கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்டார்

தேதி: December 28, 2009

5
Average: 4.7 (3 votes)

 

க‌ன்ஸ்ட்ரக்ஷ‌‌ன் பேப்ப‌ர்ஸ் (விருப்பமான‌ நிற‌ங்க‌ளில்) - 8
பென்/பென்சில் ‍- ஒன்று
க்ளு/செல்லோ டேப்
க‌த்திரிக்கோல்
ஸ்டாஃப்ளர்

 

ஸ்டார் செய்வதற்கு மேற்கூறியப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பரில் விருப்பமான நிறங்களை எடுத்து கொண்டு அதனை ஒரு சதுர வடிவத்திற்கு நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அந்த பேப்பரை முக்கோண வடிவத்தில் மடிக்கவும்.
மடித்த அந்த முக்கோணத்தை மீண்டும் ஒரு சிறிய முக்கோணமாக மடித்து வைத்துக் கொள்ளவும்.
மடக்கிய முக்கோணப் பேப்பரின் முன்பக்கத்தில் படத்தில் காட்டியுள்ளதுபோல் இடைவெளிவிட்டு 4 அல்லது 5 கோடுகள் வரைந்துக் கொள்ளவும். (கோடு போடும்போது ஒரு ஓர‌த்தில் இருந்து ஆர‌ம்பித்து, காகித‌த்தின் ம‌று ஓர‌த்தை தொட்டுவிடாத‌படிக்கு கோடுக‌ள் வ‌ரைவ‌து அவ‌சிய‌ம்).
இப்போது வரைந்த கோடுகளை கத்திரிக்கோலால் நறுக்கவும். நறுக்கிய பிறகு பேப்ப‌ர் முழுவ‌தும் ஒரே பீஸாக‌ இருக்க‌ வேண்டும்.
நறுக்கின பேப்பரை விரித்து வைத்து அதன் உட்பகுதியில் (innermost) இருக்கும் இருமுனைகளையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து செல்லோ டேப் அல்லது க்ளு வைத்து ஒட்டி விடவும்.
பிறகு பேப்பரை திருப்பி வைத்து ஒட்டிய இருமுனைகளுக்கு அடுத்து உள்வரும் இருமுனைகளை சேர்த்து ஒட்டவும். அதாவது முன்புறம் பேப்பர் பின்புறமாக வருவது போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
மீண்டும் முன்புறமாக பேப்பரை திருப்பி வைத்து மீதியுள்ள இரண்டு முனைகளையும் இணைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது ஸ்டார்க்கான ஒரு இதழ் கிடைக்கும்.
இதுப்போல் விரும்பிய நிறங்களில் எட்டு இதழ்கள் செய்து எல்லாவற்றின் முனைகளையும் ஒன்றாக இணைத்து ஸ்டாஃப்ளர் பின் போட்டு கொள்ளவும்.
இப்போது கன்ஸ்ட்ரக்ஷன் பேப்பரில் மிக சுலபமாக செய்யக்கூடிய அழகிய ஸ்டார் ரெடி. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களின் இதை வீட்டின் சுவற்றிலோ அல்லது கதவிலோ சிறிய கயிறு அல்லது டேப் வைத்து தொங்கவிட்டு வீட்டை அலங்கரிக்கலாம். அறுசுவை உறுப்பினரான திருமதி. சுஸ்ரீ27(susri27) அவர்களின் மகள் இந்த ஸ்டாரை நேயர்களுக்காக வடிவமைத்து காட்டியுள்ளார். கைவினைப் பொருட்கள் கற்றுக்கொள்வதிலும், அதனை முயற்சி செய்து பார்ப்பதிலும் ஆர்வம் உடையவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுஸ்ரீ,

ஸ்டார் மிகவும் அழகாக இருக்கிறது. செய்முறையும் தெளிவாக இருக்கிறது. உங்கள் மகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவியுங்கள். அவரது அடுத்த கைவினைக் குறிப்பையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சுஸ்ரீ.... ரொம்ப அழகா இருக்குங்க. மகளுக்கு என்ன வயது?? ரொம்ப நல்லா செய்திருக்காங்க. பாராட்டுக்கள். :) நான் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ பரவாயில்லையே உங்கள் மகள் சூப்பரா செய்து இருக்கிறாள், பாராட்டுக்கள்.

கலர் காம்பினேஷன் சூப்பரா இருக்கு பா

Jaleelakamal

இந்த குறிப்பை அனுப்பிய சில நாட்களுக்குள்ளேயே வெளியிட்டு எங்களை சந்தோஷத்திற்க்குள்ளாக்கிய அன்பான அறுசுவை குழுவினருக்கு என் முதல் நன்றி!.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

என் மகளுக்கான தங்கள் பாராட்டுகள் பார்த்து மிக்க சந்தோஷம் இமா. அவளிடமும் காண்பித்தேன், ரொம்ப சந்தோஷப்பட்டாள்.
உங்களைப்போன்ற கைத்திறனுள்ளவர்களிடம் அவள் பாராட்டு பெறுவது பெரு மகிழ்ச்சியாக இருக்கு. மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹலோ வனிதா,
நலமா? பிள்ளைகள் இருவரும் நலமா?

உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி வனி. என் பெண்ணுக்கு 9 வயது ஆகிறது. எப்பவும் எதாவது இதுபோல செய்து பார்க்கும் ஆர்வமிருக்கும் அவளுக்கு, இப்ப இங்க வின்டர் ப்ரேக் ஹாலிடேஸ். மீண்டும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஜலிலாக்கா, எப்படி இருக்கிங்க?
ஆமா அக்கா, இந்த ஸ்டார் குறிப்பில் போட்டோஸ் எடுத்ததுமட்டுமே நான். இன்னும் கிறிஸ்துமஸ் ட்ரீ கூட ஒன்னு செய்தாள். படம் எடுத்தால் அனுப்புகிறேன். இப்ப லீவு என்பதால், இந்தமாதிரி எல்லாம் செய்து பார்க்க கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கு.
மிக்க நன்றி அக்கா உங்க அன்பான பாராட்டுகளுக்கு.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ, மகளின் கைவண்ணம் அருமை. மிகவும் அழகாக இருக்குன்னு அவர்களிடம் சொல்லுங்க. நிச்சயம் என் பெண்ணையும் செய்து பார்க்கச் சொல்கிறேன்.

நேற்று இரவே செய்து அட்மினுக்கு படம் அனுப்பிட்டேன். :) மகளிடம் காட்டுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த செய்முறையை பார்த்து வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்டாரின் படம்

<img src="files/pictures/christmas-star.jpg" alt="picture" />

வனிதா, உங்கள் நட்சத்திரம் அழகு. :)

இமா

‍- இமா க்றிஸ்

இன்னைக்குதான் உங்க பதிவு(களை) பார்த்தேன் வின்னி!. மகளுக்கான உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி! பெண்ணிடமும் சொல்லிட்டேன்! :)

ஆமா வின்னி, எங்களுக்கும் லீவு நல்லா க்கிராப்ட்ஸ், விளையாட்டு என்று ஜாலியா போகுது. நேற்று எல்லோரும் சேர்ந்து பக்கத்தில் ஒரு அவுட்டிங் போயிருந்தோம். புத்தாண்டுக்கு என்ன ஸ்பெஷல் ப்ளான் வின்னி?! If you don't mind, உங்க பெண்ணுக்கு என்ன வயது என்று நான் தெரிந்து கொள்ளலாமா?!
புத்தாண்டு வாழ்த்துகள் வின்னி. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வாவ், சூப்பர் ஃபாஸ்ட் வனிதா நீங்க! ரொம்ப அழகா இருக்கு உங்க ஸ்டார். என் பெண்ணிடமும் காண்பித்தேன், அவளுக்கு ஒரே குஷி! ரொம்ப தேங்ஸ் வனி!. புத்தாண்டு வாழ்த்துகள்! நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

டியர் சுஸ்ரீ,உங்க பெண் செய்த பூ ரொம்ப அழகு.நான் இன்று தான் புதிதாக அறுசுவையில் இணைந்துள்ளேன்.
என் எட்டு வயது மகளும நானும் சேர்ந்து ஆர்வமாக இப்பூவை செய்து பார்த்தோம் நன்றாக வந்தது. ரொம்ப நன்றி. மற்ற கிராப்ட் வொர்க் எல்லாம் நன்றாக உள்ளது. அறுசுவை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

டியர் பிரெண்ட்ஸ்,
கிறிஸ்த்மஸ் ப்லவர் செய்து போட்டோ எடுத்துள்ளேன்.எப்படி இங்கே அதை இணைப்பது ? விளக்கம் தாருங்களேன்.

அன்பு பாத்திமா,

போட்டோவை இந்தக் குறிப்பின் தலைப்பினை (லின்க்) குறிப்பிட்டு arusuvaiadmin என்னும் ஜீமெய்ல் ஐடீக்கு அனுப்புங்கள்.

இணைந்ததுமே குறிப்பு ஒன்றை முயன்று படமும் எடுத்து அனுப்ப நினைக்கிறீர்கள். பாராட்டுக்கள். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சுஸ்ரீ, உங்களுகு புது வருட பிறப்பு ஜாலியாக போனதா. நாங்கள் வீட்டிலேயே கொண்டாடினோம். என் பெண்ணிற்கு 8 வயது சுஸ்ரீ. ஸ்டாரையும் செய்து பார்த்து விட்டோம். எங்களுக்கு அரை நாள் தேவைப்பட்டது:)

இந்த செய்முறையை பார்த்து திருமதி. பாத்திமா அவர்கள் செய்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்டாரின் படம்

<img src="files/pictures/christmas-star-fathima.jpg" alt="picture" />

அன்பு சுஸ்ரீ,
நலமா? ஸ்டார் ரொம்ப அழகா இருக்கு. கிறிஸ்மஸுக்கு முன்பே போட்டிருந்தால் செய்து பார்த்திருப்பேன்:-( வாழ்த்துக்கள் பெண்ணுக்கு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

பாத்திமா,
உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி! :)

இமா அவர்கள் சொன்னமாதிரி உறுப்பினரா சேர்ந்த உடனேயே, பதிவு போட்டு, முயற்சி செய்து, போட்டோவும் அனுப்பி இருக்கிங்க. பாராட்டுகள்!

