம்...

அதை இப்போது சொல்லுகிரேன்... பிறகு சரியாக் லைனில் பெயர் தேடி சொல்லுகிரேன்...

அதிரா
இமா
இலா
வாணி

ஒருசோஞ்ச்சுக்கு ஜீனோ டோராக்கூட நல்லாதான் இருக்கு...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

உங்க அ யாரென்று புரிந்து கொண்டோம். :) அழகா விவரிச்சிருக்கீங்க அந்த அ வோட மனக்கஷ்டத்தை!

//முக்கியமாக குழந்தைக்குப் பெயர் சூட்டும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை எவை//

என் பெயரை வைத்துக் கொண்டு நான் படாத கஷ்டமே இல்லை (ரோஸ் ஐ எப்படி கூப்பிட்டாலும் ரோஸ் இஸ் எ ரோஸ் தான் என்றாலும்). அதனால மனசுல தோனுன சில விஷயங்கள்:

பேர் அழகா இருக்கனும்

சின்ன பெயரா இருக்கனும் (மூணு அல்லது மாக்சிமம் நாலெழுத்து)

முடிஞ்சா அதுக்கு ஒரு அழகான அர்த்தமும் இருக்கனும்

புராணப் பெயரா இருந்தா - அந்தக் காரக்டர் கதையில நல்லவரா இருந்தா மட்டும் வையுங்க.

சொல்லி அழைக்க ஈசியா இருக்கனும்

ரொம்ப காமன் பேராவும் இருக்கக் கூடாது (உதா - அருண் :), கார்த்திக்)- அப்புறம் க்லாஸ் ல ஒவ்வொருத்தரையும் வித்தியாசப்படுத்த ஒரு அடையாளம் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க க்ளாஸ்ல.

தமிழர்களுக்கு பரிச்சயமான வட மொழிப் பெயரா இருக்கறது நல்லது. தூய தமிழ்ப் பெயரா வச்சாலும், மத்த ஊருக்கு போனா (உதா - நார்த் இந்தியா, வெளிநாடு) அவங்களுக்கு ஸ்பெல்லிங் புரியற மாதிரி இருக்கனும், அழைக்க ஏதுவா இருக்கனும்.

எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமா சம காலத்துப் பெயரா கொஞ்சம் மாடர்னா வைக்கனும். தாத்தா பாட்டி பெயர் - உதா - ஆறுமுகச்சாமி ந்னெல்லாம் வச்சா மத்தவங்க கேலிக்கு ஆளாகிட நேரலாம்.

சுருக்கமா சொன்னா - ”சந்தனா” மாதிரி இருக்கோனும் (யாரும் காப்பி அடிச்சிராதீங்க - காப்பி ரைட் எனக்கு மட்டுந்தான் :) )

எல்லாம் அனுபவத்துல சொல்லறேன் - நல்லா கேட்டுக்கோங்க.

பிகு - ப்ரீத்தி - இனியா ரொம்ப அழகான அர்த்தமுள்ள தமிழ் பெயர். ரொம்ப பிடிச்சிருக்கு - நான் சொன்ன எல்லாத்துக்கும் பொருந்தி வருது. அந்த ரேஞ்சுல பையனுக்கும் வையுங்க. வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பேர் சில பேர் வாழ்க்கையில் விளையாடோ விளையாடுன்னு விளையாடிருக்கு (நல்ல விதமாத் தான் :) ) - அதெல்லாம் இங்கு சொல்ல முடியாது. நீங்க அனுபவம்ன்னு கேட்டதும் பழசெல்லாம் மேல வருது. தண்ணி குடிச்சுக்கறேன் போயி.

நான் பாத்த சில பெயர்க் கஷ்டங்கள்:

குல தெய்வப் பெயர்கள், தாத்தா பாட்டி பெயர்கள் - இவங்களுக்கு மரியாதை வேண்டி பெயர் வச்சுடறோம், ஆனா பிள்ளைங்க வளர்ந்து பெரியவரானதும் ரொம்ப கஷ்டப்படுவாங்க

ரொம்ப நீளமான பெயர்

வித்தியாசமாக இருக்கனும்ன்னு காம்பினேஷன் மாத்தி அமைக்கப்பட்டவை - உதா - அன்னப்ப்ரியா (இதுக்கு அன்னப் பூரணின்னு புரியற மாதிரி வச்சிருக்கலாம்)

ரொம்ப காமனான பெயர்கள் - மேலயே சொல்லியிருக்கேன். எங்க க்ளாஸ்ல ஒவ்வொருத்தரையும் வித்தியாசப்படுத்த ஒவ்வொரு அடையாளம் சொல்லி அழைக்க ஆரம்பிச்சு, இப்பொ பெயர் காணாம போயி அந்த அடையாளம் மட்டும் நிக்குது

வட/வெளி நாட்டினருக்கு புரியாத பெரிய பெரிய பெயர்கள் - திண்டாடிடறாங்க

ஆண் பெயர்களை பெண்ணுக்கு வைத்தல் மற்றும் உல்டா - உதா - உமா ந்னு ஆரம்பிக்கற பையன் பெயர்கள்

சினிமா நட்சத்திரங்களின் பெயர்களை வைத்தல் - உ தா - ரஜினி, நமீதா

அர்த்தமே இல்லாம மாடர்னா வைக்கனும்ன்னு வைக்கப்பட்ட பெயர்கள் - உ தா - ரியா

தேசிய தலைவர்கள் அரசியல் தலைவர்கள் பெயர் வைக்கும் போது மிகவும் கவனம் தேவை - அதிகம் விமர்சிக்கப் படாதவங்களா இருக்கனும்.

