யாரவது help பண்ணுங்க pls

ஹாய்,
எனக்கு ஒரு உதவி வேணும்.... I am a regular visitor of this site ..
எனக்கு Feb 19 கல்யாணம் நடக்க போகுது.. எனக்கு முகப்பரு இருக்கு.. என் roommate முகத்துல பூண்டு பேஸ்ட் போட்டா சரி ஆயடும்னு சொன்னங்க!
அது போட்டா எடத்துல தோல் உறிஞ்சு வந்துடுச்சு... இப்போ முகத்துல கருப்பா ஆய்டுச்சு.. இன்னும் ஒரு மாசம் கூட இல்ல கல்யாணத்துக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல... யாரவது ஐடியா குடுங்களேன், பிளஸ்....

நன்றி..
பனிமலர் கணேஷ்

ஹாய் பனிமலர்!

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதற்கு சரியான ட்ரீட்மென்ட் என்னன்னு எனக்கு தெரியலை. ஆனா, தேவா மேடம், உமா (பாப்ஸ்) இவர்கள் இருவருடைய அழகுக்குறிப்புகள் பற்றிய பழைய பதிவுகளில் கொஞ்சம் பொறுமையாய் தேடிப்பாருங்க.
இன்று என் குழந்தைகளுக்கு ஸ்கூல் விடுமுறை. நாளைக்குள் முடிந்தால் தேடிப்பார்த்து உங்களுக்கு எழுதறேன்.
ரொம்ப நேரம் கம்ப்யூட்டரில் உட்காரமல் நல்லா ரெஸ்ட் எடுங்க.
அப்பதான் முகம் சோர்வடையாமல் இருக்கும்.
இன்னும் நிறைய தோழிகள் வருவாங்க உங்களுக்கு ஆலோசனை சொல்ல. கவலைப்படாமல் ஃப்ரெஷ்ஷாய் இருங்க!

ஹாய்
இப்போதைக்கு இதுதான் என்னால் கண்டுபிடிக்க முடிந்தது. இது அழகுக்குறிப்புகள் பகுதியில் நம் தோழி ஒருவர் சொன்னதுதான்.முயற்சி செய்து பாருங்க!

என் பாவனையை சொல்லுகிறேன். பாவித்து பாருங்கள்.
பயறு மா 500g எடுங்கள். அதனோடு பத்தில் ஒரு பங்கு வெந்தய தூளை சேருங்கள். இவற்றோடு சந்தன தூள் ஒரு கப், கடலை மா ஒரு கப் சேருங்கள். பின் இந்த கலவையை ஒரு டப்பாவில் போட்டு மூடி நன்றாக குலுக்குங்கள். அப்போது தான் எல்லாம் ஒன்றாக சேரும். பின் இதனை குளியலறையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் கரண்டி போட்டு வைத்து கொள்ளுங்கள். எப்போது முகம் கழுவ தோன்றுகிறதோ அப்போதெல்லாம் இதனையே பாவித்து வாருங்கள். தேவையென்றால் இந்த பொடியோடு பால் கலந்து முகத்தில் நன்றாக மிருதுவாக தேய்த்து கழுவி வர முகத்தில் உள்ள எல்லா பிரச்சினைகளும் ஓடி விடும். சுருக்கம் விழாது. கருவளையம் வராது. கரும்புள்ளிகள் வராது. தழும்புகள் மாறி விடும். ஆனால் சோப்பு போன்றவற்றை வாழ்நாள் முழுதும் முற்றாக நிறுத்த வேண்டும். பிறகு பாருங்கள் வித்தியாசத்தை!!!

இது external treatment. ஆனால் உட்சுத்ததுக்கு நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

Luxmy
எண்ணங்கள் வாக்குகளை விட வலிமையானவை

வாழ்த்துக்கள்.

GARNIER pure pimple control pen ஐ முகப்பரு வந்தவுடன் போடவும், immediate control பண்ணும்.

சோப்பிற்கு பதில் பயத்த மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி கலந்து முகத்தில் போடவும்.

