உங்களுக்கு தெரிந்தால் வந்து சொல்லுங்கள்

ஹாய் ஃப்ரண்ட்ஸ் அனைவரிடமும் ஒரு கேள்வி, இல்ல இல்ல ஒரு வேண்டுகோள்னி கூட வைத்துகலாம். என்ன வென்றால். urin infecstion இது எதனால் வருகிரது, ஏன் வருகிரது. எப்படி வருகிரது, இதற்க்கு தீர்வு என்ன. இதை வராமல் எப்படி தடுக்கலாம். இது வராமல் எப்படி பாதுகாத்து கொள்ளலாம், அனைவரும் வந்து பதில் கூறுவிங்கனி என்னி நான் போட்டுள்ளேன், இதன் விடை எனக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்கும் உதவும் வன்னத்தில் இது அமையும் என்று நம்புகிரேன். தயவு செய்து பதில் தாருங்கள்.

அன்பு சோனியா,
**ஒவ்வொரு முறை பாத்ரூம் போகும்போதும் பெண்கள் முன்புறம், பின்புறம், நன்றாக நம் பாத்சோப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்,

**இப்படி இருந்தாலே,கிருமிகள் அழிந்து.. இன்ஃபெக்சன் ஆகாது..

==இது ஒரு பெண் டாக்டர் என் பள்ளி நாட்களில் சொன்னது. சுத்தம் ,சுகாதாரம்...

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

அன்புள்ள சோனியா.... UTI பற்றி எனக்கு தெரிந்தது... எனது தோழி ஒருவர் மருத்துவர், அவர் சொன்ன தகவல்:

1. இது ஒரு பேக்டீரியல் இன்பெக்ஷன்.
2. பேக்டீரியா யூரினரி ப்லாடர் (அ) கிட்னி'யை பாதித்தால் என்கிறோம்.

எப்படி கண்டு பிடிப்பது:

1. பொதுவாக காய்ச்சல், வாந்தி ஏற்படலாம்.
2. யூசிரினில் கண்ணுக்கு தெரியாத ரத்தப்போக்கு இருக்கலாம்.
3. அடி வயிற்றில் வலி.
4. வெள்ளை படுதல்.
5. அரிப்பு, வலி, எரிச்சல் போன்றவை.

UTI ஏற்பட காரணம்:

1. முதலும் முக்கியமான காரணமாகவும் சொல்லப்படுவது சுத்தமில்லாத கழிவரை, நம் பழக்க வழக்கம்.
2. சில நேரத்தில் கருதரிக்காமல் இருக்க பயன்படுத்தும் சில சாதனங்களால் அலர்ஜி ஏற்படலாம்.
3. உணவினால் கூட இருக்கலாம்.

UTI தடுக்க:

1. சுத்தமாக இருக்க வேண்டும், கால் கழுவ வேண்டும்.
2. யூரின் போக தோன்றும் போது போக வேன்டும், தள்ளி போட கூடாது.
3. நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை வைத்து கொள்ள வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புள்ள சோனியா!

பொதுவாக urine infection என்பது பாக்டீரியாக்களாலும் சுத்தமாக இல்லாததாலும் அதிக சூட்டினாலும் ஏற்படுவது. சில சமயம் சில மருந்துகளாலும் ஏற்படுவதுண்டு.
சுத்தமில்லாத குடிநீரைக்குடிப்பதாலும் ஏற்படுவதுண்டு.

சிறு நீர் கழிக்க இயலாது கடும் வலியுடன் சொட்டு சொட்டாக இறங்கும். கோடை காலங்களில் அதிக நேரம் வெய்யிலில் அலைய நேரிடும்போது உடலிலுள்ள நீரெல்லாம் ஆவியாகி, அதிக களைப்புடன் மேற்சொன்ன பாதிப்பும் ஏற்படும். இதற்கு மிகச் சிறந்த மருத்துவம் உளுந்து ஊறவைத்த நீரைக் குடிப்பது. அரை மணி நேரத்திற்கொரு முறை குடித்தால் எரிச்சல் நீங்கி சிறு நீர் தாராளமாக பிரியும்.

