தேதி: February 1, 2010
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
அத்திப்பழம் - 500 கிராம்
ஸ்வீட்டன்ட் கன்டென்ஸ்டு மில்க் - 400 கிராம்
நெய் - 8 மேசைக்கரண்டி
முந்திரி - தேவைக்கு
பால் - ஒரு லிட்டர்
அத்திப்பழத்தை பாலில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பாலோடு மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் அத்திப்பழ விழுது, கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து முந்திரியால் அலங்கரிக்கவும்.
Comments
நன்றி அட்மின்...
படத்தை இணைத்தமைக்கு அட்மின் நண்பர்களுக்கு என் நன்றிகள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா