பழைய செய்தித்தாள்களைக் கொண்டு அழகிய ஜூவல் பாக்ஸ் செய்வது எப்படி?

தேதி: February 9, 2010

3
Average: 3 (11 votes)

 

செய்தித்தாள்கள்
சாட் பேப்பர்
ஃபேப்பரிக் பெயிண்ட்
பெவிக்கால்
கம்
ப்ரஷ்
கத்தரிக்கோல்
ப்ளேடு
செயற்கை களிமண், எம்சீல்
சிறிய செயற்கை பூக்கள்
லேஸ்
பென்சில்

 

ஜூவல் பாக்ஸ் செய்ய மேலே கொடுத்துள்ள தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் பேப்பரில் உங்களுக்கு தேவையான அளவிற்கு எண்கோண வடிவத்தை வரைந்து தனியே வெட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த அளவைவிட 2 செ.மீ கூடுதலாக மற்றொரு எண்கோணத்தை வரைந்து அட்டையை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
சிறியதாக வெட்டி வைத்திருக்கும் எண்கோணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்து எடுத்துக் கொள்ளவும். மீதியுள்ள சாட் பேப்பரில் அகலத்தில் அளவு x உயரம் 6 செ.மீ அளவு இருக்குமாறு வரைந்து கொண்டு அந்தப் பகுதியை தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதேப் போல் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அகலத்தின் அளவை அளந்துக் கொண்டு உயரத்தின் அளவை மாற்றாமல் எல்லாவற்றிற்கும் அதே ஆறு செ.மீ அளவை வைத்து எட்டு அட்டைகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அடுத்து பெரியதாக இருக்கும் மற்றொரு எண்கோண அட்டையின் ஓவ்வொரு பக்கத்தின் அகலம் x உயரம் 2 செ.மீ இருக்குமாறு வரைந்து தனித்தனி துண்டுகளாக அட்டையை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு செய்தித்தாளை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு அதனை குச்சிப் போல் சுருட்டி, முடியும் இடத்தில் அந்த பக்கம் முழுவதும் கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதேப்போல் வேண்டுமளவிற்கு பேப்பரை குச்சிகளாக சுருட்டி எடுத்துக் கொள்ளவும்.
இந்த செய்தித்தாள் குச்சிகளை 4 செ.மீ அளவு துண்டுகளாக வெட்டி அதை 6 செ.மீ அளவிற்கு வெட்டி வைத்திருக்கும் அட்டையில் வைத்து கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதுப்போல் சிறிய எண்கோணத்தில் ஒட்டுவதற்காக வெட்டி வைத்திருக்கும் எட்டு அட்டைகளிலும் ஒட்டி காயவிட்டு எடுத்து கொள்ளவும்.
இப்பொழுது செய்தித்தாள் குச்சிகள் ஒட்டிய அட்டையின் அடியில் பெவிக்கால் தடவி சிறிய எண்கோண அட்டையின் ஓரத்தில் ஒட்டி விடவும். அடுத்த அட்டையை வைக்கும்போது முதலில் வைத்த அட்டையின் பக்கத்தில் வைத்து பெவிக்கால் தடவி ஒட்டி விடவும்.
இதேப் போல் சிறிய எண்கோண அட்டையை சுற்றிலும் வைத்துக் கொள்ளவும். செய்தித்தாள் குச்சிகளை ஆறு செ.மீ அளவுகளில் எட்டு துண்டுகள் வெட்டி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அட்டையையும் இணைத்த இடத்தில் இந்த குச்சிகளை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். இப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் தயார்.
அடுத்து ஜூவல் பாக்ஸின் மூடி செய்வதற்கு பெரிய எண்கோண அட்டையின் மேல் பக்கம் முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை அட்டையின் வடிவத்திற்கேற்றவாறு வெட்டி வரிசையாக ஒட்டி விடவும். அந்த அட்டையை சுற்றிலும் ஒட்டுவதற்காக 2 செ.மீ உயரத்தில் வெட்டி வைத்திருக்கும் அட்டை முழுவதும் செய்தித்தாள் குச்சிகளை ஒட்டிக் கொள்ளவும்.
பெரிய எண்கோண அட்டையின் ஒரத்தை சுற்றிலும் இந்த சிறிய அட்டையை வரிசையாக ஒட்டி விடவும். ஒட்டும்பொழுது செய்தித்தாள் குச்சிகள் வெளிப்பக்கம் தெரியும்படி ஒட்டிக் கொள்ளவும்.
இப்பொழுது ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம் மற்றும் மூடி தயார்.
அடுத்து ஜூவல் பாக்ஸின் அடிப்பாகம், மூடி இரண்டிலும் ப்ரவுன்நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிடவும்.
இப்பொழுது ரோஸ் செய்வதற்கு செயற்கை களிமண் அல்லது எம்சீலை பயன்படுத்தவும். செயற்கை களிமண்ணை மிகச்சிறிய நெல்லிக்காய் அளவாக எடுத்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். அதனை கைகளால் மெல்லிய வட்டமாக தட்டி அதன் ஒருமுனையை சுருட்டிக் கொள்ளவும். அதன் மேல் மற்றொரு முனையை வைக்கவும்.
அடுத்து இதழ்கள் செய்வதற்கு மேற்சொன்ன அளவுகளில் செயற்கை களிமண்ணை எடுத்து ரோஜாப்பூவின் இதழ்கள் போல் செய்துக் கொள்ளவும். இதுப்போல் இன்னும் இரண்டு இதழ்கள் செய்து எடுத்துக் கொண்டு ரோஜாபூவின் மொக்கு முடியும் இடத்தில் ஒரு இதழை வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது முதல் இதழின் நடுப்பகுதிக்கும் சற்று தள்ளி மற்றொரு இதழை வைக்கவும். இதுப்போல் மற்றொரு இதழையும் வைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது ரோஸ் தயார். உங்களுக்கு பிடித்தமான நிறங்களில் இன்னும் மூன்று ரோஸ் செய்துக் கொள்ளவும்.
ஜூவல் பாக்ஸ் மூடியின் மீது இந்த ரோஸ்களை வைத்து ஒட்டிக்கொள்ளவும். பிறகு ஒட்டிய ரோஸின் கீழ் காம்புகள் மற்றும் இலைகள் செய்து ஒட்டி விடவும்.
இப்போது ஜூவல் பாக்ஸ் அடிப்பாகத்தின் ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் சிறிய ரோஸ்ஸை பெவிக்கால் தடவி ஒட்டி விடவும். அடுத்து ஜூவல் பாக்ஸ் மூடியின் ஒரங்களை சுற்றிலும் தேவையான அளவிற்கு லேஸ்ஸை நறுக்கி எடுத்துக் கொண்டு அந்த மூடியின் மேல் ஓரங்களை சுற்றிலும் பெவிக்கால் தடவி ஒட்டிக் கொள்ளவும்.
செய்தித்தாள்களை கொண்டு செய்யக்கூடிய அழகிய ஜூவல் பாக்ஸ் தயார். இதனை உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மேலும் அழகுப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஜூவல் பாக்ஸ் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ரொம்ப அழகா இருக்கு செண்பகா அண்ணி. வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஹாய் செண்பகா....எப்படி இருக்கீங்க...?
எப்படி செண்பகா இப்படி எல்லாம் ஐடியா தோணுது...
நிஜமாவே அசத்திட்டீங்க ...ரொம்ப அழகாக இருக்கு.
வெறும் வார்த்தையால உங்களை பாராட்ட முடியல...
அவ்வளவு ஒரு வியப்பாகவும் ,சந்தோஷமாகவும் இருக்கு.
தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் பல..பல...
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