ஹாய் பனிமலர் சாந்திக் ஃபேஸ் பேக் நல்ல பலன் கொடுக்கும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் ஆயுர்வேதிக் கடைகளிலும் கிடைக்கும்.

இங்கு நாங்கள் சொல்லும் எல்லாமே பொதுவான முறைகள். ஆனால் உங்கள் ஸ்கின் டைப் பொறுத்து ட்ரீட்மெண்ட் எடுத்தால் விரைவில் பலன் கிடைக்கும். அருகில் உள்ள நல்ல பியூட்டீஷியன் அல்லது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது என எனக்கு தோன்றுகிறது. இன்னும் திருமனத்திற்கு ஒருமாத கால அவகாசமே இருப்பதால் ட்ரையல் செய்து பார்க்க கால அவகாசம் குறைவு.

எல்லாவற்றிற்கும் மேல் இதை நினைத்து கவலைப்படாதீர்கள். அது மேலும் முகத்தை சோர்வடைய செய்யும். தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடியுங்கள். முகத்திற்கு பொலிவு கிடைக்கும்.

கரும்புள்ளிகள் திருமணத்திற்கு முன் மறையவில்லை என்றாலும் மேக்கப் செய்யும் போது கன்சீலர் உபயோகித்து அதை மறைத்து விடலாம். உங்கள் பியிட்டீஷியனை கலந்தாலோசியுங்கள்.

இனிமையான மணவாழ்விற்கு எங்கள் எல்லோரது வாழ்த்துக்கள். சந்தோஷமாக இருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கீதா, பிரபா, கவி.. ..

உங்களுடைய வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி.. இவ்ளோ response வரும்னு நான் எதிர் பார்க்கவே இல்ல.. ரொம்ப ரொம்ப நன்றி...
நான் நீங்க சொன்னதை கண்டிப்பா செய்யறேன்...

கொஞ்சம் சுமாரா இருந்த முகத்த பூண்டு போட்டு நானே கெடுத்துட்டேன்.. பாக்கறவங்க எல்லாரும் 'என்ன ஆச்சு உன் முகத்துல' ன்னு கேக்கற மாதிரி ஆய்டுச்சு.. அதன் கவலையா இருக்கு.. நீங்க சொனன்னதுக்கப்புரம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு...

தேங்க்ஸ்!
பனிமலர் கணேஷ்

Thanks,
Panimalar Ganes

ஹாய் பனிமலர்!
நீங்க உமாகிட்ட கேட்டிருந்ததையும் படித்தேன். உமா உங்க பதிவினை பார்த்திருந்தால் உடனே பதில் போட்டிருப்பாங்க. சீக்கிரமே அந்த கலர் மாறிடும். கவலைப்படாதீங்க.
அதுவுமில்லாமல் கவிசிவா சொன்னமாதிரி கல்யாண நேரத்தில் அந்த கருப்பு திட்டினை மறைக்கிறார்போல் மேக்கப் போட்டுக்கலாம்.
அத்துடன் ஒரு புக்கில் நான் படித்தது,

பயறுதூள், எலுமிச்சைசாறு, சர்க்கரை கலந்து அதனை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்தாலும் கறுப்பு நிறம் மாறிடும்னு போட்டிருக்கு!

உங்களுக்கு வந்திருப்பது கரும்புள்ளி மாதிரியான பிரச்னையான்னு தெரியல.
நம்ம மனோகரி மேடத்தோட ஒரு ஆலோசனையில் இது பற்றி சொல்லியிருக்காங்க. ஆனா இதை செய்யலாமான்னும் எனக்கு தெரியல.
ஆனால் உங்களுக்காக அதனை இங்கே பேஸ்ட் பண்ணியிருக்கேன். மனோகரி மேடம் தவறாக நினைக்கவேண்டாம்.
இதனை பண்ணலாமான்னு தோழிகள் யாராவது சொல்லவும்!

