முந்திரி கொத்து

தேதி: December 25, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

இது தென் மாவட்டங்களில் பிரசித்தமான இனிப்பு வகை. கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்யாண சீர்களில் முக்கிய இடம் பெறும் சுவையான இனிப்பு வகை இந்த முந்திரி கொத்து.

 

<b> மேல் மாவிற்கு: </b>
மைதா மாவு - 3/4 கப்
அரிசிமாவு – கால் கப்
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி(மங்கள நிறத்துக்காக)
<b> பூரணத்திற்கு: </b>
பயத்தம் பருப்பு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
தேங்காய்துருவல் – அரை கப்
முந்திரிபருப்பு - கால் கப்
ஏலக்காய் – 6
சீனி - ஒரு தேக்கரண்டி(ஏலக்காயை நன்றாக பொடிக்க)
நெய் – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க


 

முதலில் தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, ஏலக்காயை போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு அதே நெய்யில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்.
மிக்ஸியில் ஏலக்காயுடன் ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து மிக்ஸியில் பொடி செய்யவும். அதனுடன் முந்திரி பருப்பை சேர்த்து கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.
அதன் பின்னர் வறுத்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பை நன்றாக பொடிக்கவும்.
பிறகு வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டி கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே அரைத்த மாவில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும். அதில் தேங்காய் துருவல், முந்திரி ஏலக்காய் பொடித்தது போட்டு கிளறவும். பொடித்த ஏலக்காய் போட்டு கிளறவும்.
கிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் வைக்கவும்.
பின் மேல் மாவிற்கு தேவையான எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைக்கவும்.
அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான முந்திரி கொத்து தயார். இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனக்கு ரொம்ப பிடித்தமான சமையல் குறிப்பை தந்ததற்கு ரொம்ப நன்றி. அழகான தெளிவான விளக்கம். ஒரு சின்ன சந்தேகம், இந்த மேல் மாவு, பொரித்தப் பிறகு மொறு மொறுப்பாக இருக்குமா அல்லது சுளியன் போல சாப்டாக இருக்குமா? இதனை தேங்காய் சேர்ப்பதால் ஒரு நாள்தான் வைத்திருக்க முடியுமா? உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

ஹாய் இளவரசி நல்ல குறிப்பு என் அம்மாவும் இதேமாதிரி தான் செய்வாங்க அவர்கள் மூன்ராக போட்டு எடுப்பாங்க அம்மாசாப்பாட்டை தேட வைத்துவிட்டிங்க
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

இளவரசி நல்ல குறிப்பை கொடுத்திருக்கின்றீர்கள்.அதுவும் கிறிஸ்துமஸ் அன்று ஸ்பெஷலாக வந்துள்ளது.
பார்க்கும்போதே நா ஊறுகின்றது.சுழியன் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்ய படும் பழகாரம்.இது சற்றே அதில் வித்தியாசபடுகின்றது.இதையும் எனக்கு முடியும்போது செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய்,

ரொம்ப நல்ல குறிப்பு. முந்திரி கொத்து நல்லா இருக்கும் - னு கேள்வி பட்டுஇருக்கேன். ஆனா செய்முறை தெரியாது. நான் நாளைக்கே செய்து பார்த்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்றேன். குறிப்புக்கு நன்றி.

Veni Mohan
A Person's True Character Can be Revealed by what he does when no one is watching

A Person's True Character Can be Revealed by what he does when no one is watching

அன்பு தேவா,நலமா/மன்னிக்கவும்..இன்றுதான் பின்னூட்டம் பார்க்கிறேன்.கடந்த ஒரு வாரமாக மஸ்கட் சென்றிருந்தேன்.இன்றுதான் திரும்பி வந்தேன்.உங்களூக்கு ஆர்குட் மெஸேஜ் பார்த்து மெயில் அனுப்பினேன்.உங்கள் பதில்தான் வரவில்லை.
முந்திரி கொத்து மொறு மொறுப்பாக இருக்கும்.
பத்து நாடகள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
வறுத்து செய்வதால் கெட்டு போகாது...இது சுஸியன் அளவுக்கு சாப்டாக இருக்காது.கொஞ்சம் கெட்டியாக இருக்கும்.
உங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றியும் மகிழ்ச்சியும்....
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நலமா?
உண்மையில் இந்த குறிப்பை நான் போட்டதன் காரணம்..உங்கள் பெயரைப்போல் இருக்கும் PRIYAKRISH (நாகர்கோவில் தோழி)எங்கோ இதுபற்றி கேட்டிருந்தாங்க....அதனால்தான் போட்டேன்...நீங்களும் கன்னியாகுமரி மாவட்டமா?
உங்களுக்கு கத்தாரில் தெரிந்த நண்பர்கள் உண்டா? என சொல்லவும்
தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தங்களின் உற்சாகமான பின்னூட்டம் எனக்கு மகழ்ச்சியளிக்கிறது...கூடிய விரைவில் துபாய் வரும் சந்தர்ப்பம் அமையுமென நினைக்கிறேன்...அப்படியிருந்தால் உங்களை தொடர்பு கொள்ள முயற்ச்சிக்கிறேன்
தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு வேணி,தங்கள் பின்னூட்டத்திற்கு என் நன்றி....

முடியும்போது செய்து பாருங்கள்.சுவையாக இருக்கும்
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி துபாய் வருகின்றீர்களா!!!!?ரொம்ப நல்ல செய்தி சொல்லியிருக்கின்றீர்கள்.மிக்க மகிழ்ச்சி.அந்த நாள் எப்போது என்று எனக்கு தெரிவியுங்கள்.ஆவலோடு காத்திருக்கின்றேன்.என்ன சரியா....
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

இது முந்திரி கொத்தா, பார்க்க சுழியம் போல் இருக்கு.

ரொம்ப அருமையா இருக்கு

Jaleelakamal

முந்திரிக் கொத்து சூப்பராக வந்தது...
படங்களுடனான குறிப்புக்கு நன்றி...

நலமா தேன்மொழி?குழந்தை நலமா? செய்து பார்த்து சுவைத்து தந்த பின்னூட்டத்திற்கு நன்றி.....தேன்

அன்புடன்

இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

nalama

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களின் முந்திரிகொத்து அருமை நல்ல சுவையாக இருந்தது வாழ்த்துக்கள்
படங்கள் அருமை தெளிவாக இருக்கு நன்றி

வாழு, வாழவிடு..

பிடித்ததா? இது ரொம்ப சுவை...எனக்கு மிகவும் பிடிக்கும்
பாராட்டுக்கு நன்றிங்க

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.