சம்பா கோதுமை ரவா அடை

தேதி: January 18, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (7 votes)

 

சம்பா கோதுமை ரவா - கால் படி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
தேங்காய் துருவல் - அரை கப்


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சம்பா கோதுமையை புடைத்து சுத்தம் செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.
முதலில் மிக்ஸியில் மிளகாய் வற்றல், பெருங்காயம், சீரகம், உப்பு, புளி ஆகியவற்றை போட்டு பொடியாக அரைக்கவும்.
அதன் பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் கோதுமை ரவை மற்றும் கால் கப் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் அல்லது தட்டில் அரைத்த விழுதை போட்டு அதில் நறுக்கின வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டி தோசைக்கல்லில் வைத்து அடையாக தட்டவும்.
அடையின் மேல் எண்ணெய் ஊற்றி வெந்ததும் 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
சம்பா கோதுமை ரவா அடை தயார். இதை மிக எளிதில் செய்து விடலாம். பெரிய வெங்காயம் பிடிக்காதவர் சின்ன வெங்காயம் சேர்த்து செய்யலாம். உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்ற சிற்றுண்டி. இதை தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடலாம். பாரம்பரிய சமையல், கிராமத்து சமையலில் நிறைந்த அனுபவம் வாய்ந்த <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் இந்த சம்பா கோதுமை ரவை அடை நமக்காக செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திருமதி மங்கம்மா
நேற்று இரவு இந்த கோதுமை ரவா அடை செய்தேன். நன்றாக இருந்தது.
மிகவும் எளிமையான, அருமையான சிற்றுண்டி. நன்றி.

நான் இன்று இரவுக்கு எந்த சிற்றுண்டி செய்வது என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களின் இந்த அடையின் பெயர் பார்த்ததுமே பிடித்துவிட்டது. தேங்காய் சேர்க்காமல் சிறிதளவு கொத்தமல்லி இலை மற்றும் ஒரு பூண்டு பல் சேர்த்து செய்தேன். அருமையாக இருந்தது.

நன்றி.
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

very nice recepi sister,this is very
useful for sugar patients,after reading thie recepi i hve tried this recepi yesterday dinner.good.very tasty.

மேடம் எங்க தாத்தாக்கு அடை நா ரொம்ப புடிக்கும் பேட் செம் டைம் ஹெல்த்யா இருக்கனும் நு சொலுவாங்க இன்னைக்கு காலைல உங்களோட சம்பா அடை செய்தேன் அருமையா இருந்துச்சு நன்றி

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

நான் இதுவரைக்கும் இந்த ரவையில் உப்புமா மட்டும்தான் செய்துருக்கேன், இன்று உங்க குறிப்பை பார்த்து அடை செய்தேன் நன்றாக உள்ளது.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

Super sister