புடவையில் ஸ்டோன்ஸ் ஒர்க் செய்வது எப்படி?

தேதி: February 12, 2010

5
Average: 4.1 (28 votes)

 

புடவை
ஸ்டோன்ஸ்
ஃபேப்பரிக் க்ளு
பென்சில்

 

டிசைன் செய்யப்போகும் புடவை மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். புடவையில் ஒட்டுவதாக இருந்தால் சின்ன ஸ்டோன்ஸ் தேர்ந்தெடுக்கவும். பெரிய ஸ்டோனாக இருந்தால் தைக்க வேண்டும்.
புடவையின் கீழ் பார்டரில் 3/4 அடி தூரம் விட்டு பேப்பரிக் க்ளு கொண்டு ஸ்டோன்ஸை வரிசையாக ஒட்டவும். படத்தில் உள்ளவாறு ஒரு வரிசை முதலில் ஒட்டவும்.
அடுத்த வரிசை ஒட்டும்பொழுது ஒரு ஸ்டோன் இடைவெளி விட்டு படத்தில் உள்ளது போல் தொடர்ச்சியாக கீழ் பார்டர் முழுவதும் ஒட்டவும். இந்த பார்டரை போல் மேல் முந்தி பக்கமும் 1 1/2 மீட்டர் அளவுக்கு ஸ்டோன்ஸை ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு முந்தியை அளந்து சரியாக பென்சிலால் மார்க் செய்து கொண்டு படத்தில் காட்டியுள்ள டிசைனை போல் ஸ்டோன்ஸை ஒட்டிக் கொள்ளவும்.
இப்போது ஸ்டோன் ஒர்க் செய்த அழகிய புடவை தயார்.
இப்புடவைக்கு பொருந்தும் விதத்தில் ப்ளவுஸிலும் ஸ்டோன்ஸ் ஒட்டவும்.
இதே போல் பட்டு புடவையில் செய்துள்ள ஸ்டோன் (பார்டரில்) மற்றும் ஸீக்குவன்ஸ் (முந்தியில்) ஒர்க். இன்னும் இது போல் பல விதங்களில் உங்களுக்கு விருப்பமான புடவையை நீங்களே வடிவமைக்கலாம். இந்த ஸ்டோன்ஸ் ஒர்க் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியவர் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

lathakumar

அன்புள்ள வனிதா அக்கா,
புடவை மிக அழகாக உள்ளது.இதன் மொத்த செலவு எவ்வளவு ஆகும்.

lathaganapathy

lathakumar

சூப்பர்.நீங்க ஆலின ஆல் பா.உங்க கிட்ட இருந்து நிறைய கத்துகிடனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனி சூப்பரா இருக்கு. ஈசியாவும் இருக்கு. ஆனா கைவசம் வொர்க் செய்ய சேலைதான் இல்லை :-(
எல்லாத்தையும் ஊருக்கு வரும்போது செய்து பார்த்திட வேண்டியதுதான்.
தொடரட்டும் உங்கள் கைவண்ணம்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

vanitha nenga oru univercity pa unga studentnu sollurathukku perumaiya irukku pa.kumaran ,yalini nalama?unga helth epti irukku.superpa