சிறு நீர் அவ்வப்போது கழிக்காமல் வெகு நேரம் அடக்கி வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அடிக்கடி இந்த பாதிப்பு ஏற்படும். Heavy antibiotic medicines அடிக்கடி எடுக்கும்போதும் இந்த பாதிப்பு ஏற்படும்.

சித்த மருந்துகள் 3 மாதங்களுக்கு மேல் எடுக்கும்போது அதில் கலக்கப்படும் மிகக் குறைந்த அளவு உலோகத்தூள்கள் சிறு நீர்க்குழாயில் தங்கி சிறு நீர் கழிக்க முடியாமல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பொதுவாக எல்லோருமே அடிக்கடி வாழைத்தண்டை மோர் கலந்து மிக்ஸியில் அடித்து சாறெடுத்து குடித்து வந்தால் இந்த பாதிப்பு ஏற்படாது பாதுகாத்துக்கொள்ளலாம். நிறைய தண்ணீர்[ காய்ச்சி ஆற வைத்த தண்ணீர்], மோர் குடிப்பது எப்போதுமே நல்லது.

urine infection இது பொதுவாக பெண்களுக்கு வரகூடியது. ப்ரகன்ஸி சமயத்திலும் வருகிற வாய்ப்பு இருக்கிறது. cleaniness,soaps,urine அடிக்கடி போகாமல் அடக்கி வைப்பது,உடம்பு சூடு, மருந்துகள் நிறய்ய சாப்பிடுவது, உடம்பில் தண்ணிர் குறைந்தாலும் வரும்.யூரின் போகும்போது கவனிக்க வேண்டிவை எரிச்சல்,நமைச்சல்,க்ளவுடியா இருப்பது,டிர்டி odor,வெள்ளை படுதல்.பேக்பெயின், அடிவயிறு வலி,வாந்தி,காய்ச்சல்.சுகர் ப்ராப்ளம் இருந்தாலும் வருகிற வாய்ப்புகள் இருக்கு. எதற்க்கும் 3 நாட்களுக்கு மேல் காத்திருக்காமல் டாக்டரிடம் கான்பித்து அதற்க்கு தகுந்த மருந்துகள் கண்டிப்பா எடுப்பது நல்லது.

www.medicinenet.com இதில் நிறய்ய தகவல்கள் இருக்கு.

தீர்வுகள்: நிறய்ய தண்னிர் குடிப்பது, நிறய்ய பழங்கள் சாப்பிடுவது,உலர் த்ராட்சை தண்னிர்,பார்லி வாட்டர்,இளநீர்,க்ரான்பர்ரி பழஜூஸ் இதற்க்கு ரொம்ப நல்லது.3 நாடக்ளுக்கு மேலும் குறையவில்லை என்றால் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவேண்டும், அவர்கள் யூரின் டெஸ்ட் செய்துவிட்டு ஆண்டிபயாடிக் குடுப்பாங்க அது 1 டோஸ் சாப்பிட்டது சரியாக தொடங்கிவிடும். பயப்பட தேவையில்லை.

