உடல் பருமன்

Hi sisters,

என் உடல் பருமன் மிக குறைவு (எடை 49 kg, உயரம் 166cm). இன்னும் 5kg கூடா என்ன பன்றது? please help me mee.

cheers,
gayathri

ஹாய் காயத்ரி!
இந்த மன்றத்தில் நிறைய பேர் எடை குறையத்தான் ஆலோசனை கேட்டிருக்காங்க. முதல்முறையாய் எடை கூட ஆலோசனை கேட்டிருக்கீங்க.

பால் தினமும் (தண்ணீர் கலக்காமல்) 2 டம்ளர் காலையும், இரவு படுக்கும்முன்பும் குடிங்க.
அரிசி உணவு, இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை காலையில் சாப்பிடலாம்.
வெண்ணெய், நெய் அளவாய் சேர்த்துக்கலாம்.
உங்களுக்கு நிறைய நேரம் இருந்தால், மதிய சாப்பாட்டுக்கு பிறகு அரைமணிநேரம் கழித்து குட்டித்தூக்கம் போடலாம்.
மதியத்தில் தூங்கினால் நல்லா வெயிட் போடும்.
உங்களுக்கு பழைய சாதம் பிடிக்கும்னா, முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த சாதத்தில் கெட்டித்தயிர் போட்டு சாப்பிடலாம். (அது வெயில் காலத்தில் மட்டும்).
பொதுவாவே பால் சார்ந்த பொருட்கள் எல்லாமே எடையை கூட்டும், அதே சமயத்தில் கொழுப்பையும் அதிகரிக்கும்.
பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம். அது எடையையும் அதிகரிக்கும்.

தேங்க்ஸ் geetha mam. நிச்சியமா ட்ரை பண்றேன்..

nice points.,

மேலும் சில பதிவுகள்