do fast mathi

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றிகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி லதா... செலவு நீங்கள் தேர்வு செய்யும் புடவையை பொருத்தது. எனக்கு இந்த புடவைக்கு மொத்தம் 1500 ஆனது (அனைத்தும் சேர்த்து). கை வேலை செய்த புடவைகள் வெளியே எடுத்தால் இதை விட அதிகமாக தான் ஆகும். அதே சமயம் நமக்கு பிடித்த மாதிரி நாமே செய்தால் அது விலைமதிப்பில்லாததாகவே தோன்றும். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி ஆசியா... :) நலமாக இருக்கீங்களா? ரொம்ப நாளா காணோமே... எங்கே இருக்கீங்க இப்போ?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி கவிசிவா... கண்டிப்பா இந்தியா வரும்போது செய்து பாருங்க. அடுத்து என்ன செய்து அனுப்பி இருக்கீங்க? பார்க்க ஆசையா இருக்கோம்.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி மதி... எனக்கு ஸ்டூடன்ட்'ஆ??!! பாவம் நீங்க. நேரம் கிடைக்கும்போது அவசியம் செய்து பார்த்து படம் அனுப்புங்க. இது தான் என் ஸ்டூடன்ட்'கு நான் கொடுக்கும் வீட்டு பாடம். ;) ஹிஹிஹீ. குழந்தைகளும் நானும் நலமே... நீங்க நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்ப இங்கு தான்.டிசம்பரில் லீவிற்கு அங்கு சென்ற போது காய்ச்சலுடன் சென்றேன்.இப்ப திரும்பி வந்தாச்சு.இன்னும் குணமாகலை.மாமாவிற்கு காலில் ஆபரேஷன் என்று வந்து ஒரு வருடம் இங்கு இருந்து உதவ வேண்டிய சூழ்நிலை.இன்னும் 2 மாதத்தில் அங்கு பயணம்.நலமாக இருக்கிறீர்களா?என்று கேட்டதால் இந்த பதில் .கிட்ட தட்ட 2 மாதமாக தென் தமிழகத்தை தாக்கியுள்ள காய்ச்சலால் அவதியுறுகிறேன்.என்னால் அதிகம் நடக்க முடியாததால் வீட்டிற்குள் மட்டும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் வனிதா, ஒவ்வொரு விஷயத்திலும் ரொம்ப பர்பெக்டா செஞ்சு பிரசண்ட் பண்றீங்க. ஆச்சரியமா இருக்கு. அதுவும் குட்டிப் பாப்பாவை வெச்சுக்கிட்டு நிச்சயம் இது சாதனைதான். மெஹந்தின்னாலே உங்க ஞாபகம் தான் வரும். இப்ப இந்த புடவை டிசைனிலும் அசத்தி இருக்கீங்க. உங்களுக்கு உடனடியா பதில் கொடுக்க முடியல. பசங்களாம் எப்படி இருக்காங்க? உங்களோட பங்களிப்பும், சுவாரஸ்யமான டாபிக்குகளும் ரொம்பவும் பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள். இமா மேடம், செபா மேடம், கவிசிவா, இளவரசி, நர்மதா, ஆசியான்னு எல்லாருமே இப்படி நிறைய விஷயங்களில் கலக்கறாங்க. கத்துக்க எத்தனை விஷயங்கள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.
வனிதா உங்களுக்கு என்னோட வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

ஆசியா... எனக்கு உங்களுக்கு உடல் நிலை சரி இல்லை என்றே தெரியாது... இங்கு பார்த்து தான் தெரிந்தது. இப்போ உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு? இன்னும் காய்ச்சல் இருக்கா? பட்டியில் உங்க தலைப்பு கலக்குது.... ;)
தேவா... மிக்க நன்றி. உங்களுக்கு வலி குறைந்ததா? எதனால் என்று தெரிந்ததா? நல்லா ஓய்வு எடுங்க.

இருவரும் தாமதமான என் பதிலுக்கு மன்னியுங்கள். எனக்கு கடந்த 3 நாட்களாக மீண்டும் காய்ச்சல். கூடவே லேப்டாப் சற்று பிரெச்சனை செய்து விட்டது. அதனால் வர முடியாமல் போனது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

திருமதி.வனிதாவிற்கு உங்கள் படைப்பு மிகவும் அருமை.இதே போல் stones மற்றும் mirror வைத்து stitch பண்ணுவது எப்படி என்றும் காண்பிக்கவும்.

மிக்க நன்றி சாந்தி :). தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உடல் நல குறைவால் அதிகம் வர முடியாமல் போனது. தையல் வேலைக்கு புடவை தயாராக இருக்கிறது, ஆனால் தேவையான பொருட்களை வாங்க தான் முடியவில்லை.;) வாங்கியதும் நிச்சயம் அந்த குறிப்பும் அறுசுவைக்கு அனுப்புகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hello vanitha stone work migaum nandraga irunthathu,nanum panniyirukken ippo interest illai, marupadium start seyyanum.

life is short make it sweet.

கீதாஜீ... மிக்க நன்றி. :) நீங்களும் செய்து அனுப்புங்க அறுசுவைக்கு நாங்க புதுசா கத்துக்குவோம்ல.... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

Nice vanitha.

''விடா முயற்ச்சி விஸ்வரூப வெற்றி''.