சாய் கீதாலக்ஷ்மி மேம்

டியர் கீதா எனக்கு வெயிலினால் முகம் கருமை அடைந்துள்ளது.அதற்கு கடலை மாவுடன் பால்,எலுமிச்சை சாறு சேர்த்து முகத்திற்கு போடுவது நல்லதா?அல்லது கடலை மாவுடன் தயிர்,எலுமிச்சை போடுவது நல்லதா?எனக்கு கம்பைனேஷன் சருமம் எனக்கு முகத்தில் பரு இருக்கிறது தயிர் பேக் போடலாமா?

மேலும் கடலை மாவும்,தயிர் கலந்து தேய்ப்பதற்கும்,கடலை மாவு,பால் கலந்து தடவுவதற்கும் என்ன வித்தியாசம்,கழுத்து கருமைக்கு முந்தைய குறிப்பில் கடலை மாவு+தயிர் கலந்து தடவ சொல்லியிருக்கிறீர்கள்,அதற்கு பதில் கடலை மாவு+பால் கலந்து தடவலாமா

கீதா திரும்பவும் உங்களை தொல்லை கொடுப்பதாக நினைத்துவிட வேண்டாம்,உங்க பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சதுக்கு பிறகு நீங்க பிரீயாக இருக்கும் போது பதில் கொடுங்கள்

பால், தயிர் இரண்டும் கருமையை போக்கும்.வறண்ட சருமத்திற்க்கு தயிர் நல்லது.
தர்பூசணியின் சதை பகுதியை முகத்தில் தடவினாலும் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கும்.

வெள்ளரிகாயை அரைத்து ஒரு tablespoon பாலில் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவவும். தினமும் 2 முறை செய்யவும்.

உருளைகிழங்கு சாறு எடுத்து அதை தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

aloe vera சாறும் எலுமிச்சை சாறும் கலந்து தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.உங்களுக்கு பருக்கள் இருப்பதால் எலுமிச்சை சாறு எரிச்சலை தரலாம்.அதனால் எலுமிச்சை சாறுக்கு பதில் விட்டமின் E எண்ணெய் கலந்து கொள்ளலாம்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்