6 வயது குழந்தைக்கு பொடுகு.help me please.please

அன்பு தோழிகளே,எப்படி இருக்கீங்க?நீண்ண்ண்ட நாளுக்கப்புறம் மீண்டும் அருசுவைக்கு வந்திருக்கேன்.என் பொண்ணுக்கு இப்போ 6 வயதாகுது.ஆனா அவள் தலையை பார்க்க முடியாது.அவ்வளவு பொடுகு.எனக்கு கொஞ்ச நாள் உடம்பு சரி இல்லாததால் அவளை கவனிக்க முடிய வில்லை.விளைவு.பொடுகு.பத்தாததுக்கு தலை முடி வேறு கொட்டுது.எனக்கு எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலெ.ஸ்கூகுக்கு போகும் பொது தலை முழுதும் வெள்ளை வெள்ளையா இருக்கு.அதனால் தலைக்கு காலையில ஆயில் தடவி தான் ஸ்கூலுக்கு அனுப்பறேன்.ரொம்ப கஸ்டமா இருக்கு.6 வயசு தான் ஆகுது.பொடுகு தீரஎனக்கு ஏதாவது வழி சொல்லுங்க தோழிகளே.நன்றி.

ஹென்னா,செம்பருத்தி இலை விழுது , Eucalyptus ஆயில்,Lime ஜூஸ் ,பால் குழைத்து தலையில் பூசி 15 நிமிடம் கழித்து அலசவும்
ஹாட் ஆயில் மசாஜ் செய்யவும்
nizoral ஷாம்பூ போடவும்

இரண்டு வாரம் இதை வாரம் இரு முறை செய்யவும் .சரியாக விடில் மருத்துவரை பார்க்கவும்

என்றும் அன்புடன்,
கவிதா

Madam I am unable to type so clear in tamil. So I am giving this information in English.

If you have faith in Homoeopathy you can follow this medicine with out any fear.
One is Arnica Montana Hairoil and for washing the hair you will have Arnica Montana Shampoo
Another one Hairgro Gel. This is also a Homoepathic medicine for the hair which was affected by dandruff.
And you should seperate all the things used by her till the problem cleared. Clean and change everything including the pillow covers alsoafter every Hair wash. It will help you to clear the problem very soon.. You will get these medicines only Homoeopathy Shops .
Best of luck.
Anbudan K.poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நல்லஎண்ணெய்யை சூடு செய்து அதில் வேப்பபூவை போட்டு நன்கு சிவக்க விடவும். ஆறியவுடன் தலையில் தடவி 10 நிமிடம் கழித்து தலையை அலசி விடவும்

அன்பு தோழிகளே, நீண்ட நாட்களுக்குப் பிறகு அருசுவைக்கு வந்துள்ளேன். நாங்கள் இப்போது யு.எஸ் ல் உள்ளோம். என் மகளுக்கு இங்கு வந்து தலையில் பொடுகு வருகிறது. அதை தடுக்க என்ன செய்வது உதவுங்கள். இப்பொழுது இங்கே சம்மர். பதில் கூறுங்கள் பிளீஸ்.

அன்புடன்
மகேஸ்வரி

ஹாய் என் மகளுக்கு 9 வயது தலையில் இப்ப திடிரென்றூ பொடுகு வந்திருக்கு என்ன செய்வது எப்படி நீக்குவது ஹாட் ஆயில் மசாஜ் வெந்தயம் தேய்த்து பார்த்தேன் சளி பிடிச்சிக்குது எப்படி போக்குவது

மேலும் சில பதிவுகள்