ஜப்பான் ஒயர் ரோஸ்

தேதி: January 26, 2010

4
Average: 3.4 (5 votes)

 

ஒரு அடி ஸ்கேல்
சல்லடை வளையம்
கம்பி
ஜப்பான் ஒயர் - ரோஸ் மற்றும் பச்சைநிறம்

 

சல்லடை வளையத்தின் நரம்புகளை வெட்டிவிட்டு வெறும் வளையத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும். மற்றவற்றை தயாராக எடுத்துக் வைக்கவும்.
ரோஸ்நிற ஒயரை ஒரு அடி ஸ்கேலின் இருமுனைகளையும் சேர்த்து 5 முறை சுற்றி 10 அடி ஒயரையாக எடுத்துக் கொள்ளவும்.
இந்த ஒயரை ஸ்கேலின் 18-ம் எண்களிடையே வைத்து ஒரு முடிச்சிப் போட்டுக் கொள்ளவும். மீண்டும் ஒயரை பூ கட்டுவது போல் முடிச்சுப் போட்டு அந்த முடிச்சி மேலே வருவதுப்போல் வைக்கவும்.
முடிச்சுப்போட்டு இருக்கும் இடத்தை மேலே தூக்கி பிடித்துக் கொண்டு அந்த ஒயரின் முனையை சுற்றிய இரண்டு ஒயரில் விட்டு சிறிய துளை போல வந்ததும், அந்த துளையில் மீண்டும் ஒயரின் முனையை விட்டு இறுக்கமாகி கொள்ளவும்.
மீண்டும் ஒரு பூத்தொடுப்பது போல் முடிச்சுப் போடவும். இப்போது சுற்றிய மூன்று ஒயரின் முனையில் முதல் 2 ஒயரில் துளைப்போல விட்டு மேற்சொன்ன முறைப்படி முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.
இதைப்போல் 2 ஒயராக, 2 ஒயராக நடுவில் விட்டு மேலே டைட்டாக பிடித்துக் கொள்ளவும். 10 அடி ஒயருக்கும் இதுப்போல் போட்டு முடிந்ததும் ஸ்கேலில் இருந்து ஒயரை மெதுவாக கழற்றி எடுக்கவும். இது ஒரு இதழ்கான வடிவம். இன்னும் இதுப்போல் ஐந்து இதழ்கள் செய்து வைக்கவும்.
பச்சைநிற ஒயரை ஒரு அடி ஸ்கேலில் அளந்து 6 அடி ஒயராக எடுத்துக் கொள்ளவும். சல்லடை வளையத்தின் ஒரு இடத்தில் ஒயரை வைத்து முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். ஒயரை வளையத்தின் நடுவில் கட்டாமல் கால்பாகத்தில் இருப்பதுபோன்று வைத்து தளர்வாக இல்லாமல் இழுத்து கட்டவும். மீதி ஒயரை நறுக்கி விட்டு படத்தில் உள்ளது போல் 'v' வடிவில் கொண்டு வந்து முடிச்சுப்போட்டுக் ஒயரை நறுக்கிக் கொள்ளவும்.
நறுக்கின ஒயரை 'v' வடிவத்திற்கு நடுவில் வைத்து முடிச்சுப்போட்டு அந்த ஒயரை அடிவழியாக கொண்டு வந்து முன்பு கட்டிவைத்திருக்கும் ஒயர் இணையும் இடத்தில் உள்ள ஒட்டையில் விட்டு எடுக்கவும். ஒயரை மேலே எடுத்து இரண்டாவது ஒயரின் அடிவழியாக சென்று முதல் ஒயரை சுற்றி, இரண்டாவது ஒயரின் மேல் வழியாக வரவும். அடுத்து ஒயரை அடிவழியாகவும், மேல்வழியாகவும் மாறி மாறி விட்டு எடுக்கவும். ஐந்தாவது ஒயர்க்கு வந்ததும் மீண்டும் பின்நோக்கி ஒயரை விட்டு எடுக்கவும்.
இதுப்போல் ஒயர் முடியும் வரைப்போட்டுக் கொள்ளவும். படத்தில் உள்ளது போல் சுற்றி முடித்ததும் வளையத்தில் போட்டிருக்கும் முடிச்சுக்களை கழற்றி விடவும்.
கழற்றிய எல்லா ஒயர்களையும் ஒன்றாக சேர்த்து அதிலுள்ள ஏதாவது ஒயரைக் கொண்டு சுற்றி முடிச்சிப் போட்டுக் கொள்ளவும். இதைப்போன்று மூன்று இலைகள் செய்து வைக்கவும்.
ஒரு பூவிற்கு ஐந்து இதழ்களும், மூன்று இலைகளும் மேற்சொன்ன முறையில் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ரோஸ்நிற ஒயரில் ஐந்து இதழ்களையும் வரிசையாக கோர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
ஒவ்வொரு இதழ்களில் வெளியில் நீட்டியிருக்கும் ஒயரைகளை நடுவில் இருக்கும் ஒட்டையில் விட்டு அடிவழியாக பிடித்துக் கொள்ளவும்.
அடிவழியாக பிடித்து வைத்திருக்கும் ஒயரில் ஏதாவது ஒன்றை எடுத்து கொண்டு மற்ற ஒயரை ஒன்றாக சேர்த்து சுற்றி முடிச்சுப்போட்டுக் கொள்ளவும்.
இந்த ரோஸின் அடியில் செய்து வைத்திருக்கும் மூன்று இலைகளை வைத்து, பூவின் ஒயர்களையும், இலையின் ஒயர்களையும் ஒன்றாக பிடித்து கொண்டு பச்சை ஒயரின் இலையின் அடியிலிருந்து நுனிவரை சுற்றி முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இப்போது பார்க்க பூப்போல இருக்கும்.
ஜப்பான் ஒயரில் செய்யக்கூடிய அழகிய ரோஸ் தயார். இதுப்போல் ஆறு அல்லது ஏழு பூக்களாக செய்து கம்பியில் மேலும், கீழுமாக வைத்து ஒயரால் கட்டி ப்ளவர் ஸ்டாண்ட் போல் தயார் செய்யலாம். இந்த ரோஸ் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் அவர்கள். சிறு வயதிலிருந்தே சமையலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், பழங்கால சமையல், இக்கால நவீன சமையல் என்று அனைத்திலும் திறன் படைத்தவர். சமையல் மட்டுமல்லாமல் தனக்கு தெரிந்த சில கைவினைப் பொருட்களின் செய்முறையையும் நம்முடன் பகிர்ந்துக் கொள்ள வந்துள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ், அழகா இருக்கே. :)

‍- இமா க்றிஸ்

மிகவும் அழகான பூக்கள்.

super

அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

wow! super.
ennaku koodai pinna asai.solli tharingala