கொத்தமல்லி இனிப்பு துவையல்

தேதி: January 22, 2010

பரிமாறும் அளவு: 3நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தமல்லி தழை -ஒரு கைபிடி
மிளகாய் வத்தல் - 5
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 50கிராம்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - 2ஸ்பூன்


 

அடுப்பில் வாணலியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் புளி,வத்தலை போட்டு நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
அதே எண்ணெயில் நன்றாக கழுவி நறுக்கிய கொத்தமல்லித்தழையை போட்டு வதக்கி எடுத்து கொள்ளவேண்டும்.
பின்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு சுற்று சுற்றவிட்டு பின் 50கிராம் வெல்லத்தை அதனுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்க வேண்டும்.
இதை இட்லி,தோசைக்கு பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்