காஸ் அடுப்பு கரி படிகிரது. உங்கவுங்கள் தோழிகளே.....

எனக்கு காஸ் அடுப்பு ( குண்டான், கிண்ணம் எல்லாம் ) கரி படிகிரது... என்ன செய்ய? எடுத்து கீலீன் பன்னியும் சரி ஆகலை...? உங்கவுங்கள் தோழிகளே..... பிலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு....

ஹாய் ப்ரபா
எப்பிடியிருக்கீங்க? நானும் ரொம்ப நாளைக்கு அப்பறம் இப்பதான் அறுசுவைப்பக்கம் வர்றேன்.
கேஸ் அடுப்பினை ஒருமுறை சர்வீஸிற்கு விட்டு வாங்குங்க.
அல்லது வீட்டிலேயே பர்னரை ரன்னிங் வாட்டரில் விட்டு க்ளீன் பண்ணிப்பாருங்க.

நலமா.கீதா சொல்வது போலும் க்ளீன் பண்ணலாம்.நான் பர்னரை ஹேர் ட்ரையர் கொண்டு க்ளீன் செய்வேன்.கிண்ணத்தை கீளீன் செய்ய எமரி சீட் கடைகளீள் கிடைக்கும்.அதை வாங்கி கிண்ணத்தை தேய்த்தால் நன்றாக கீளீன் ஆகிவிடும்.

radharani

ஹாய் ராதா

எப்படி இருக்கீங்க? என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம், புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது? பொங்கலுக்கு தயார் ஆகிட்டீங்களா? நம்ம ஊர்ல கரும்பு விற்பனை ஜோரா இருக்குமே? அதையெல்லாம் பார்க்க ஆசையா இருக்கு....ஹ்ம் என்ன பண்றது உங்கள மாதிரி தோழிகள் சொல்லி கேட்டுக்க வேண்டியது தான்..... அறுசுவைக்கு வாங்க அரட்டையை தொடர்வோம்.......

first u clean water wash after dry.then u will use.

நான் தினமும் காலையிலும் சரி இரவிலும் சரி சமையல் முடிந்ததும் சிலிண்டரை ஆஃப் பண்ணிருவேன். நேத்திக்கு ராத்திரியும் ஆஃப் பண்ணிட்டேன், ஆனா இன்னிக்கு காத்தால பால் காய்ச்சலாம்ன்னு சிலிண்டர் ஆன் பண்ணின போது அதில் ஒரு சத்தத்துடன் கேஸ் லீக் ஆகுது. பக்கத்து வீட்டு ஆன்ட்டியும் வந்து பார்த்து ரெகுலேட்டரை கழட்டி திரும்ப போட்டு பார்த்தாங்க,ஆனாலும் அதே மாதிரிதான் இருக்கு.

நான் இங்கு வேலை செய்வதால், சிலின்டர் தெரிந்தவரிடம் இருந்து தான் வாங்கி யூஸ் பண்ணிட்டு இருக்கோம், அதனால் கேஸ் கம்பெனியிலும் சொல்ல முடியவில்லை, தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள் ப்ளீஸ்

அன்புடன்
பவித்ரா

tube -ல் ஏதும் பிரச்சனையா என்று பார்க்கலாம். பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு tube -ஐ மாற்றச் சொல்வார்கள். பெரும்பாலானவர்கள் அதைச் செய்வதில்லை. அதில் பிரச்சனை இல்லையென்றால் யாரையேனும் அழைத்துப் பார்ப்பதே நல்லது. நாமாக எதையாவது செய்து பார்ப்பது நல்லதல்ல.

இன்னைக்கு சாப்படு hotel -ல தானா? :-)

அன்புடன்,
இஷானி

கேஸ் கம்பெனில சொல்லமுடியாவிட்டாலும் சிலிண்டர் கொண்டு வரப்பவரிடம் சொல்லி பாருங்களேன். சில நேரங்களில் அவர்கள் கூட சரிசெய்து கொடுக்கிறார்கள்.
எங்க வீட்டுல இந்த பிரச்சனை இருந்தது ரெகுலேட்டர், டியூப் இரண்டையும் மாற்றிய பின்தான் சரியானது.

பவி கேஸ் சிலிண்டரில் உள்ள ரப்பர் வாஷர் டேமேஜ் ஆகியிருந்தாலும் கேஸ் லீக் ஆகும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு வாஷர் டேமேஜ் ஆகியிருக்கும்னே தோணுது. சிலிண்டர் கொண்டு வருபவர்களிடம் சொன்னாலே சரியாக்கித் தருவார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கேஸ் விஷயத்தில் ரிஸ்கே வேண்ட்டாம்பா. மெக்கானிக்கை கூப்பிட்டு
சரி பண்ணச்சொல்லிடு. அதுதான் பெட்டர்.

எல்லாருக்கும் முதல்ல நன்றி, பக்கத்து வீட்டு ஆன்ட்டி கூட வாஷ்ஷரா இருக்கும்ன்னு தான் சொன்னாங்க, ஆனா நான் முறைப்படி சிலின்டர் இல்லாததால் அவங்களும் வந்து செய்வாங்கலான்னு தெரியலை, முயற்சி பண்ணி பார்க்கிறேன்.

ட்யூபும் சரி ரெகுலேட்டரும் சரி புதுசாதான், அதனால் ட்யூப் ப்ராப்ளம் இல்லைன்னு தான் நினைக்கிரேன். சரியாகும் வரை நைட்ல சாப்பாட்டுக்கு கொஞ்சம் கஷ்டம், காலையும் மதியமும் கேன்டீன் இருக்கு ஆனா, சாப்பாடு சரியிருக்காது. உங்க எல்லாரும் மீண்டும் என் நன்றி.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்