u r really creative Shenbaga...:thumbsup:

நவீனா மற்றும் நீங்கள் அனைவரும் நலம்தானே? அருமையான கிராஃப்ட் ஒர்க்.பேப்பர் பாக்ஸ் மாதிரி இல்லை,மர பாக்ஸ் மாதிரி இருக்கு.சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செண்பகா... நிஜமா சொல்றேன், நீங்க செய்யும் ஒவ்வொன்றும் அத்தனை அருமை. முக்கியமா உங்க creativity பாராட்டணும்!!! பார்த்தா பேப்பரில் செய்த மாதிரியே இல்லை. அத்தனை அழகு. அசத்திட்டீங்க. சூப்பர். நிச்சயம் முயற்சி செய்து அனுப்பறேன். :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு பாப்பி! நலமா? நவீனா நலமா? எல்லோரும் நினைத்தது போலவே நானும் உட்டன் பாக்ஸ் என்றே நினைத்தேன்! ரொம்ப சூப்பரா இருக்கு பாப்பி! பாராட்டுக்கள்!

பாராட்டு தெரிவித்துள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். மேடம் கடந்த ஒரு மாதமாக, இணையம் பக்கம் அதிகம் வருவதற்கு வாய்ப்பில்லாத இடத்தில் (வெளியூரில்) இருக்கின்ற காரணத்தால், அவரால் இங்கு நேரடியாக பதில் கொடுக்க இயலவில்லை. எனவே அவர் தெரிவிக்க விரும்பிய நன்றிகளை அவர் சார்பில் நான் தெரிவித்துள்ளேன். மீண்டும் நன்றிகள். :-)

ரொம்ப அழகா இருக்கு பார்க்கவே செய்யனும் போல தோணுது காகிததை பயன்ப்டுத்தி இப்ப்டிலாம் செய்ய முடியுமான்னு அச்த்தலா இருக்கு

