பாட்டுக்கு பாட்டு

புதிதாக ஒரு போட்டி ஆரம்பிப்போமா தோழிகளே?????
போட்டி எப்படி என்றால் நான் ஒரு பாடலை தொடங்கி வைக்கின்றேன்! நான் முடியும் சொல்லில் யாராவது பாடல் பாடனும்
விதிமுறைகள்
* ஒரு முறை பாடியதை இன்னொரு முறை பாட முடியாது!
* யார் முதலில் பாடலை சொல்கின்றோ அவரின் பாடல் முடிவில்தான் அடுத்த பாடல் வரவேண்டும் அத்துடன் முடியும் சொல் என்ன என குறிப்பிட வேண்டும்!
* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!
சரி ஆரம்பிப்போமா.......
நான் தொடங்கி வைக்கிறேன் முதல் பாடலை!

பூவே முதல் பூவே
ஒரு பனித்துளி உனக்காக
போகும் வழியெங்கும்
ஒரு புல்வெளி உனக்காக
காக்கைச்சிறு கூட்டில்
ஒரு மின்மினி உனக்காக
வானம் உடைந்தாலும்
ஒரு விண்மீன் உனக்காக
கண்களின் இமையோரம்
துளி கண்ணீர் உனக்காக

உனக்காக எல்லாம் உனக்காக - இந்த
உயிரும் உடலும் ஒட்டியிருப்பது உனக்காக
எதற்காக கண்ணே எதற்காக - நீ
எப்பவும் இப்படி எட்டி இருப்பது எதற்காக?
கண்ணுக்குள்ளே வந்து கலகம் செய்வது எதற்காக? - மெல்ல
காதுக்குள்ளே வந்து உன் கருத்தைச் சொல்லிடு முடிவாக...

இனி வருபவர் "காது" என்னு தொடங்கும் பாடலில் தொடங்க வேண்டும்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நான் ரெடி நீங்க ரெடியா???.... ;)

காதோடு தான், நான் பாடுவேன்
மனதோடு தான் நான் பேசுவேன்,
விழியோடு தான் விளயாடுவேன்,
உன் மடி மீது தான், கண் மூடுவேன்....

"கண்" என தொடங்கும் பாடல் வேண்டும்...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சவுக்யமா நான் இங்கு சவுக்யமே!
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கியில் வார்த்தை முட்டுது
ஓஹ் ஹோ கண்மணி அன்போடு காதலன் நான்...

அடுத்த வார்த்தை "நான்"

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நானே நானா யாரோ தானா
மெல்ல மெல்ல மாறினேனா
தன்னைத் தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்
நானே நானா யாரோ தானா....

முடிவு-"யாரோ"

யாராவது ஓடி வாங்கோ

யாரோ யாரோடி உன்னோட புருஷன்....
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்....

ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தேர்ந்தடிப்பவனோ சொல்லு
சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை
வெள்ளி வேட்டி கட்டியவனோ சொல்லு
...

"சந்தனம்"

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாரோ யாரோடி உன்னோட புருஷன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க
அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு

அடுத்த வார்த்தை "சொல்லு"

3மற்றும் 4வது வரிகள் இணையத்தில் தேடி கிடைத்தது. தப்பென்றால் நான் பொறுப்பல்ல :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ள்த்தால் தவிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
ஆஹா... சொல்லத்தான் நினைக்கிறேன்
`நினை' என்று தொடங்கும் பாடல்...

radharani

ஆஹா.... இரண்டு பேரும் ஒரே பாட்டு பாடிட்டோமே....!!! சரி பரவாயில்ல....

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா....
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா...
உயிரே விலக தெரியாதா???

"தெரியாதா"

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அத்தனை கஷ்டமான வார்த்தை குடுத்துட்டேனா???

சரி அடுத்த வரி..

"மயங்க தெரிந்த கண்ணே...."

அதனால் "மயங்க"னு துவங்கும் பாடல்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்!

அடுத்து தொடர வேண்டிய வார்த்தை:- அன்பே!

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மேலும் சில பதிவுகள்