உங்க மகளும் நீங்களுமா செய்து அனுப்பி இருக்கும் ஸ்டார் வெகு அழகாக இருக்கிறது பாத்திமா!. கலர் செலெக்ஷன்ஸ் சூப்பர்! உங்க மகளிடமும் கண்டிப்பா சொல்லுங்க! மீண்டும் மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் வின்னி,
நாங்க‌ ந‌ல‌ம். நீங்க எப்படி இருக்கிங்க?! எப்போது ஸ்கூல் ரீ‍ஓப்பனிங்?! எங்களுக்கு 17 நாட்களுக்கு பிறகு இன்றுமுதல் ஸ்கூல் ஆரம்பித்து விட்டது!நானும் இன்று முதல் வேலைக்கு திரும்புகிறேன்!

ஆமாம் வின்னி, புத்தாண்டு அன்று கோவில், மீட்டிங் ப்ரண்ட்ஸ், ரெஸ்டாரண்ட் என்று ரொம்ப ஜாலியா போன‌து.

நீங்களும் உங்க‌ பொண்ணோட‌ சேர்ந்து ஸ்டார் செய்து பார்த்திட்டிங்க‌ளா? ரொம்ப‌ சந்தோஷம் வின்னி. முடியும்போது ப‌ட‌ம் எடுத்து அனுப்புங்க‌ள் அட்மினுக்கு, நாங்களும் பார்க்கிறோம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

படம் இணைக்க உதவி கூறிய சகோ.இமா அவர்களுக்கும் ,வெளியிட்ட அட்மின் அவர்களுக்கும்,பாராட்டுக்கள்
தெரிவித்த சுஸ்ரீ அவர்களுக்கும் ரொம்ப நன்றி.உண்மையிலேயே ரொம்ப சந்தோசமஎ இருக்கு.என் மகள் ஸ்கூல் விட்டு வந்து பார்த்தா
என்னைவிட ரொம்ப சந்தோசபடுவா.அறுசுவை தளத்தில் நிறைய விஷயம் தெரிந்து கொள்ள முடிகிறது .பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்பு செல்விய‌க்கா,
நான் ந‌ல‌ம். நீங்க‌ எப்ப‌டி இருக்கிங்க‌? பேர‌ன் ந‌ல‌மா இருக்கிறாரா?
என் மகளுக்கான உங்க‌ளோட வாழ்த்துக்களுக்கு மிக்க‌ ந‌ன்றி!. அதனால் என்ன அக்கா, நீங்க செய்து பார்க்க நினைத்ததே சந்தோஷம். அடுத்த‌ முறை/வருடம் செய்துவிடுங்க‌ள்! : )

உங்க கிறிஸ்துமஸ் ரீத் ரொம்ப அழகா இருந்தது. அங்கேயே பதிவு போட நினைத்தேன் முடியவில்லை. (போன இர‌ண்டு வாரமும் பசங்களோட வீட்டிலே ஒரே விடுமுறை கொண்டாட்டம்தான்! :)) ok, நீங்க உட‌ம்பை பார்த்துக்கோங்க‌. மீண்டும் பிறகு பேச‌லாம். ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நிறைய‌ தோழிக‌ள் இந்த குறிப்பை பாராட்டி, செய்தும் பார்த்து சொல்வ‌து ரொம்ப‌ ம‌கிழ்ச்சியா இருக்கு. அறுசுவைக்கு அனுப்பிய முதல் குறிப்பு (என் ம‌க‌ளோடது), இவ்வ‌ள‌வு தோழிகளால் பாராட்டப்படும்போது நிச்சயம் இது அவளுக்கு ஒரு ந‌ல்ல‌ ஊக்குவிப்பாக‌ இருக்கு! :)

என் பெண் இதை செய்து காண்பிக்கும்போதே, இதன் வேரியேஷன்ஸ், 5 முதல் 8 வரை எத்தனை எண்ணிக்கையில் வேண்டுனாமாலும் செய்யலாமென்று போட சொன்னாள். நான் குறிப்பு எழுதி அனுப்பும்போது அதை சேர்க்க விட்டுவிட்டேன். (முதல்முறை அல்லவா?! :))
ஆனால், நம் தோழிகள் அந்த வேரியேஷனை (வனிதா 5, பாத்திமா 6 இதழ்கள்) செய்து போட்டோ இணைத்திருப்பது ரொம்ப சிறப்பு! Thanks everyone!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta