முளைகட்டியபயறு சுண்டல்

தேதி: February 12, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

முளைகட்டிய பயறு - அரை கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - ஒன்று
காரட் - ஒன்று
உப்பு - கால் தேக்கரண்டி


 

காலையில் பயறுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். இரவு தண்ணீரை வடித்து விட்டு மூடி வைத்து விடவும். காரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் பயறை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் மேலே தெளித்து விட்டு 20 நிமிடம் வேக வைக்கவும்.
வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அதில் வேக வைத்த பயிறை போட்டு உப்பு போட்டு 2 நிமிடங்கள் கிளறி விடவும்.
பிறகு தேங்காய் துருவல், காரட் துருவல் போட்டு கிளறவும். கிளறி ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைத்து விடவும்.
சத்தான முளைகட்டியபயறு சுண்டல் ரெடி. குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்துக் கொடுக்கலாம். செய்ய எளிமையான, சத்தான சுண்டல் இது.
இந்த செய்முறையை <b> திருமதி. மங்கம்மா </b> அவர்கள் நமக்காக இங்கே விளக்கியுள்ளார். சமையலில் 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்த இவரின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சுவையாய் இருக்கும். இதற்கு முன்பு வெளியான இவரது பல்வேறு குறிப்புகள் அறுசுவை நேயர்களின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றுள்ளது


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இது மிகவும் colourful ஆக அழகாக இருக்கிறது. மிகவும் சத்தானதும் கூட. உங்களது Recipes எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. நிறைய Recipes அனுப்புங்கள்.

நன்றி

மிகவும் அருமை.எப்பொதும் ஒரெ மாதிரி சாப்பிடுவதை விட இப்படி செய்து சாப்பிடலாம்.நன்றி

ரொம்ப சூப்பர்!! இப்பதான் இந்த சுண்டல் செய்து சாப்பிட்டுட்டு வரேன். நல்ல சத்துள்ள, சுவையான மாலை நேர சிற்றுண்டியாக இருந்தது. மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