கரும்புள்ளி
டிசம்பர் 18, 2006 - 4:45ப்ம் - வழங்கியவர் Mஅனொஹரி
டியர் பானு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை வீட்டிலிருந்தே நீராவியினுதவியால் அகற்றி விடலாம். இந்த சிகிச்சையை ஒழுங்காக செய்வதர்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்கவேன்டும்.முதலில் முகத்தை நன்கு கழுவி ஈரத்தை ஒற்றி எடுக்கவும்.பிறகு இரண்டு கைகளிலும் ஏதாவது ஒரு கிரீமை அல்லது ஆலிவ் ஆயிலை பூசிக்கொண்டு கிழிலிருந்து மேலாக வட்ட வட்டமாக விரல்களால் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு முகத்தை நீராவியில் காட்ட வேண்டும்.சளி பிடித்திருக்கும் பொழுது எப்படி செய்வோமோ அதைப் போலவே ஒரு கெட்டியான துண்டால் தலையை முழுவதும் மூடி நீராவி வெளியேராமல் முகத்தை காட்ட வேண்டும்.முகம் முழுவதும் நன்கு வியர்க்கும் வரை வைத்திருந்து அதை ஒரு காகித நேப்கினால் ஒற்றி எடுக்கவும்.இப்பொழுது கரும்புள்ளிகள் நன்கு இளகி இருக்கும். அதை இந்த சிகிச்சைக்ககவே ஒரு சிறிய சாதனம் இருக்கின்றது. அல்லது ஏதாவது ஒரு நாணயத்தை எடுத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சற்று சாய்வாக பிடித்து அழுதினால் கரும்புள்ளிகள் வெளியேருவதை காணலாம்.இப்படியாகரும்புள்ளிகளை முடிந்தவறை அகற்றிவிடவும்.பிறகு கடலை மாவை தண்ணீரில் கெட்டியாக கரைத்து முகம்முழுவதிலும் பூசி பத்து நிமிடம் காயவைத்து மிதமான நீரினால் அதை இலேசாக அகற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை முகத்தை நன்கு கழுவி ஒற்றிஎடுத்துவிடவும் அவ்வளதான். மாற்றத்தை கைகளாலே நன்கு உணரலாம்.இந்த சிகிச்சையை வாரா வாரம் கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கும் வரை செய்ய வேண்டும. பிறகு மாததிர்கொரு முறை செய்தால் முகத்தை எந்த மாசு மரு இல்லாமல் பாதுகாக்கலாம். இந்த சிகிச்சையை பாதுகாப்பான முறையில் செய்வதர்க்கு நீராவி பிடிக்கும் சாதனத்தை சூப்பர் மார்க்கட்டில் பியூட்டி அண்ட் காஸ்மட்டிக் பொருட்கள் இருக்கும் பகுதியில் வைத்திருப்பார்கள். விலையும் மலிவாகத்தான் இருக்கும்.அதனை வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் பயன்படும்.ஒவ்வொரு பெண்மணியும் வைத்திருக்க வேண்டிய அழகு சாதனம் இது.ஒகே பானு இந்த சிகிச்சையினால் நல்ல பலனை அடைவீர்கள் என்று கூறி எனது கருத்தை முடித்துக் கொள்கிரேன்.நன்றி.

பதிலளி
நீராவி சாதனம்
டிசம்பர் 19, 2006 - 11:59அம் - வழங்கியவர் பானு
Mஅனொஹரி அவர்கள் கொடுத்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி.தாங்கள் கூறிய முறையை செய்து பார்க்கிறேன். தாங்கள் கூறிய நீராவி சாதனத்திற்க்கு ஆங்கிலத்தில் பெயர் என்ன என்று சொல்லுங்கள்.இந்த முறையை தவிர வேற முறை இருக்கிறதா?
ஆலிவ் ஆயில் எதற்கு எல்லாம் பயன்படுத்தலம்.நன்றி.

