தேதி: January 21, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ஆட்டுகால் - 1செட்
வெங்காயம் -2
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழிது -1
சீரகத்தூள் - 2தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 1/2தேக்கரண்டி
மிளகாய்தூள் = 1/2தேக்கரண்டி
மஞ்சள்தூள்- கால் தேக்கரண்டி
உப்பு -தேவைக்கு
தேங்காய் துருவல் -2மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை -1 துண்டு
கிராம்பு -2
ஏலக்காய் -2
வெங்காயம், தக்காளி நறுக்கி கொள்ளவும் .
ஆட்டுக்காலைசுத்தம் செய்து கழுவி வைக்கவும்
தேங்காய் அரைத்து வைக்கவும் .
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும் .
இஞ்சி பூண்டு விழிது சேர்த்து வதக்கவும் .
பின்பு மிளகாய்தூள் ஆட்டுகால் உப்பு சேர்த்து வதக்கி சீரகத்தூள்
மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 1விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து அரைமணி நேரம் வைக்கவும்.
ஆட்டுகால் வெந்த பின்பு தேங்காய் விழுதை சேர்க்கவும்.