ஹாய் பதில் தந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. நீங்க சொன்ன ஒரு ஒரு வார்த்தையும் உன்மை உன்மை உன்மை. நீங்க சொல்லது சரி தான். நான் கல்யானத்திற்க்கு முன்னாடி ஒரு கிராபிக்ஸ் ஆப்பிஸ்ல வேலை பார்த்தேன். கிட்ட தட்ட 4வருடம் பா. அங்க பாத்ரூம் போரது பிடிக்காது. காலைல வீட்டில் இருந்து urin போனால், மாலை 6மனிக்கு வீட்டுக்கு போய் தான் urin போவேன். urin போகாம இருக்க தன்னீர் குடிப்பதே இல்ல. ஆனால் திருமனத்திற்க்கு பிறக்கு அடிக்கடி நீர்கடுப்பு வர தொடங்கியது. வீட்டில் சொன்னேன் அதற்க்கு கல்யானம் ஆன புதுசுல இப்படி தான் இருக்குனி சொன்னாங்க. அதனால் நானும் கண்டுக்கல. ஆனால் இப்பம் மாதம் ஒருமுறை, அதாவது period வரதுக்கு ஒரு வாரம் முன்னாடி விடியற்காலைல நீர்கடுப்பு வந்து விடும். வந்து ஒரு 2மனி நேரம் இருக்கும். அந்த நேரத்தில உயிர் போர மாதிரி இருக்கு, இத்தனைக்கு நான் அவ்வளவு சுத்தம், ஒரு மன் கூட என் காலில் படாத மாரு நடப்பேன். லேசா அழுக்கு இருந்தா கூட என்னால இருக்க முடியாது அந்த இடத்துல. அப்படி நான். ஆஸ்பத்திரி போனால் அங்க தன்னீர் நிறைய குடிக்க சொல்ராங்க. நீங்க சொன்ன மருந்து எல்லாம் கொடுத்தாங்க. ஒரு டாக்டர் சொல்ராங்க நம்ம சேர்ந்த அப்புரம் உடனே போய் சுத்தம் செய்துடனும். அப்படி இல்லனா urin infection வர வாய்ப்பு அதிகம்னி. அது போல நான் சேர முன்னாடி ஒருக்கா சேர்ந்த அப்புரம் ஒருக்கா urin போகனமுன்னி சொல்ராங்க, இன்னொரு டாக்டர் நமக்கு குழந்தை வேனும்னா, நீங்க சேர்ந்த அப்புரம் எழும்ப கூடாது காலைல தான் போய் சுத்தம் செய்யனும். உடனே போய் சுத்தம் செய்தா அந்த ஸ்பேம் மேல தன்னீர் பட்ட அது உடனே இரந்து விடும். அதால் காலைல போய் சுத்தம் செய்ங்கனி சொல்ராங்க, ஒரு டாக்டர் பென்களுக்கு பொதுவா urin infection உடனே வந்துடும் ஏனா நமக்கு urin குழாய் ரொம்ப சின்னது அதான் நீங்க உடனே போய் சுத்தம் செய்ங்கனி எத கேட்பது எத கேட்காம இருப்பது நீ தெரியல. ரொம்ப மன கஷ்டமாக இருந்து அதான் உங்களிடம் வந்து கேட்டேன், ஆனால் சொன்னது எல்லாம் அவ்வளவு உன்மை, ஏன்னா என்னிடம் டாக்டர் சொன்னது தான் நீங்களும் சொல்ரிங்க, என்னபன்ரது தெரியல. ஆனால் உங்க பதில்களுக்கு ரொம்ப நன்றி.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

1..//ஒரு டாக்டர் சொல்ராங்க நம்ம சேர்ந்த அப்புரம் உடனே போய் சுத்தம் செய்துடனும். அப்படி இல்லனா urin infection வர வாய்ப்பு அதிகம்னு. அது போல ,//

2..//இன்னொரு டாக்டர் நமக்கு குழந்தை வேனும்னா, நீங்க சேர்ந்த அப்புரம் எழும்ப கூடாது காலைல தான் போய் சுத்தம் செய்யனும். உடனே போய் சுத்தம் செய்தா அந்த ஸ்பேம் மேல தன்னீர் பட்ட அது உடனே இற்ந்து விடும்.அதனால் காலைல போய் சுத்தம் செய்ங்கனி சொல்ராங்க//

1.சோனியா உங்க பதிவிலேயே பதில் இருக்கு...
முதல் பாயிண்ட் குழந்தை தற்போது வேண்டாம் என்றூ தள்ளி போடுபவர்களுக்கு சரி....

2.இரண்டாவது பாயிண்ட் குழந்தை எதிர்பார்ப்பவர்களுக்கு... சேருமுன் ஒருமுறை urin போகனும்,நன்கு வாஷ் பன்னிவது நல்லது,சேர்ந்த பின் பாத்ரூம் போக கூடாது ,மினிமம் 3-4 மணி நேரம்...

***நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.**
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஃபஜீலா அக்கா நீங்க சொல்ரது சரி தான் அக்கா. ஆனால் நான் கிலீன் செய்யாம இருந்தா உடனே எனக்கு நீர் கடுப்பு வந்துடுது. நான் என்ன செய்வேன் அக்கா. பொதுவாவே என் உடம்பு பயங்கிர சூடு, நான் பெட்லாம் தூங்கிரது இல்ல. ஃபுல்லா தரைல தான் துனி போட்டு தூங்குரேன். டாக்டர் கிட்ட போனா அதிக தன்னீர் குடிங்க, ஒரு நாளைக்கு 25 கிலாஸ் தன்னீர் குடிக்க சொல்ராங்க, உடல்ல தன்னீர் இல்லனி சொல்ராங்க, ஆனால் நான் என்னால் முடிந்த அளவு தன்னீர் குடிக்க தான் செய்ரேன். இதில் நீங்க போடும் பதில்கள் எனக்கு மட்டும் இன்றி. எல்லாருக்கும் கண்டிப்பா உதவும், அதனால் எல்லாரும் வந்து போடுங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா ரொம்பவும் மனசை குழப்பிக்காதீங்க. உடற்சூட்டினால் வரும் நீர்க்கடுப்புக்கு ஒரு கைவைத்தியம் இருக்கு. நீர்க்கடுப்பு ஏற்பட்டால் கால் பெருவிரல் நகங்கள் மீது சுண்ணாம்பை தடவினால்(நகங்களின் மீது மட்டும் மருதாணி அப்புவது போல் போடவேண்டும்) உடனே நீர்க்கடுப்பு நீங்கும்.
பாக்டீரியல் இன்ஃபெக்ஷனினால் வரும் நீர்க்கடுப்பிற்கு மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை எடுப்பதே நல்லது.

பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் மீண்டும் மீண்டும் வருகிறது என்றால் நல்ல ஸ்பெஷலிஸ்ட் காண்பிப்பது நல்லது. பயமுறுத்துவதற்காக இல்லை. எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே.

அப்புறம் பெர்சனல் ஹைஜின். தினமும் இருவேளை மட்டும்(காலைக்கடன்கள் முடித்த பின்னும் இரவு தூங்கும் முன்பும்) சோப் உபயோகித்து சுத்தம் செய்தால் போதும். மற்ற நேரங்களில் சுத்தமான தண்ணீரால் சுத்தம் செய்தால் போதும். அடிக்கடி சோப் உபயோகித்து சுத்தம் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்று என் மருத்துவர் சொன்னார்.

இன்னொரு முக்கியமான விஷயம். எப்போதும் சுத்தம் செய்த பின் ஈரம் இல்லாமல் உலர்வாக இருக்கவேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். தூங்கும் நேரத்தில் உள்ளாடைகளை தவிர்ப்பது நலம். இது ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வருவதை தடுக்க உதவும். இதுவும் மருத்துவர் சொன்னதுதான்.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க இளநீர் குடிக்கலாம். பழஜூஸில் சப்ஜா விதைகள் கலந்து குடிக்கலாம். கிராஸ் ஜெல்லி பானங்கள் கிடைத்தால் குடியுங்கள். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளியுங்கள். தினமும் இரவில் உள்ளங்காலில் விளக்கெண்ணெய் தடவிக் கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

#cucumber சாப்பிடுவது தினமும்,china grass தன்னீரில் காய்ச்சி+பாலுடன் சேர்த்து குடிப்பது உடல் சூட்டை தனிக்கும்...

#ஒரு ஆப்பிள் மிக்ஸீயில் அரைத்து+ பாலுடன் மதியம் ,ஜூஸ்’’ஸாக குடிப்பது நல்லது...
#மோர்,தயிர்...உடம்புக்கு குளிர்ச்சி தரும்...

**ஒரு நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.**
*அன்புடன் ஃபஜீலா*

நம்பிக்கையொடு இருந்தால்,இறைவன் நேர்வழி காட்டுவான்.
*அன்புடன் ஃபஜீலா*

ஹாய் ஃபஜீலா அக்கா, கவிசிவா இரண்டு பேருக்கும் மிக்க நன்றி, என்ன வேர யாரையும் கானும். எல்லாரும் வந்து தங்கள் கருத்தை போடுங்க அப்பம் தான் இது எல்லாருக்கும் உதவும்பா. தயவு செய்து அவரவர் அனுபவத்தை வந்து சொல்லுங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்