பட்டிமன்றம்- 16 "உணவில் ருசியானது சைவமா?அசைவமா?"

தோழிகளே பட்டிமன்றம் ஆரம்பித்திருக்குமோ என்று பார்த்து பார்த்து சோர்ந்து போனதால் முதல்முறையாக யாரும் அழைக்காமல் நானே ஆரம்பித்துள்ளேன்..... என்னை அழவைக்காமல் அனைவரும் சமத்தாக கலந்து கொள்ளவும்....

தலைப்பு:- திருமதி.ஆசியா உமர் அவர்கள் கொடுத்த தலைப்பு "உணவில் ருசியானது சைவமா?அசைவமா?"

சிலர் சைவம் என்றால் ஆஹா என்ன ருசி எவ்வளவு விலை கொடுத்தாலும் சாப்பிடலாம் என்பர்
சிலர் அசைவம் என்றால் அய்யோ என்ன ருசி உயிரி பாதி கொடுக்கவும் தயார் (எங்கோ படித்தது....ஹிஹி...)என்பர்.

ஆகவே அனைத்து தோழிகளும் கலந்து கொண்டு தங்கள் ருசியான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்போடு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.தலைப்பை கொடுத்த ஆசியா உமர் அவர்களுக்கு நன்றி மற்றும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறேன். கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் பல.

ஆரம்பித்ததில் ஏதாவது தவறு இருப்பின் மன்னிக்கவும்..கூறி விடுங்கள்.வேறு யாராயினும் விருப்பமிருந்தால் கூறிவிடவும்.முதல் முறையாக என்பதால் சிறிது தயக்கம். முதல் பதிவு வந்தால் தான் மனது நிம்மதி அடையும் என நினைக்கிறேன்..வாங்க தோழிகளே :))) வரவுக்காக காத்திருக்கிறேன்

with love

சுபத்ரா பட்டிமன்றத்துக்கு என் ஆதரவு எப்பவுமே உண்டு. தாங்களாக முன்வந்து பட்டிமன்றத்தை ஆரம்பித்ததற்கு மிக்க நன்றி.

என் வோட்டு அசைவத்திற்குத்தான். விரிவான பதிவு பின்னர். இப்பத்திக்கு அப்பீட்டு.
எல்லோருக்கும் அன்பர் தின வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அப்பாஆஆ....இப்ப தான் மனசு லேசாயிருக்கு....நன்றி கவிசிவா.
அசைவம் பக்கமா.....ஓகே சீக்கிரம் வாங்க....காத்திருக்கிறேன்.
மற்ற தோழிகளும் வாங்க...இல்லாட்டி பெயர் சொல்லி கூப்பிடுவேன்...ஆமாம்...லேட்டா வந்தா கடைசியாக தரும் விருந்து கட்ட்ட்ட்ட்.....ஓடி வாங்கப்பா...

with love

நானும் வந்துட்டேன்...நல்ல தலைப்பு. என்னோட வோட்டு சைவத்துக்குத்தான்.ஆறு சுவைகளையும் சைவத்திலதான் சுவை பார்க்க முடியும்.சைவ உணவு ஆரோக்கியமான உணவும் கூட.அசைவ உணவின் சுவையை சைவ உணவிலும் கொண்டு வரலாம்.அதனால நான் எப்பவும் சைவ உணவு பக்கந்தான் ஆதரவளிப்பேன்.இப்ப போறேன்.நாளை வருகிறேன்....

radharani

வாங்க ராதாராணி உங்கள் வருகைக்கு நன்றி.சைவம் பக்கமா...ஓகே
நீங்க சொல்கிறபடி சைவம் உணவு ஆரோக்கியமானது தான் மீண்டும் உங்களுக்காக காத்திருக்கிறேன்,விரைவில் வாங்க....

ஆறுசுவைகளை சைவத்தில் தான் சுவை பார்க்க முடியும் சொல்றாங்க அப்போ எதிரணி கவி உங்களை தான் என்ன சொல்ல போறீங்க.
வாங்க கவி வந்து உங்கள் அசைவத்தின் சுவையே எடுத்துவிடுங்க...

with love

என் ஓட்டும் சைவத்துக்கு தான்.ஆரோக்கியத்திற்கு கேடு தராத சத்தான விரைவில் ஜீரண மாக கூடிய உணவு சைவம்தான்.
சின்ன குழந்தைகள் முதல் தள்ளாத கிழம் வரை சாப்பிட ஏற்றது சைவ உணவு வகைகளே.

nanre sey;athuvum inre sey.

அன்பு சுபத்ரா... நல்ல ஒரு தலைப்போடு வந்திருக்கீங்க... மிக்க நன்றி. இத்தனை நாள் காணாம போனதுக்கு காரணம் சொல்லிடறேன்.... 1 வாரமா இன்டெர்னெட் பிரெச்சனை. கூடவே பாபு அண்ணா'வும் புது தளத்துக்கு பக்கங்களை மாற்ற வேண்டும் அதனால் பட்டிமன்றம், மற்ற புது தலைப்புகள் எல்லாம் சீக்கிரம் முடித்து சிறிது நாள் லீவ் குடுங்கன்னு சொன்னார்.... ;) அதான் சரி நாமும் ரெஸ்ட் எடுப்போம்'னு விட்டுட்டேன்.

இன்று தான் வர முடிந்தது. வந்து பட்டி தலைப்பு கண்டதும் ஓடி வந்துட்டேன். நம்ம விரும்பி சாப்பிடுறது என்னவோ அசைவம் தான்... சொன்னால் நம்ப மாட்டிங்க தினமும் ஒரு வகையாது அசைவம் வேணும் எனக்கு.;) ஆனா சுவையானதுன்னு கேட்டா நம்ம ஓட்டு சைவத்துக்கு தான். :D

கவிசிவா... அதிசயமா எதிரணி ஆயிட்டீங்களே....!!! :((

சுபத்ரா.... அநேகமாக இந்த தளத்தில் நீங்க துவங்கி இருக்கும் பட்டி தான் கடைசி பட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்... இத்தோடு புது தளத்தில் தான் பட்டி நடக்கும் போல் இருக்கிறது. அங்கும் இது போல் ஒரு கலக்கல் தலைப்போடு நீங்களே வந்து பட்டியை துவக்கணும்'னு கேட்டுக்கறேன். :) உண்மையில் நீங்க துவக்கி இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை... ஆச்சர்யம், சந்தோஷம் எல்லாம் கலந்து இருக்கு இப்போ.

சைவம்... சைவம்.. சைவம்... ஏன் சைவம்??? சைவம் சுவையான உணவுங்க. அசைவம் காரம் இல்லன்னா வாயில் வைக்கமுடியாது. ஆனா சைவம் காரம் இல்லன்னாலும் சரி, காரமா இருந்தாலும் சரி, இனிப்பா இருந்தாலும், புளிபா இருந்தாலும் சரி... சுவை தான். கசப்பான பாவக்காய் கூட சுவையான உணவு தானே... அது சைவம் தானே!!!

சைவத்தில் இருக்கும் 1000 கணக்கான வகைகளை அசைவத்தில் பார்க்க முடியுமா? முடியாதுங்க. அது மட்டும் இல்லாம சைவம் ஆரோகியமானது... வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரும் சாப்பிட கூடியது.

சைவம் சாப்பிடுறவங்க அசைவம் சாப்பிட மாட்டாங்க... ஆனா அசைவம் சாப்பிடுறவங்க சைவமும் சாப்பிடுவாங்க...!!! ஹஹஹா.... எப்புடி??!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபத்திரா நல்ல தலைப்பு கொடுத்து உள்ளீர்கள்.நானும் சைவம் பக்கம் தான் வாதாட வந்துள்ளேன்.
சைவ உணவுகளை சரியான முறைப்படி சமைத்தால், அசைவ உணவைவிட ருசி மிக்கதாக இருக்கும். தவிர உடலாரோக்கியத்திர்க்கு சிறந்ததும் சவ உணவுகளே என்றுசொல்லி விடைபெறுகின்றேன். மீண்டும் வருவேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நல்ல இன்ட்ரெஸ்டிங்கான தலைப்பு.... சாப்பாடு விஷயமாச்சே!!! ஹிஹிஹி....... என் ஓட்டும் "சைவத்துக்கு" தான்.....

சைவ உணவில் இல்லாத சத்துக்கள்னு எதையாவது சொல்ல முடியுமா...... புரதம்,இரும்பு, தாது, நார்ச்சத்து...... இப்படி சொல்லிட்டே போகலாம்...... பலவகை சைவ உணவை சமைக்காமல் நாம அப்படியே சாப்பிடலாம், ஆனால் எத்தனை அசைவ உணவை சமைக்காம சாப்பிட முடியும்? எதிரணியை பட்டியல் குடுக்க சொல்லுன்க பார்ப்போம்..... இப்போதைக்கு இது போதும்...... அடிக்கடி வரலேன்னாலும் நேரம் கிடைக்கும்போது வந்து என் வாதத்தை வைக்கிறேன்.....

அனேக அன்புடன்
ஜெயந்தி

அசைவ பிரியர்கள் பக்க உணவாக சைவ உணவையும் சேர்த்து கொள்வார்கள்.அந்த சைவ உணவு இருந்தால்தான் அசைவ உணவின் சுவை கூடும்.ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.உதாரணத்திற்கு பிரியாணிக்கு,அசைவ குழம்பு வகைகளுக்கு வெங்காய பச்சடி,புதினாதுவையல்,மல்லி துவையல், இவைகளை சேர்த்தால் தான் அதன் ருசி கூடுகிறது,ஆரோக்கியமும் கூடுகிறது.அசைவத்துல தேடி,தேடி,சமைச்சாலும் முன்று சுவைகளுக்கு மேல் சமைக்க முடியாது. சைவத்திலே எல்லா சுவையும் டேஸ்ட் பண்ணலாம்.கண்டிப்பா சைவம்தான் சுவையில சிறந்ததுனு என்னோட வாதத்தை முடித்து கொள்கிறேன்.

radharani

மேலும் சில பதிவுகள்