பாக்ஸ் ரொம்ப அழகா இருக்கு பாப்பி. ரீசைக்கிள் செய்வதை உங்களிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். வீணாக்கும் பொருட்களில் அழகான உபயோகமான பொருட்கள்... பாராட்டுக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இந்த செய்திதாள்களை எப்படி சுற்றுவது எனக்கு பெரிதாக்தான் வருகிறது எப்ப்டி செய்வது என்று சொல்லுங்கள் தோழிகளே

ஹாய் செண்பகா, ஜ்வெல் பாக்ஸ் சூப்பரோ, சூப்பர்.
குட்டி குழந்தை நவீனாவையும் சமாளிச்சுண்டு இது
போல கை வேலை களும் செய்ய எப்படி முடிகிறது?
நீங்க ரொம்பவே சுறு,சுறுப்பு திலகம்தான். வேறு
எப்படி உங்கள் திறமையை பாராட்டரதுன்னு தெரியலையே?

ஹாய் செண்பகா,உங்கள் ரீசைக்கிளிங் கைவினைப் பொருட்கள் நன்றாக உள்ளது. இதுபோல் பலக் குறிப்புகள் கொடுத்தால் கோடைக்கால விடுமுறையில் குழந்தைகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.Save the Energy for the future generation

Save the Energy for the future generation

சகோதரி பர்வின் அவர்களுக்கு,

பேப்பர் சுற்றுதல் எளிதானதுதான். முதல் இரண்டு மூன்று சுற்றுகளை வட்டமாக சுற்றாமல், மெல்லிய மடிப்பாக கொண்டு ஆரம்பியுங்கள். அதாவது கால் சென்டிமீட்டருக்கும் குறைவான அகலத்தில் நெருக்கமாக பேப்பரை மடித்துக்கொண்டு, அதன்மேல் அப்படியே சுற்ற ஆரம்பிக்கவும். ஒவ்வொறு சுற்றையும் நெருக்கியே சுற்ற வேண்டும். முதலில் லேசாக சுற்றிவிட்டு கடைசியில் இறுக்கிக் கொள்ளலாம் என்று செய்யக்கூடாது. ஆரம்பம் முதலே இறுக்கமாக இருக்கவேண்டும்.

அப்படி இல்லையெனில் ஒரு மெல்லிய குச்சியில் (துடைப்பக் குச்சி) பேப்பரை ஒரு சுற்று இறுக்கமாக சுற்றி, அதன்மேல் தொடர்ச்சியாக சுற்றலாம். சுற்றி முடிந்தவுடன் குச்சியை வெளியில் எடுத்துவிடலாம். இது எளிமையாக இருக்கும்.

----

பாராட்டு தெரிவித்துள்ள மற்றவர்களுக்கும் நன்றி. பாப்பி செய்தவை எல்லாமே கிட்டத்திட்ட ஒரு வருடத்திற்கு முன்பு செய்தவை. இப்போதுதான் வெளியிட ஸ்லாட் கிடைத்துள்ளது. :-)

இந்த செய்முறையை பார்த்து திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள் செய்த பென் ஸ்டாண்ட்டின் படம்

<img src="files/pictures/pen stand- vanitha.jpg" alt="picture" />

சூப்பர்,அப்படியே பாப்பியும் நீயும் எனக்கு ஒரு பார்சல் பண்ணிடுங்களேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

செண்பகா மேடம் செய்துள்ள பேப்பர் ஜுவல் பாக்ஸ் பார்த்தேன் மிகவும் அருமை அதை பார்த்து திருமதி வனிதா வில்வராணீ செய்து காட்டீ ஊள்ளதை எப்படி பார்ப்பது சொல்லுங்கள் எனக்கு ஒபன் ஆகமாட்டுது
குட்டிரெயமா


பெண் வண்ணம் மேலே கண்டேன்!
பேப்பர் வண்ணம் அருகில் கண்டேன்!
என் மனம் ஏதோ சொல்ல
எண்ணம் ஏங்கியதே!

இதெல்லாம் பாக்க நேக்கு ஆயுசே போறாது போலிருக்கே!

{அட்மின் சார் கோச்சுண்டாலும் பரவா இல்லை.}

‘’ஓ புள்ளயாரப்பா நேக்கு 100 ம்கூம் 150 வருஷம் ஆயுசை கொடுப்பா”

இருங்கோ புள்ளையார் ஏதோ சொல்ரார்.

’என்ன கொடுக்க மாட்டியா. ஏன் ? அறுசுவைல இருக்கறவா ஆயுசு கொறஞ்சிடுமா”.

’’கணேசு நேக்கு வெச்சுட்டியே ஆப்பு’’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

vanakkam senbakam idhu endha madhiriyana chat papper ennudaiyadhu romba thinnaka irukku ungaludaiyadhu kanama theriyudhe .

Innovative idea, thnx for sharing such things

ஹாய், ஜுவல் பாக்ஸ் ரொம்ப அழகா இருக்குங்க

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta