தோசை இட்டலி அப்ப மா கரைத்து வைத்தால் புளிக்குதே இல்லை

நான் தோசைக்கோ இட்டலிக்கோ அப்பத்துக்கோ கரைத்து வைத்தால் புளிக்குதே இல்லை. இதற்கு ஏதாவது தீர்வு இருக்கா?

ஹாய் லலிதா
இப்ப குளிர்காலம் என்பதால் மாவு புளிக்கிறது ரொம்ப கஷ்டம்தான்.
எனக்கும் சரியான தீர்வு தெரியலை. ஆனா ஊறவைக்கும் நேரத்தினை அதிகபடுத்திப்பாருங்க.
மாவு ஆட்டியதும் ஒரு வெள்ளைத்துணியில் பாத்திரத்தின் வாயினை கட்டி மூடி வெயிலில் வைங்க.
இதுவிஷயமாய் பழைய பதிவுகளில் இருக்கான்னு தேடிப்பாருங்க!

தங்களிடம் கன்வென்ஷன் ஒவன் இருக்கிறதென்றால், ஒவனை 200 டிகிரியில் 2 ல் இருந்து 5 நிமிடம் வரை ப்ரீஹீட்(pre heat) செய்து அனைத்துவிடுங்கள். மாவு அரைத்தவுடன் கரைத்துவிட்டு அதை ஒவனில் வைத்தீர்களானால், மறுனாள் மாவு புளித்துவிடும். குளிர் காலத்தில் நான் இப்படித்தான் செய்வேன்.

லலிதா... மாவு புளிக்க ஈஸ்ட் சேருங்க. 5 மணி நேரத்தில் புளிச்சுடும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லளிதா மாவு புளிக்கிறது குளிர்காத்தில் கஷ்டம் தான்.
வெளிநாடுகளில் இருக்கிறவர் என்றால் ரொம்ப கஷ்டம் தான் இப்ப வெயிலே கிடையாது. மீனா சொல்வது போல் நான் செய்வேன். இல்லை என்றால் கேஸ் அடுப்பு அல்லது எலக்ட்ரிக் அடுப்பு என்றால் சமைத்ததும் அடுப்பு கொஞ்சம் நேரத்திற்க்கு சூடாக இருக்கும் அதன் மேல் வைத்தால் கூட புளிக்கும்.

மாவு புளிக்க கொஞ்சம் அதிகமாக அரைத்து கொள்ளுஙக்ள்.
அரைத்த மாவை கைகளால் நன்கு பிசைந்து வைத்தால் கூட புளிக்கும்.
குளிர் காலத்தில் புளிக்க வைப்பது சிரமம் ஆகையால் இரண்டு நாள் முன்பு அரைத்து புளிக்க விட்டு அதை ஒரு வாரம் வரை பயன் படுத்தலாம்.

பிரிட்ஜ் மேலும் வைக்கலாம்

Jaleelakamal

நாங்க டில்லில இருக்கோம் இங்க குலிர் காலதுல மாவைக் கம்பள் வைத்து மூடிவிடுவோம் ,ஸ்டெபிளாசர் மேலேயும்வைக்கலாம் பழைய மாவு உரைக்கு கொஞ்சம் எப்போதும் வைத்திருக்கவும்

do fast mathi

பதிலளித்த அணைவருக்கும் நன்றி. உங்கள் அணைவரின் advice படி செய்து பார்க்கிறேன்.

Lalitha

மேலும் சில பதிவுகள்