பதிலளி
நீராவி சாதனம்
டிசம்பர் 20, 2006 - 4:41ப்ம் - வழங்கியவர் Mஅனொஹரி
நல்லது பானு. நீராவி பிடிக்கும் சாதனத்தின் பெயர் ஃபேஷியல் ஸ்டீமர் (Fஅcஇஅல் ச்டெஅமெர்). எப்படியும் இரண்டு மூன்று வித கம்பனியின் பெயரில் விற்பனை செய்வார்கள். ஆகவே குழப்பம் அடையாமல் இருப்பதிலே விலை மலிவானதாக தேர்வு செய்தால் போதுமானதாக இருக்கும்.
ஆமாம் இந்த ஒரு சிகிச்சை முறை தான் கரும்புள்ளியை நீக்கவும், வராமல் தடுக்கவும் நல்ல நிரந்தரமான நல்ல பலனைத் தரும்.மற்றபடி வேறு முறையான பிய்த்தெடுக்கும் முறை உள்ளன. ஆனால் அவற்றால் தற்காலியமான பலன் தான் கிடைக்கும். கடையில் சென்று பார்த்தீர்களானால் Bலcக்ஹெஅட்ச் ரெமொவெர் என்ற ஸ்ரைப்ஸ் கிடைக்கும். அதையும் முயற்ச்சி செய்து பார்க்கவும்.
ஆலிவ் ஆயிலை தேங்காஎண்ணெய், நல்லெண்ணெயை எதர்கெல்லாம் பயன் படுத்துவோமோ அவற்றிர்கெல்லாம் பயன் படுத்தலாம். தலை முதல் கால் வரையான வெளிப்புச்சுதலுக்கும், சமையலுக்கு பொரிக்க, வறுக்க, தாளிக்க போன்ற எல்லாவிதத்திற்க்கும் பயன் படுத்தலாம். ஒகே நன்றி.

முகப்பரு குறைய பிரை அயிட்டம் சாப்பிட கூடாது.

தண்ணீர் நிறைய குடிக்கனும்

கருவேப்பிலை, மஞ்சள்,கிராம்பு, வேப்பிலையை அரைத்து பருவின் மேல் தடவுங்கள்.

இப்போதைக்கு மஞ்சள் கிராம்பு தூள் கூட குழைத்து வைக்கலாம்

Jaleelakamal

தேங்க்ஸ் கீதா அண்ட் ஜலீலா....
நேத்து நான் செஞ்ச ஒரே வேலை இந்த சைட்ல இருந்த எல்லா threads உம் படிச்சதுதான்.... நீங்க சொன்னது எல்லதேயும் நோட் பண்ணி வெச்சிருக்கேன்...... இதுக்குன்னு தினமும் டைம் ஒதுக்கி கொஞ்சம் கேர் பண்ணனும்னு பிளான்.....
கண்டிப்பா உங்ககிட்ட திரும்ப ஏதும் கேப்பேன்! ஹி ஹி ஹி .....

உங்களுக்கு எப்பிடி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப சந்தோசமா இருக்கு, ஏதும் ஒரு ஹெல்ப் வேணும்னா இங்க தாராலமா போஸ்ட் பண்லாம் போல!

பனிமலர் கணேஷ்

Thanks,
Panimalar Ganes

ஹாய் பனிமலர் எப்படி இருக்கிங்க கல்யாணத்துக்கு வாழ்த்துக்கள் மனதை சந்தோசமாய் வைங்க துள்சி,வேப்பிலை,புதினா மூன்றும் ஒரேஅளவில் எடுத்து நன்றாக அரைத்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் போட்டுகாய்ந்த்ததும் கழுவுங்கள் தொடர்ந்து செய்யுங்கள் ஒரு வாரத்திலே நல்ல பலன் கிடைக்கும் என் சகோதரி செய்து பார்த்து நல்ல பலன் கிடைத்தது
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

தேங்க்ஸ் பிரியா! நிச்சியமா ட்ரை பண்றேன்..

Thanks,
Panimalar Ganes

Thanks,
Panimalar Ganes

மேலும் சில பதிவுகள்