தாய்பால் சுரப்பதை நிறுத்துவது எப்படி?

என் மகன் தாய்பால் குடிப்பதை நிறுத்தி 2 மாதம் ஆகின்றது.எவ்வாறு
தாய்பால் சுரப்பதை நிறுத்துவது ?

குளுமையான கேபேஜ் இலையை (cold cabbage leaves) இருபுறமும் முழுவதும் நன்கு கவர் ஆகும்படி வைத்து, இருபது நிமிடம் கழித்து எடுக்கவும். இதுபோல், ஒரு நாளைக்கு 4/5 முறை வைக்கவும். பால் சுரப்பது நிற்கும் வரை வைக்கவும். இடையிடையே சுரந்திருக்கும் பாலை கம்ப்ரஸ் பண்ணி வெளியேற்றிவிடவும். தைரியமாக முயற்சிக்கவும், நிச்சயம் பலன் கிடைக்கும்.

எனக்குத் தெரிந்த தோழி ஒருவருக்கு, இந்தமாதிரி செய்து இப்போது பால் சுரப்பது நின்றுவிட்டது. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு அவர் என்னிடம் கேட்டபொழுது, எங்கோ படித்த ஞாபகம் இருந்ததைச் சொன்னேன். அவரும் முயற்சித்துப் பார்த்து நான்கு நாட்களுக்குள் நின்றுவிட்டதாகச் சொல்லி சந்தோசப்பட்டார், நீங்களும் முயற்சித்துப் பார்க்கவும். எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ALL THE BEST.

மல்லிகை மலர்களை மார்பில் வைத்து கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.மலர் மருத்துவத்தில் இதை கூறுகிறார்கள்.

radharani

முட்டைகோஸ் இதழை 2 நாள் தொடர்ந்து 4மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றி புதிதாய் வைத்தாலே பால் சுரப்பது நின்று விடும்

மேலும் சில பதிவுகள்