மைதா மோதகம்

தேதி: January 25, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மைதா - ஒரு கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - தேவைக்கு
முந்திரி - 5
பாதாம் - 5
வால்னட் - 5
பிஸ்தா - 10
வெல்லம் - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி


 

மைதாவுடன் உப்பு கலந்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து வைக்கவும்.
நட்ஸ் அனைத்தையும் ஒன்றிரண்டாக பொடிக்கவும். நெய் காய்ந்ததும் பொடித்த நட்ஸ் போட்டு வறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக பிரட்டவும்.
வெல்லம் சேர்த்து கலவையாக வந்ததும் எடுக்கவும். மைதா மாவை உருண்டையாக எடுத்து சப்பாத்தியை விட மெல்லியதாக தேய்த்து பூரணத்தை நடுவே வைத்து பூண்டு வடிவில் அல்லது விருப்பமான வடிவில் நன்றாக மூடவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்