கோதுமை மாவு இனிப்பு தோசை

தேதி: January 19, 2010

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

கோதுமை மாவு -- 2 கப்
வாழைப்பழம் -- 2 என்னம்
வெல்லம்/ சர்க்கரை -- 3/4 கப்
உப்பு -- 1 சிட்டிகை
ஏலக்காய் -- 1 என்னம் (நசுக்கியது)


 

வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்றாக பிசையவும்.
பின் கோதுமை மாவை உப்பு சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து பிசைந்து அதனுடன் வெல்ல,வாழைப்பழ கலவையை சேர்த்து தண்ணீர் தேவை எனில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசையாக வார்த்து நெய்/ எண்ணைய் ஊற்றி திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.
ரெடி.


நன்றாக பழுத்த வாழைப்பழமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் சுபா எப்படி இருக்கீங்க? என்ன இந்தப்பக்கம் ஆளையே காணோம்? ரொம்ப பிசியா? மீண்டும் பார்த்ததில்(!!!!) சந்தோஷம். திவாகர் எப்படி இருக்கிறார்? இந்தியாவில்தான் இருக்கீங்களா?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் கவி,
நன்றாக இருக்கிறேன்.
7 மாதம் கர்பமாக இருக்கிறேன்.
அதனால் கம்ப்யூட்டர் பக்கம் வர இயலவில்லை.
அப்பப்போ வருவேன்.
ஜாகை இந்தியாவில் தான்!
அனைவரிடமும் பேச இயலவில்லை....
நன்றி