புராணப் பெயர்களிலும் கவனம் தேவை - வாலி ந்னெல்லாம் வைக்க வேண்டாமே.

யாருக்காவது யூஸ் ஆனா சரி தான்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இனியன்.......(இமா முறைக்காதிங்கோ....)
இளங்கோ...
இமா ஓடி வந்து இ வரிசைக்கும் கதை சொல்லுங்கோ....

Abima அபிமா அச்சமில்லாதவர், அச்சம் அழிப்பவர்.

Alpana அல்பனா எப்போதும் மகிழ்ச்சியுடன், சந்தோஷத்துடன்

Amala அமலா தூய்மை, மாசு மருவற்ற

Amalan அமலன் விஷ்ணுவின் பெயர்

Aruthra ஆருத்ரா அமைதி, மென்மை, மிருது.

Asha Lucky

Asira அசிரா வேகம், ரத்தினச் சுருக்கம்.

Athira ஆதிரா மின்னல்

அபிரதி - மகிழ்ச்சி, குதூகலம்.

அபிவிபா - பிரகாசிப்பவர்.

அசிரா - வேகம், ரத்தினச் சுருக்கம்.

அத்ரிகா - விண்ணுலகிலிருந்து.

அத்விகா - தனித்துவம்.

அக்னேயி - அக்னியின் புத்திரி.

அபிஜ்த்
அஜய்
அபி
அப்ஸ‌ரா
அர‌விந்து
அன்புமதி

ஆகாஷ்
ஆதி
ஆயிஸ்ரீ
ஆயிஷா
ஆதிரை

இனியன்
இனியவன்

ரிஷி
ச‌ங்க‌ மித்திரை
மித்திரா
உத்ரா
நில‌வாணி
சம்யுதா
சுரேன்
நிலாவ‌த‌னி
நிருப‌ன்
நிகில‌ன்
செஷா
மேகா
சொரூபன்
ந‌ந்தா
ந‌ந்து
ம‌தும‌தி
நித்திஷ்
ருதிகா

சுமி
சுரேந்தர்
சாதனி
சுகந்தா
சைதன்யா
சுகாசினி
ஷைலு
மஞ்சு
பிரபனா
பிரவினா

இந்த‌ வெப் த‌ள‌ம் எல்ல‌ருக்கும் உத‌வும் என்று என்னுகிரேன் முய‌ற்ச்சி செய்து பாருங்க‌ள்...

http://blog.ravidreams.net/2008/12/tamil-names/

http://www.thamizhagam.net/thamizhnames.html

http://www.kalanjiam.com/babynames/index.php?titlenum=4101

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஹாய் ஹாய் ஹாய்

ஒரு நாள் நெட் இன்னைப்பு இல்லாததல வரல,அதுகுளர ஒரு புது இழையே ஆரம்பிச்சு என்ன வாறு வாறு வாரி இருக்கீங்க.
நானும் என் கணவரும் இனியா என்ற பெயர ரொம்ப சீகிரதுல முடிவு செஞ்சுட்டோம்(அதாவது ஐந்து மாதம் ப்ரெக்னன்ட் அப்ப),வீட்டுல யாருகிடயும்லம் கேட்கல,கேட்ட பிரச்னை.இப்ப என்னக்கு பிடிச்ச ஆண் குழந்தை பெயர் என் கணவருக்கு பிடிகல,அவங்களுக்கு பிடிச்ச என்னக்கு பிடிகல,இப்படி சண்டைலையே போகுது.இருந்தாலும் இப்போதைக்கு ஆதி அல்லது ஆதித்யா,கெளதம் ரெண்டும் யோசிச்சு வச்சு இருக்கோம்,இன்னும் முடிவு பண்ல.

உங்களுக்கும் எதாவது தொனுசுன சொல்லுங்க,நாங்க சமஸ்கிரத எழுத்து இல்லாம தமிழ் பெயரா பார்க்கிறோம்.இன்னும் மூணு மாசம் டைம் இருக்குல ;-)

இன்னைக்கு தன புது வீடு வந்தோம்,அதன் கொஞ்சம் பிஸி,சரியாய் அறுசுவை வர முடியல.பரவாயில எல்லோரும் என்ன நாபகம் வச்சு இருந்து கேடு இருக்கீங்க,நன்றி.

Anbe Sivam

Anbe Sivam

மேலும் சில பதிவுகள்