ஆறு மாத குழந்தை எடை அதிகரிக்க உணவுமுறை

Hai Friends,

என் மகனுக்கு ஆறாவது மாதம் ஆரம்பித்துள்ளது.செவ்வாழபழம் கொடுக்காலாமா?.என்னுடைய மகன் ஒல்லியாக இருக்கான்.அவனுடைய எடை அதிகமாக, என்ன உணவு கொடுக்கலாம்.மற்ற மன்ற தோழிகளும் தெரிந்ததை சொல்லவும்.பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.நன்றி.

என்றும் அன்புடன்,

அனிதா.

அன்புள்ள அனிதா... எனக்கு சிலர் சொன்ன யோசனையை உங்களுக்கு சொல்கிறேன்.... :)

1. பருப்பு வேக வைத்த நீர் கொடுக்கலாம்.
2. கோதுமை பால் விட்டு கஞ்சி காய்ச்சி நெய் சில துளிகள் சேர்த்து கொடுக்கலாம்.
3. வாழைப்பழம் பால் விட்டு மில்க் ஷேக் போல் செய்து கொடுக்கலாம்.
4. ஆப்பில் வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.
5. உருளைக்கிழங்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.

உருளை, வாழை இரண்டுமே எடை அதிகமாக்க உதவும். எந்த உணவும் ஆரம்பிக்கும் போது கொஞ்சமாக கொடுத்து ஒத்துக்குதா குழந்தைக்குன்னு பாருங்கள். அப்படியே தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகமாக்க வேண்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

lathakumar
ஹாய் அனிதா,
எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன் நேந்திரபழத்தை சிரிதாக கட்செய்து காயவைத்து பொடியாக்கி வென்நீரில் கீண்டி கொடுத்தால் குழந்தைக்கு எடை அதிகரிக்கும்

lathakumar

ஹாய் லதா & வாணி,உங்களுடைய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கு.முயற்சி பண்ணி பார்த்துவிட்டு எழுதிகிறேன்.மிக்க நன்றி.

அன்புடன்
அனிதா

மேலும் சில பதிவுகள்