New Year Resolutions!!!

எல்லோரும் நலமா?? நான் பாஸ்டனில் இருந்து இப்போ வேற ஊர் வந்துவிட்டேன். கிடைத்த கொஞ்ச நேரத்தில் ஒரு குட்டி பதிவு.

நியு இயர் என்றாலே மற்ற கொண்டாட்டங்களுக்கு அப்புறம் நாம் எல்லோரும் கடைபிடிப்பது புது வருட ரெசல்யூஷன் எனப்படும் குறிக்கோள் அமைத்தல்...
வழக்கமா நாம நினைப்பது... ஹும்ம் இந்த வருடத்திலாவது
- சத்தான சாப்பாடு சாப்பிடனும் ஜன்க் கூடாது
- ஆண்கள் பலர் புகைப்பது விடனும்
- பெண்கள் என்றால் ஒரு 90% வெயிட் குறைக்கணும் என்பது இப்படியா பலவிதமான குறிக்கோள் இருக்கும்.

சிலர் கொஞ்சம் காமெடிய
- ஒரு நூறு முறையாவது ஓசி சாப்பாடு சாப்பிடனும்
- யாருக்காவது மொளகா அரைக்கணும்
- இல்லை என்னை மாதிரி ஒரு 10 மொக்கை பதிவாவது போடனும்

இப்படியாக ஆரம்பிக்கும் இந்த புது வருடத்தில் உங்க ரெசல்யூஷன் என்ன???

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

நம்ம ரெஷல்யூஷன் வருஷத்துக்கு வருஷம் ஒன்னே தான் - வேறென்ன - உருப்படற வழிய பாக்கறது தான் :)ஹி ஹி

ஆனாலும் இந்த வாட்டி கண்டிப்பா இதை நடத்திக் காட்டனும்ன்னு கூடுதலா இன்னொரு ரெஷல்யூஷன் எடுத்திருக்கேன்.

உங்க ரெஷல்யூஷன்ஸ் என்னன்னு சொல்லுங்க இலா. போன வாட்டி எதயும் எடுத்து கடைசி வரைக்கும் வச்சிருந்தீங்களா?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

இலா நலமா? நீண்ட நாட்களுக்குப் பின் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதுவரையில் நான் ரெஸல்யுஷன் எதுவுமே எடுக்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. ஆகவே ஏதாவது ஒரு உபயோகமான ரெஸல்யுஷன் எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய ரெஸல்யுஷன்:) எனக்கு ஒரு அடி குடுக்க வேண்டும் என்பது இலாவின் ரெஸல்யூஷனாக இருக்காது என்று நம்புகிறேன்:)

உங்கள் ரெசல்யூஷன் சொல்லாமல் எங்கள் ரெசல்யூஷன் கேட்கிறீர்களே?சரி இலா கேட்டாச்சு.நானும் சொல்லிடுறேன்

.1.கம்பியூட்டர் முன் அதிக நேரம் இருக்கக்கூடாது.

2.பசங்க தப்பு செய்தால் கோபமே படாமல் நயமாக புரிய வைக்கணும்.

3.இந்த நான் வெஜ்ஜை குறைத்துக்கவேண்டும்(முழுசா விட முடியாதுப்பா)

4.அறுசுவைக்கு மீண்டும் அடிக்கடி யாரும் சமைக்கலாமில் கலந்துக்கணும்.

5.மாதம் ஒரு முறை பிடித்தமான பொருள் ஒன்றை தானமாக கொடுத்துவிட வேண்டும். ஐந்து போதும்.

arusuvai is a wonderful website

உருப்படற வழி!!!
சந்தனா!! அதையே தான் நானும் நெனவு தெரிஞ்ச நாள்ள இருந்து டிரை பண்ணுறேன்...ஆமாங்க போன வருஷ கடைசியில வெயிட்டே குறையலைன்னானும் ஆக்டிவ் லைஃப் ஸ்டையில் மெயின்டெயின் பன்னணும்ன்னு நினச்சேன்....
இடையில் ஒரு 3 மாசம் தான் கேப் அப்புறம் டிசம்பர் கடைசி வரை அது வந்துடுச்சி...

ரொம்ப பொதுவான குறிக்கோள் உங்களது...
கொஞ்சம் டீடெயிலா வந்து சொல்லுங்க...

வின்னி அக்கா!!!! எப்பிடிகீறீங்க.. சொல்லாம கொள்ளாம ஊரை விட்டு வந்திட்டேன்... இப்ப உங்க ஊரில இருந்து கொஞ்சம் பக்கம் தான்.. சம்மரில வரலாமா??

