six months old baby food

Hi,i'm anitha.I have six months old baby,his name is Sanjit.can i start solid food for him? which foods can i give him? please advise for me thanks.

Regards
Anitha
Singapore

ஹாய் அனிதா

நீங்களும் உங்க பையனும் நலமா? நீங்க இப்ப தாராளமா திட உணவு குடுக்க ஆரம்பிக்கலாம், நம்ம மன்றத்திலயே அது பத்தி நிறைய டிஸ்கஸ் பண்ணிருக்கோம், இந்த லிங்க்-ல போய் பாருங்க, உங்களுக்கு நிறைய தகவல்கள் கிடைக்கும், இதில் ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்க...

www.arusuvai.com/tamil/forum/no/5055

அனேக அன்புடன்
ஜெயந்தி

hai Jayanthi,Thanks for your rly.I and my son also fine.How are you?Where are you staying?.i check that link,anything i get back to you.Thank you very much.

hi i have a 16 month old boy velan krishna. when he was 6 months i gave rice with dal and ghee mashed, baby cereal,sometimes strained water from boiled vegetables(one vegetable for a whole week to know if he was allergic)

ஹாய் காயத்ரி,கிருஷ்ணா எப்படி இருக்காரு? நீங்க எப்படி இருக்கிறீங்க? உங்களுடய பதில் எனக்கு உதவியாக இருந்தது.எங்க இருக்கிங்க?.Thanks for your reply.

Regards
Anitha.

ஹாய் jayanthi,நீங்க சொன்ன லிங்ல போய் பார்த்தேன்.மிகவும் உதவியாக இருந்தது.மிக்க நன்றி.இன்று முதல் வாழபழம் பாலுடன் கலந்து கொடுக்க ஆரம்பிதேன்.செவ்வாழபழம் கொடுக்காலாமா?.என்னுடைய மகன் ஒல்லியாக இருக்கான்.அவனுடைய எடை அதிகமாக, என்ன உணவு கொடுக்கலாம்.என் மகனுக்கு ஆறாவது மாதம் ஆரம்பித்துள்ளது.மற்ற மன்ற தோழிகளும் தெரிந்ததை சொல்லவும்.பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
என்றும் அன்புடன்,
அனிதா.

ஹாய் அனிதா

உங்க பையனுக்கு திட உணவு ஆரம்பிச்சாச்சா? நல்லது, ஜுனியர் நல்லா சாப்பிடறாரா? நான் இப்ப யுஎஸ்-ல இருக்கேன், எனக்கு ஒரு பெண் குழந்தை, 7மாதம் முடிய போகுது..... 6மாதத்தில் இருந்து நான் குடுக்கும் உணவு வகைகள் : காலை- 1இட்லி பாலுடன் or gerber ஃபுட்-ல பழம் or vegetable, மதியம்- சத்து மாவு or cereal, 4மணிக்கு - காய்கறிகள், பருப்பு & நெய் சேர்த்த குழைந்த சாதம் or வேக வைத்த ஆப்பிள், இரவு- செரிலாக்..... நடு நடுவே மில்க் குடுப்பேன்....

உங்க குழந்தைக்கு குடுக்கும் உணவுகளில் 2சொட்டு நெய் சேர்த்து குடுத்து பாருங்க,எடை கூட வாய்ப்பு உண்டு, எந்த உணவையுமே ரொம்ப திணிக்காம கொஞ்சம் கொஞ்சமா அப்பப்ப குடுங்க, அதுவே போதுமான எடை கொடுக்கும், புதுசா எது குடுத்தாலும் பகலிலேயே குடுங்க, அது தான் உங்களுக்கும் குழந்தைக்கும் நல்லது, இது எல்லாம் நம்ம தோழிகள் எனக்கு சொன்னது, நான் உங்களுக்கு சொல்றேன், அவ்வளவு தான், எனக்கும் அவ்வளவு அனுபவம் கிடையாது, அதனால மற்ற தோழிகள் உதவுவாங்க, செவ்வாழையும் குடுக்கலாமான்னு தெரியல.....

இந்த பகுதியிலயே எல்லா இழைகளையும் படிச்சீங்கன்னா உங்களுக்கே நிறைய விஷயம் தெரிய வரும், நான் இங்க தனியா இருப்பதால நம்ம அறுசுவை தோழிகளின் ஆலோசனை தான் ரொம்ப உபயோகமா இருக்கு, உங்களுக்கும் நேரம் கிடைச்சா படிச்சு பாருங்க....

காய்கறிகளில் carrot,potato கொடுக்கலாம்.அதை தவிர வேற என்ன காய்கறிகள் கொடுக்கலாம்.நேரம் கிடைக்கும்போது சொல்லவும்.

என்றும் அன்புடன்
அனிதா

am good. how old is you baby now.at present am in austin,texas,america.hope you are fine.

Hi i am Meena baskar frm salem... i am having a six month old boy baby... his name is Kavish karthik.... shall i start to give a solid food to him? wht kind of food shall i give? plz share ur suggestions... thank u.... :-)

6month baby foods

மேலும் சில பதிவுகள்