3 மாதக்குழந்தைக்கு வாயுவு பிரச்சனை

தோழிகளே எனது தோழியின் குழந்தை 3 மாதம் ஆகிறது ஆண் குழந்தை அவருக்கு பிரளி வாயுவுன்னு சொல்றாங்க டாகட்ரிடம் காமித்து மருந்து கொடுக்கிறாள் வயிறு ரொம்ப வலியால் கத்துறானாம் இரவில் தூங்க மாட்றானாம் அந்த வாயுவுக்கு என்ன வீட்டு வைத்தியம் இருந்தால் சொல்லுங்கள் இதுக்கு என்ன பண்ணனும் திரும்பவும் வ்லி வ்ராமல் இருக்க கொஞ்சம் உதவி பண்ணுங்க

ஹாய் ஃபர்வீன்!
எப்பிடியிருக்கீங்க? நேற்றே இந்த த்ரெட்டை பார்த்தேன். ஆனா எனக்கு இதுவிஷயமாய் எதுவும் தெரியலை.
பிரளி வாயு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா என்னன்னு எனக்கு ஞாபகம் இல்லை.
எங்க ஊரில் அதனை குடல் தட்டுன்னு சொல்வாங்கன்னு தோணுது.
அதுக்கு அனுபவசாலிகள் வயிற்றினை நீவி எந்த இடத்தில் வாயு இருக்குன்னு கண்டுபிடிச்சு நீவி விடுவாங்க.
வேற வகையான வாய்வாக இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதால், அம்மா பூண்டு சேர்த்துக்கிட்டால் நல்லது.
உங்க தோழியின் குழந்தைக்கு இந்த வாயுத்தொல்லை சரியாகி உங்க நிம்மதி பெற கடவுளை வேண்டிக்கொள்கிறேன்!

பிறளி வாய்வுக்கு ஊரில் பிறளிக்காய் என்று கிடைக்கும்( நாட்டு மருந்து கடைகளில்) அதனை உரைத்து கொடுக்கலாம். பால் பெருங்காயத்தை வெந்நீரில் ஊறவைத்து கொடுத்தால் அழும் குழந்தை சிறிது நேரத்தில் நிறுத்தி விடும்

கீதா பிரபா இருவருக்கும் எனது நன்றி நீங்க சொன்னத சொல்கிறேன் அவ திருச்சில ஒரு எண்ணெய் வாங்கி அதை தாய்பாலில் கல்ந்து கொடுத்தாளாம் அப்புறம் ச்ரியா போயிடுச்சு சொன்னால் அந்த எண்ணெய் திருச்சில்தான் கிடைக்குமாம் ப்க்கத்து வீடு பாட்டி சொல்லி கொடுத்து இருக்கிறாள் இப்போ நல்லா இருக்கனாம் thanks for u r reply ggeetha and praba thanks a lot

சோம்பை லேசாவருத்து தண்ணீர் கொதிக்கவைத்து வற்ற வைத்து அந்த தண்ணீரை கொடுங்கள்.

குழந்தைக்கு சாப்பாடு தயாரிக்கும் போது சோம்பு (அ) பூண்டு சேர்த்து தயாரித்து கொடுங்கள் கேஸ் சேராது.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்