சேப்பங்கிழங்கு மசாலா ப்ரை

தேதி: December 26, 2009

பரிமாறும் அளவு: 4நபர்களுக்கு பரிமாறலாம்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

சேப்பங்கிழங்கு- அரை கிலோ
இஞ்சி - 25கிராம்
பூண்டு 5இதழ்
மிளகாய் வத்தல்- 10
சோம்பு - 1 ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி -அரை ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

சேப்பங்கிழங்கை முதலில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஒருபாத்திரத்தில் கிழங்கு முழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும்.தோல் உரிக்கும் அளவு வேக வைக்கவேண்டும்.
நன்றாக வேக விட்டால் கிழங்கு பிசு பிசுப்பாக இருக்கும்.
வேக வைத்த கிழங்கின் தோலை உரித்து நெடுக்கு வசமாக நான்காக வெட்ட வேண்டும்.
அரைக்க தேவையானவற்றை (மிளகாய் வத்தல், சோம்பு,இஞ்சி,பூண்டு,மஞ்சள்,உப்பு,)மிக்சியில் சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்க வேண்டும்.(மிளகாய் வத்தலை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து அரைக்க வேண்டும்.)
ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய கிழங்கை போட்டு மொறு மொறுப்பாக சிவந்ததும் ஒரு தட்டில் தனியாக எடுத்து விட வேண்டும்.
கிழங்கு அனைத்தையும் வறுத்து எடுத்து விட்டு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு காய்ந்ததும் மிக்சியில் உள்ள விழுதை அந்த எண்ணையில் விட்டு நன்குவதக்க வேண்டும்.(அடுப்பை குறைந்த தீயில் எரிய விட வேண்டும்.) தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
விழுது கெட்டிப் பட்டு வாசனை வந்த உடன் கிழங்கை அதில் போட்டு நன்கு புரட்டி விட்டு மசாலா முழுவதும் கிழங்கில் மொறு மொறுப்பாக சேர்ந்தவுடன் இறக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ராதா... நல்ல ஒரு குறிப்பு.... I'll try this recipe as soon as possible. ஸ்டெப் ஸ்டெப்பாக கொடுத்திருந்தால் படிக்க இன்னும் சுலபமாக இருக்கும், பார்க்கவும் அழகாக இருக்கும். புதிதாக கொடுக்க ஆரம்பித்திருக்கீங்க என்று நினைக்கிறேன் (தப்பா இருந்தா மன்னியுங்கள்).... பல 100 குறிப்புகள் கொடுத்து உங்களுக்கென்று அறுசுவையில் ஒரு இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா...அடுத்த பதிவை ஸ்டெப், ஸ்டெப்பாக தருகின்றேன். தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி!

radharani