ஷாதிகா ஆன்டி!!! ரொம்ப கஷ்டமான ரெசல்யூஷன்... கோவம் சொல்லிட்டா வருது :))

உங்க கிட்ட இருந்து நான் ஒன்னு எடுத்துக்கிறேன்.. மாதம் ஒரு முறையாவது யாருக்கேனும் பதில் உதவி எதிர்பாராமல் உபகாரம் செய்யவேண்டும் :))

புதுசா ஒரு லாங்வேஜ் கத்துக்கணும்
ஒரு முறையாவது இமா/நர்மதா மாதிரி கிராஃப்ட் செய்து அருசுவைக்கு அனுப்பணும்.
முடிந்தவரை ஒரு நாளில் 3 புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கணும்...
அதில ஒரே ஒரு விஷயத்தையாவது ஒன்னுமே தெரியாத மாதிரி அனலிடிகலாக அணுகாம குழந்தை எப்படி அணுகுமோ அப்படி செய்யணும்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நல்ல தலைப்பு தான்.

நான் போன வருட முடிவு கோவம் குறைக்கணும்னு,இப்ப நெறைய கொறசுடேன்.
இந்த வருடம் நெறைய சபதம் இருக்கு ;-)
இப்ப pregnanta இருக்குறதால வேற எக்கச்சக்கமா எடை போட்டு இருக்கேன்.நெறைய எடை கம்மி செய்யணும்.
-------------------------
இரண்டாவது யாரையும் நம்ப கூடாது.சீக்கிரம் ஏமாற கூடாது.
என்னகு ஒரு பழக்கம் .என்னிடம் சிறிது பேசுபவர்கள் எல்லரும் நல்லவர்கள் என்று நம்பிடுவேன்.பின்னால கால வாரி விடரப தாங்க முடியாம அழுவேன்.
-----------------------
மூன்றாவது இந்த வருடம் எதாவது படிக்கலாம் என்று உள்ளேன்.இங்கு வந்து நான்கு வருடத்தில் முன்ன படித்து எல்லாம் மறந்து போயிடுது.
இன்னும் ஒரு இரண்டு வருடத்துல வேலைக்கு திரும்ப போகலாம்னு இருக்கேன்.பார்போம்.

Anbe Sivam

Anbe Sivam

ஹாய் இலா இமா சுடர் நீங்க எல்லாம் நிறைய resolutin எடுத்து இருக்கீங்க நான் இந்த வ்ருடமாவ்து எனது எடையை குறைக்கனும் நினைக்கிறேன் என் க்ணவ்ருக்கு நான் கல்யாணம் ப்ண்ணும் போது 60kg இருந்தேன் அதேமாதிரி இருக்க்னும்னு அவ்ருக்கு ரொம்ப ஆசை ஆனால் நான் தான் அத நிறைவேற்றவே முடிய்லை after delivery நான் இப்போது 75 இருக்கிறேன் எனது உட்ல் நிலை மோச்மாயிடும்னு ப்ய்ப்ப்டுறர் எனக்கு பாலி சிஸ்டிக் ஓவரிஸ் இருக்கு அதனால் இந்த முறை என்னுடைய அறுசுவை தோழிகள் உதவியால் தான் எனது எடையை குறைக்க் நினைக்கிறேன் நீங்க எல்லாம் என்க்கு உதவி செய்றீங்களா அப்புறம் எந்து கோப்த்தை குறைக்க் வேண்டும் அதும் எனது இந்த பாலிஸிஸ்டிக்னாலதான் முக்கியமா அடுத்த வ்ருட்த்திற்குள் நல்லா ச்மைய்ல க்ற்றுக்கொள்ள வேண்டும் உங்கள் மாதிரி நானும் குறிப்புக்ள் கொடுக்க் வெண்டும் ரொம்ப ஆசையா இருக்கு நிறைய தோழிகள் என்க்கு இருக்க வேண்டும் எல்லாரும் நல்ல வ்ள்மாக வாழ வேண்டும்

இலா, வரலாமாமாவா! கண்டிப்பா வரனும். எப்போ வர்றேன்னு சொல்லு.எந்த ஊர் இலா? ஊரு பிடிச்சு இருக்கா?

நானும் யோசிச்சு ஒரு முடிவு எடுத்து இருக்கேன்:)

புக்ஸ் படிக்கனும். ஒழுங்கா சாப்பிடனும்:) இப்போதைக்கு இவ்வளவுதான்.

அறுசுவை அங்கத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு உறுதி....
1. தேவையில்லாமல் அழக்கூடாது ...
2. அனாவசியமாக சிரிக்ககூடாது....
3. யாரையும் மனம் நோகடிக்ககூடாது....
இது புத்தாண்டுக்கு மட்டுமல்ல தினமும் நினைப்பதுதான்...
4.பொய் சொல்லக் கூடாது...

//ஹாய் இலா இமா சுடர் நீங்க எல்லாம் நிறைய ரெசொலுடின் எடுத்து இருக்கீங்க//
ஃபர்வீன் என்ன சொல்றீங்க!! :)
என் ஒரேஏ தீர்மானம் இப்போ இருப்பது போலவே எப்போதும் இருப்பேன் என்பதுதான். :))

இமா

‍- இமா க்றிஸ்

இமா நீங்க என்ன சொல்றீங்க்ன்னு எனக்கு புரிய்லை ப்ர்வீன் என்ன சொல்றீங்க !! நீங்க என்ன சொல்றீங்க \இமா நான் எதாவ்து தப்பா சொல்லிட்டேனா இமா

மேலும் சில பதிவுகள்