ஹாய் தோழிகளே எனக்கு பரு தொல்லை அதிகமாக இருந்தது,நான் தற்செயலாக மாலில் நியூட்ரோஜினா சோப்பை வாங்கி உபயோகித்தேன் 2 வாரங்களில் சரியானது.1 நாளைக்கு 2 முறை உபயோகிக்க வேண்டும்.மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.
பின்குறிப்பு:
சிலரது சருமத்தை டிரை ஆக்கிவிட்டால் சிறிது மாய்ச்சுரைசர் பூசிகொள்ளுங்கள்,இந்தசோப்பை காலையிலும் இரவு தூங்குவதற்கு முன்பும் உபயோகித்தால் பலனளிக்கும்
hai malli akka
lathakumar
அன்புள்ள மல்லி அக்கா,
நலமா எனக்கு கண்ணத்தில் அதிகமாக பருக்கள் உள்ளது அந்த இடம் கருப்பாக தளிம்பு விழுந்துவிட்டது. அதற்கு மாலில் நியூட்ரோஜினா சோப்பு சரியாக இருக்குமா?இது தமிழ்நாட்டில் கிடைக்குமா? பதில் கூருங்கள் pls
lathakumar
ஹாய் லதா
ஹலோ லதா தமிழ்நாட்டில் கிடைக்குமான்னு தெரியாது.நான் வெளிநாட்டிற்கு வந்த பிறகு தான் உபயோகித்தேன்.கிடைக்கும்னு தான் நினைக்கிறேன் பெரிய கடைகளில் கேட்டு பாருங்கள்,பருக்களால் ஏற்பட்ட தழும்புகளுக்கு அருசுவையில் நிறைய குறிப்புகள் உள்ளதே,இல்லையெனில் நோமார்க்ஸ் கிரீம் உபயோகிங்கள்(NO MARKS)or தினமும் ஆலிவ் ஆயில் கருமையான இடங்களில் நன்றாக மசாஜ் செய்து 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள் ஆனால் 1 மாதமாவது விடாமல் தேய்க்க வேண்டும் அப்பொழுது தான் சரியாகும் இல்லையெனில் சந்தனத்தையும் மஞ்சளையும் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவினால் சரியாகிவிடும்